சுதந்திர காற்றை சுவாசிப்போம்..20

சுதந்திர தின கவிதை

சுதந்திர காற்றை சுவாசிப்போம்..20

சுதந்திரக் காற்றைச் சுவாசிப்போம் 
**********************

இன்னுயிரைத் 
தந்தனர் 
இத்தேசத்தைக் 
காத்திட //

இயன்றவரைப் 
போராடினர் 
அந்நியரை 
விரட்டிட //

தன்னலம் 
துறந்தனர் 
தன்னிறைவு 
பெற்றிட //

இன்னலைத் 
தீர்த்தனர் 
அடிமைத்தனம் 
விலகிட //

வியர்வையுடன்
இரத்தமும் 
சிந்தினர் 
நாட்டிற்காக //

விந்தை 
மனிதர்களை 
இழந்தோம் 
விடுதலைக்காக //

விண்ணைப் 
பிளந்தது 
முழக்கம் 
சுதந்திரத்திற்காக //

மண்ணை 
கவ்வினர் 
அந்நியர்கள் 
அகிம்சைக்காக //

தேசம் 
எங்கிலும் 
நேசம் 
கண்டோம் //

பல்லின 
மக்களோடு 
பாசம் 
கொண்டோம் //

பாரினில் 
புகழைத் 
தேடித் 
தந்தோம் //

அடிமைத்தனம் 
உடைத்து 
சுதந்திரம் 
பெற்றோம் //

சுதந்திரக் 
காற்றைச் 
சுவாசிப்போம் 
இனிதே //

அதனைக் 
காத்திடும் 
கடமை 
நமதே //

தாய்நாட்டை 
நாம் 
நாளும் 
நேசிப்போம் //

தாயின் 
மணிக்கொடிக்கு 
வணக்கம் 
செலுத்துவோம்.... //

கவிஞர்.வங்கனூர்.த.சீனிவாசன், திருத்தணி.