தமிழர்களின் பெருமை...! 022

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழர்களின் பெருமை...! 022

தமிழர்களின் பெருமை...

தமிழர்களின் பெருமையும், தமிழின் பெருமையும் பிரிக்க முடியாத ஒன்றாகும். கலைகள், கலாச்சாரம், பாரம்பரிய ம், கட்டிடங்கள் ,என்ற பல பெருமைகள் உண்டு. பல்லாண்டு காலமாக இச்சிறப்புகள் பின்பற்றப்படுகிறது. அவற்றில் சிலவற்றை கட்டுரையில் காண்போம்.
    வீர விளையாட்டுகள்-
மல்யுத்தம், கபடி சிலம்பாட்டம், உறியடித்தல் ,வழுக்கு மரம் ஏறுதல், மஞ்சுவிரட்டு மஞ்சுவிரட்டு என்பது வீட்டில் உள்ள மாடுகளை அவிழ்த்து அனைவரும் பிடிக்கும்படியாக விடுவார்கள் .இது திருவிழா முடிந்த பிறகு செய்யக்கூடிய வீர விளையாட்டு ஆகும் .தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகிறது.
   
  கட்டிடக்கலைகள்
கும்பகோணம் கோவில் நகரங்களில் உள்ள சிலைகள், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், மணிமண்டபம், திருவாரூர் தேர், கல்லணை, அணைக்கட்டின் அமைப்பு முருகனின் அறுபடை கோவில்களில் மலைக் கோவில்கள் சுவாமிமலை, மருதமலை, பழனி மலை கோவில்கள், மலைக்கோவில்களில் சிறப்புமிக்கதாகும் திருச்சி மலைக்கோட்டை, விராலிமலை மலைக்கோட்டை, சிக்கலில் உள்ள கோவில்கள், கடற்கரை கோவில்கள் திருச்செந்தூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி கோவில், விவேகானந்தர் பாறை கோவில், காஞ்சி காமாட்சி கோவில் இவை சிறப்புமிக்க கட்டடங்கள் ஆகும்.

     தமிழக ஊர்களின் சிறப்பு

  தஞ்சை நெல் விளையும் பூமி, ஊத்துக்குளி வெண்ணை, ஈரோடு போர்வை, மஞ்சள், திருநெல்வேலி அல்வா, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு ,திருச்சி மலைக்கோட்டை, மதுரை மல்லிகை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கும்பகோணம் வெற்றிலை, பத்தமடை பாய் இவை தமிழின் பெருமைக்கு பெருமை சேர்ப்பவை ஆகும்
       இலக்கியங்கள் காப்பியங்கள் நூல்கள்

    திருக்குறள், மணிமேகலை, சிலப்பதிகாரம் , சீவக சிந்தாமணி, பொன்னியின் செல்வன், ஆத்திச்சூடி, பாரதியார் பாடல்கள், விவேகானந்தர் சொற்கள், பாவேந்தர்  கவிதைகள், இவை தமிழுக்கு பெருமை சேர்ப்பவை 

      உடைகள்

தமிழக ஆண்கள் அணியும் வேஷ்டி தமிழர்களின் பெருமையை பறைசாற்றுகிறது. பெண்கள் அணியும் புடவைகளான சிலுக்குவார்பட்டி சுங்கடி புடவை, செட்டிநாடு காட்டன், திருபுவனம் பட்டு, காஞ்சிபுரம் பட்டு, போன்றவை சிறப்பானதாகும்

    செட்டிநாடு வீடுகள்
செட்டிநாடு என்றாலே பெருமை குறியது செட்டிநாடு வீடுகள் அமைப்பு, இன்றும் பெருமைக்குரிய முகப்பு தோற்றம் , மிகப்பெரிய ஜன்னல், கதவுகள், முற்றும், அதிக அறைகள் கொண்டவையாகும். பர்மா தேக்கினால் அதிகமாக அமைய பெற்றிருக்கும் .உணவு பரிமாறுவதில் செட்டிநாடு உணவுகள் மிகச் சிறப்பு மிக்கவை. திருமணத்தில் பரிமாறப்படும் உணவுகள் மிக சிறப்பு மிக்கது. இட்லி பொங்கல் தோசை சாம்பார் வகைகள் பல வகையான கூட்டுகள் சிறப்பானதாக உள்ளது.
        வீர விளையாட்டுகள் சிறப்பானவை சிலம்பாட்ட வகைகள் சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, போன்ற எண்ணற்ற வரிசை முறைகள் உள்ளன.                  

 முறை சீர்
திருமணமான பெண்களுக்கு பொங்கல் சீர்வரிசை தாய் வீட்டில் இருந்து வழங்குவது சிறப்பாக சிறப்பானதாகும். மாமன் சீர்வரிசை குழந்தை பிறந்தது  முதல் காதுகுத்து, திருமணம் வரை தாய்மாமன் கூடியிருந்து செய்வது தமிழரின் பெருமை.

      திருவிழாக்கள்

சித்திரை மாதம் மீனாட்சி
அம்மன் கோவில் திருவிழா, திருவாரூர் தேர் ,திருச்செந்தூர் சூரசம்ஹாரம் ,பழனி தைப்பூசம் ,இவை மட்டுமின்றி ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் திருவிழாக்களில் சிறப்பு மிக்கவையாக உள்ளது,.
திருவிழாக்களில் விளையாடப்படும் விளையாட்டுக்கள் உறியடித்தல், கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் ,கும்மி, கோலாட்டம் போன்றவை சிறப்பு மிக்கவை திருவிழா முடிந்தவுடன் இளம்பெண்கள் முறைமாமன் மீது மஞ்சள் நீராட்டு விளையாடுவது 
சிறப்புமிக்கது.

  முடிவுரை
இத்தகைய தமிழையும்  ,தமிழரின்  பாரம்பரிய கலைகளை யும்,போற்றி காப்பது நமது கடமை ஆகும்.

- மை. மதலைமேரி
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
நரசிம்மநாயக்கன்பாளையம்,
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம்,
கோவை- 31