சுதந்திர காற்று சுவாசிப்போம்... 19

சுதந்திர தின கவிதைகள்

சுதந்திர காற்று சுவாசிப்போம்... 19

சுதந்திர காற்றை சுவாசிப்போம்

அடிமையென ஆன நம் மக்களை மீட்க அன்பு எனும் ஆயுதத்தை அறிவுடன் இணைத்து ஆற்றலுடன் செலுத்தி செந்தூர இரத்தம் பல சிந்தி சில்லென்று சுதந்திரகாற்றை சுவாசிக்கவைத்த சிறந்த தலைவர்களை சிரமம்தாழ்த்தி வணங்கிடுவோம்

கலங்கியிருந்த நெஞ்சத்தில் கவிதைவழியில் கலவரம் நடத்திய கவிஞர்களை கடந்துவிட்டோம் பயத்தால் பதைபதைத்திருந்த மக்களுக்குப் பாடலின்மூலம் பகுத்தறிவு தந்த படைப்பாளர்களைப் பாரில் பன்மடங்கு போற்றிடுவோம்

வாழ்வீசும் வீரத்தை வார்த்தையில் சேர்ந்து வைராக்கியத்தை விதைத்தகர்களை வணங்கிடுவோம்

பெண் என்றால் பிழையில்லை பெண் இல்லையென்றால் புவியில்லை என புதுயுகம் படைத்த புதையல்களைப் போற்றிடுவோம்

தொப்புல்கொடி உறவு போல்
தேசியக்கொடி உயிர் என
உயிர்போகும்தருவாயிலும் உதிரத்தோடு காத்துநின்ற 
உன்னத தலைவர்களுக்கு என் வீரவணக்கம்

இது மட்டும் சுதந்திரம்  இல்லை இன்னும்  சுதந்திரம் வேண்டும் பெண் படிப்பும் பாதுகாப்பும் வேண்டும் 
பசி பட்டினி பஞ்சம் எல்லாம் இல்லாத சமுதாயம் தோன்றும்  
இந்த வரிகள் வாழ்க்கை ஆகும்போது சுதந்திர காற்றை சுகமாக சுவாசிப்போம்...

ஜமுனா ஸ்ரீ.வீ.க
திருப்பூர்.