தமிழின் சிறப்பு

தமிழின் சிறப்புகள் கவிதை

தமிழின் சிறப்பு

தமிழ் மொழி
-----------------------
அழகான மொழி
என்அன்பு தாய்மொழி//
இயற்கையாக தோன்றினாய்
கடலாகவும் மழையாகவும்// 
ஆய்தஎழுத்தை ஆயுதமாய்
கொண்ட தமிழ்மொழியே//
தேன்அமுது கற்கண்டு கண்ட தமிழ்மொழியே//
அள்ளிப்பருக இப்பிறவி
ஒன்று போதுமா//
உயிரும் மெய்யும்
கலந்து வாழும்மொழி//
எட்டுத்திக்கும் பரவிக்கிடக்கும்
பொன்மொழி தமிழ்மொழி//
உளியில் செதுக்கினாலும்
வளியை தாங்கும்மொழி//
உணர்ச்சியின் உச்சமொழி உள்ளத்தின் உயிர்மொழி//
தமிழின் பெருமைகளை
ஏணிப்போல் ஏற்றிவிடும்//
உயிர்மெய் எழுத்து
உடையமொழி 
தேன்மொழி//
எழுத்தழகு சொல்லழகு
வரியழகு இணைந்தமொழி//
பலசாதி மதஇனத்தவர்
கண்டறிந்த தமிழ்மொழி//
எட்டுதிசைகளிலும் பரப்பிய உயர்ந்தமொழி
தமிழ்மொழி//
பலநாடுகளில் கலந்தமொழி சிறந்தமொழி தமிழ்மொழி//
பலவெற்றிகளை அடைந்தமொழி
உயிர்நிலைகளை
உடையமொழி//
சுதந்திர உணர்வை
ஊட்டும் மொழி//
பாரத தேசத்தை
பாராட்டும் மொழி//
அறம் வளர்த்த
அறிவு மொழி//
மாதர்தம்மை 
காக்கும்  உயர்ந்த மொழி//
கங்கை யமுனை
கண்ட சிறந்தமொழி//
கல்வி ஞானம் அறிந்த
உன்னதமொழி//
கற்புமாந்தரை சிறப்பாக
காக்கும் உயர்ந்தமொழி//
தீயவைகளை அழிக்கும்
தலைசிறந்த தமிழ்மொழி//

த.விஜயராணி
பொன்னேரி
திருவள்ளுர் மாவட்டம்.