சுதந்திர காற்றை சுவாசிப்போம்...21

சுதந்திர தின கவிதை

சுதந்திர காற்றை சுவாசிப்போம்...21

சுதந்திர காற்றை சுவாசிப்போம்..

பாட்டன் பூட்டன் சேர்ந்து இன்னல் /
கண்டு போராடி வாங்கிய சுதந்திரம்/
மகத்துவம் புரிந்து பேணிக்காப்போம் அதை/
பிஞ்சுகளின் தலையில் கல்வியை சுமையாய்/
நாளும்சுமக்க செய்வதை தவிர்ப்போம்/
ஆதரவற்ற முதியோர் அற்ற நாடாக்குவோம்/
கல்விச் சாலைகளே கல்வி கற்க மட்டுமே/
கபடதாரிகளின் தண்டனை கடுமை ஆக்குவோம்/
பெண் பாதுகாப்பை பேணிக் காப்போம்/
விவசாயம் விவசாயி பெருமை உணர்வோம்/
விளைநிலங்கள் கான்கிரீட் காடுகளாவதை தடுப்போம்/
நெகிழி குப்பைகளால் பூமியை மலடாக்காமல்/
ஆறுகளில் இரசாயனக் கழிவுகள் சேர்க்காமல்/
வரும் சந்ததிக்கு  சுதந்திர காற்றைப்/ பரிசளிப்போம் முன்னோரின் மகிமை கொண்டு...

சு.வித்யாகார்த்திக்
பழநி.