கன்னியாகுமரி சிறப்புகள்

கன்னியாகுமரி சிறப்புகள் கவிதை

கன்னியாகுமரி சிறப்புகள்

கன்னியாகுமரியும் சிறப்பும்
*************************

 மூன்று கடல்களும்
கூடும் இடமாகும்//
தமிழின் சிறப்புகள்
பெருமை வாய்ந்தது//
கதிரவன் உதிக்கின்ற
காலையின் அழகும்//
அந்தி சாய்கின்ற 
வேளையில் ஆதவனழகு//
தமிழை வளர்ப்பதால்
தமிழ்மொழியின் அழகும்//
வேணாட்டார் வீரமும்
வீரம்வளர்த்த கலைகளும்//
கடலிலே திருவள்ளுவர்
சிலைவடிவம் தனியழகு//
கடலில் வாழும்
உயிரினங்கள் சிறப்பு//
வானுயர பனைகளும்
வளமான தென்னைகளும்//
வரப்புகளோடு வயல்களும்
வாழ்வாதாரத்தின் சிறப்பு//
மூன்று கடல்களின்
முழங்கும் அலைகளுமே//
முத்தமிட்டு கொள்ளுமே
முதற்கண் சிறப்பு//
ஆழ்கடல் ஓடியே 
வலைவீசி தேடியே//
மீன்கள் பிடிப்பதும்
மிகையான சிறப்பு//
முக்கனிகள் விளைந்து
மும்மாரி பொழிந்து//
முப்போகம் விளைச்சலால்
முத்திரை பதிக்குமே//
இயற்றமிழ்  இசைத்தமிழ் நாடகத்தமிழ்
முத்தமிழுமே//
மிளிர்கொண்டு
நடக்குமே 
முத்தான சிறப்பு//
தமிழை வளர்த்த
சான்றோர்களும் சிறந்தனரே//
தீச்சுடர் சூரியனை
தோழமையுடன் தழுவும்//
மலைகளால் நிழலும்
மழையை பெறுவதும்//
வளங்கள் நிறைந்த
கன்னியாகுமரியின்
சிறப்பு//
கடலில் சென்றுவர
திசைகாட்டும் கருவியுண்டு//
கன்னியாகுமரி கரையினில் இருக்கும் பகவதியம்மன்//
சிறப்புகள் பலவாகிலும்
வளங்கள் அழிகின்றது//
இனிமேலாவது காப்போம் 
கன்னியாகுமரியின்
வளங்களை//
பள்ளிகளும் கல்லூரிகளும்
பலவும் இருக்கின்றது//
பார்க்க அழகும்
கண்களை கவரும்//

- த.விஜயராணி
பொன்னேரி
திருவள்ளுர் மாவட்டம்.