காமராசர்

காமராசர்

வாழ்ந்தவர் வாழ்க்கையெல்லாம்
வரலாறாய் ஆனதில்லை,
வரலாறாகி போனவரெல்லம்
தனக்காய் வாழ்ந்ததில்லை.

அரசியலை தெரியாமல்
அரசியவாதியாய் ஆனவர் நீங்கள்.
அதனால்தான்
உங்களை அரசியல்வாதிகள் வரிசையில்
வைக்காமல் நேர்மையாளர்கள்  
வரிசையில் வைத்திருக்கிறோம்.

ஒருநாள் கூட 
நீங்கள் உங்களுக்காக  சிந்தித்ததே இல்லை,
அதனால்தான் உங்களை 
கர்மவீரர் என்கிறோம். 

படிக்காமல் போனாலும்
மேதையாய் திகழ்ந்தவர் நீங்கள்,
அதனால்தான்
உங்களை படிக்காத மேதை என்று அழைக்கிறோம்.

படித்த அரசியல்வாதிகளை விட, 
பண்பட்ட அறிவாளி நீங்கள்,  
அதனால்தானே உங்களை கிங்மேக்கர் 
என்று கொண்டாடினார்கள்.

எனக்கு கிடைக்காத எல்லாமே
என் பிள்ளைக்கு கிடைக்கவேண்டும்
என நினைத்தால் அவனே நல்ல தகப்பன்.

எனக்கு கிடைக்காத எல்லாமே 
என் மக்களுக்கு கிடைக்கவேண்டும் என நினைத்தால்
அவனே நல்ல தலைவன்.

எல்லோரும் படிக்கவேண்டும் 
என்று கல்வியை கொடுத்தீர்கள்.

கவ்வியைவிட, பசியே பெரிது என்று 
பள்ளிக்கு வராத எளியோர் பிள்ளைகளும் கற்கவேண்டும்
எனும் வைராக்கியத்தில் பள்ளிக்கூடத்திலேயே
பசிக்கு உணவும் கொடுத்தீர்கள்.

மூன்று முறை
தமிழகத்தின் முதல்வராய் இருந்து
நீங்கள் சேர்த்து வைத்திருந்த பணம்
ரூபாய் முன்னூறு மட்டுமே.

இரண்டு முறை
இந்திய பிரதமரையே
தீர்மானித்த நீங்கள்
சேர்த்துவைத்த சொத்து
நான்கு கதர் ஆடை மட்டுமே.

அரசரயே உருவாக்கும்
அதிகார பீடத்தில் இருந்தபோதும்,
வாழ்ந்த வரையில் 
வாடகை வீடுதான்.

உலகத்தின் அதிசயம்
ஏழு என்று தீர்மானித்தவர்களே
கொஞ்சம் இந்தப்பக்கம் பாருங்கள்
எட்டாம் அதிசயமாம்
எங்கள் கருப்பு காந்தி காமராசரை..!

கூ, சுரேஷ்வரன்