தேசத் தந்தை

காந்தி ஜெயந்தி கவிதை

தேசத் தந்தை

தேசத் தந்தை...

பாரதத்தின் ஒளிவிளக்கே/
பார் புகழும் மாணிக்கமே/
உங்களால்
சுதந்திர காற்றை
சுவாசிக்கிறோம்
நாங்கள்/

வெள்ளையனே வெளியேறு. ..என்று
அன்னியரை வெளியேற்றியவர் நீங்கள்/

தியாகம் பல செய்து,
எளிமை வாழ்வு வாழ்ந்து,
வயதான போதும் சுறுசுறுப்பாக சுற்றி வந்து ...வாழ்வை எப்படி 
வாழ்வது என்று வாழ்ந்துக்காட்டியவர் நீங்கள்

அகிம்சை வழியில்
அன்பை போதித்த
உத்தமர் காந்தியின்
புகழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்...

நி.விஷ்ணு
சென்னை.