மனிதருள் மாணிக்கம் அம்பேத்கர் 056

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

மனிதருள் மாணிக்கம் அம்பேத்கர் 056

மனிதருள்  மாணிக்கம் அம்பேத்கர்...!

புனிதமான பூமியிலே புகழைப் பெற்றுப் பொறுப்புள்ள தலைவராகப்  புவியில் வாழ்ந்தவர்...!

மனிதநேயம் மிக்கவராய் மனதில் நின்று மனமகிழ்வை
கண்டிட்டார் மனிதரிடையே...!

கனிவுடனே அனைவரிடமும் அன்பை பொழிந்து கருத்தூன்றி உழைத்திட்டார் கடமை கொண்டே...!

இந்தியாவின் ஈடில்லா இமயம் ஆகி இந்தியர்கள் உயர்வுக்கே ஈகம் எண்ணி...!

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகி, சட்டங்களை கட்டமைத்த மூலவர்...!  

சாதி,மத பாகுபாடு ஏதுமின்றிச்  சட்டத்தின் முன் அனைவரும் சமமென்றுரைத்து பொதுவுடமைக்கு வித்திட்ட வித்தகர்...!

தீண்டாமையை வேரோடு அழித்து,  ஒதுக்கப்பட்ட சமூகத்தை  உயர்த்தி, பொதுநலம் பேணிய பொக்கிஷம்...!

அரசியல்,வரலாறு,  தத்துவம்,சட்டம் என பல்துறை நிபுணத்துவம் பெற்று சிறந்த எழுத்தாளராகவும் புரட்சியாளராகவும் திகழ்ந்தவர்...!

ஒழுக்கம்,அறிவுடனே சுயமரியாதையே மனிதனின் சிறந்த அடையாளமென கர்ஜித்தவர்...! 

பெண்களும் அடிப்படை உரிமைகளையும்,  சொத்துரிமையும் பெற சட்டம் இயற்றியவர்...!

அந்நியராய் எவரையும் அகத்தில் எண்ணாது அரவணைக்கும் பண்பாலே  அமைதி காத்தவர்...!

 பாரத ரத்னா விருது பெற்று இந்தியாவின் எழுச்சிக் காண இணையற்ற தொண்டாலே இதயமானவர்...!

சரித்திரத்தில் பலருக்கு இடமிருந்தாலும் சாதனை நாயகனாய் தனியிடம் பெற்றவர்...!

மனிதருலே  மாணிக்கமாக வாழ்ந்து மகத்தான சாதனைகளை  மண்ணில் செய்த மாமேதை அம்பேத்கர்...!
 
- முனைவர் ம.ப.சாந்தி சங்கரி, 
ஆதித்யா வித்யாஷ்ரம், புதுச்சேரி.