விதை...!

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதைப் போட்டி

விதை...!

விதை...

ஐப்பசி மாதம் காலை பொழுது  சரண கோஷம் ரேடியோவில்   கேட்டவாறு வாசலில் கோலம் போட்டு முடித்தாள் யாழினி.

        கடிகாரத்தை பார்த்தாள் மணி 5.30  .இன்னும் ஒரு மணிநேரத்தில் சமையலை முடித்தால் தான் நரேனை எழுப்பி ஸ்கூலுக்கு கிளப்பி விட சரியாக இருக்கும்.யாழினி  காப்பி ரெடியாம்மா  என்று கேட்டவாறே மாமனார் ஹாலில் வந்து சோஃபாவில் அமர்ந்தார்.ஆவி பறக்க பில்டர் காபியோடு வந்தாள் யாழினி.
      காபியை பருகியவாறே சரண் வாக்கிங் போய்ட்டு வந்தாச்சா  என்றார்.
கேட்  திறக்கும் ஓசை கேட்கவே அவங்க வந்துட்டாங்க என்றவாறே  கதவை திறந்தாள்.

சரணுக்கு ஸ்டாங்கா  டீ சாப்பிடுவது வழக்கம்.வாகிங் போய்விட்டு நாளிதழ் படித்தவாறே டீ சாப்பிட்டு முடித்தான்.
       சமையலறையில்  வாசம் மூக்கை துளைக்க சமையலறை பக்கம் வந்தான்.இன்னைக்கு என்ன ஸ்பெஷல்  வாசனை சும்மா தூக்குதே  என்றான் யாழினியை பார்த்து.
      சிரித்துக் கொண்டே டைனிங் டேபிளில்  எல்லாம் எடுத்து வைத்தாள்.என்னங்க  இன்னைக்கு சாயங்காலம் கோவில் போய்ட்டு வரலாமா என்றாள்.
         ஓகேடா ரெடியா இருங்க  . நரேன் ஸ்கூல் முடிந்து வரட்டும்  கோவிலுக்கு போகலாம் என்றான்.

பெட்டில் புரண்டு படுத்திருந்தான் நரேன்.யாழினி அருகே வந்து குட் மானிங் செல்லம்    என்றாள். தினமும் அதாவது நரேன்  பிறந்தது முதல் குட் மானிங்கும் இரவில்  குட்நைட் சொல்வதையும் வழக்கமாக்கி கொண்டாள்.அம்மாவின் கொஞ்சல் கேட்டு மெதுவக விழித்தெழுந்தான்.

நரேன்   பிரஸ் பண்ணி விட்டு  ஹாலுக்கு ஓடி வந்து தாத்தாவிற்கும்  அப்பாவிற்கும் குட்மார்னிங்  சொல்லி விட்டு சாமி கும்பிட்டு    ஸ்கூல் பேக்கை  எடுத்து கொண்டு தாத்தா அருகே வந்தான். 
      தாத்தாவிடம் அன்றைய டைம்டேபிள் பார்த்து நோட்புக்த்தகங்களை எடுத்து வைக்க கூறினான்.ஸ்கூலுக்கு  கிளம்ப  தயார் ஆனான். யாழினி அதற்குள்  ப்ளேட் டில்  சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தாள்.எப்போதுமே சரணும்,நரேனும் விடுமுறை அல்லாத நாட்களில் காலையில் சாதம் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டனர். இந்த பழக்கத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை.நரேன் ஸ்கூலுக்கு சாப்பாடு எடுத்து சென்றால் சரியாக சாப்பிடுவதில்லை.நாளடைவில்  உடல் எடை மிகவும் குறைந்து  காணப்பட்டான்.அன்றிலிருந்து இன்று வரை  காலையில் சாதம் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டார்கள்.சரண் தான் சாதம் நரேனுக்கு ஊட்டி விடுவது வழக்கம்.நரேனை தயார் பண்ணி விடுவது யாழினி யின் வேலை.
நரேன்  ஒரு வழியாக ஸ்கூலுக்கு கிளப்பி விட்டான்.தாத்தாவுடன் ஸ்கூல்பஸ் வரும் இடத்திற்கு  சென்றான்.ஸ்கூல் பஸ் வரவே தாத்தாவிற்கு டாட்டா காட்டி விட்டு பஸ்ஸில் சென்றான்.
         சரணும் ஆபிஸ் கிளம்பி விட எல்லா வேலைகளையும் முடித்தாள்.  நேரம் கடிகாரத்தை விட வேகமாக செல்ல மாலைப் பொழுதும் வந்தது.நரேனும் ஸ்கூல் விட்டு வீட்டிற்கு தாத்தாவுடன்  வந்தான். யாழினி  பஜ்ஜி தயார் செய்து  கொண்டிருந்தாள்.
       நரேனின் சத்தம் கேட்டு கேஸை ஆஃப்  செய்து கொண்டு ஹாலுக்கு வந்தாள்.அன்று ஸ்கூலில் நடந்த விசயங்களை கேட்டு தெரிந்து கொண்டாள்.

      நரேனுக்கு கை கால் அலம்பி  வேறு  உடை மாற்றினாள்.
தாத்தாவும் நரேனும் டைனிங் டேபிளில் அமர்ந்து பஜ்ஜி சாப்பிட்டு கொண்டு பேசி கொண்டிருந்தனர்.

யாழினி தன் மாமனாரிடம் இவங்க வந்த அப்புறம் கோவில் போலாமா மாமா  என்றாள்.நரேனும் குஷியாகி ஹய்யோ ஜாலி ஜாலி என்று மழலை மொழியில் சொல்ல  சரணின் கார் சத்தம்  கேட்டு வாசலுக்கு   விரைந்தாள் யாழினி.

எல்லோரும் கோவிலுக்கு ரெடியாகி வர காரில் தாத்தாவின் மடியில் அமர்ந்து கொண்டான்.யாழினி சரணுடன் அமர காரில் பேசி கொண்டே சென்றனர்.அப்போது நரேன்   அம்மா இன்னைக்கு ஸ்கூல் வாசல் பக்கம் ஒரு பாட்டி  எல்லோரிடத்திலும்  ரொம்ப பசியாக இருக்கு .சாப்பிட ஏதாவது  தாங்கன்னு கேட்டாங்கம்மா.எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு அம்மா .நீங்க எனக்கு கொடுத்து விட்ட பிஸ்கட்டை எடுத்து  வாட்ச் மேன் தாத்தாவிடம் கொடுத்து கொடுக்க சொன்னேன். அந்த பாட்டி சந்தோசமா வாங்கி சாப்பிட்டாங்க .அப்புறம் என்னை பார்த்து  நல்லா இருப்பான்னு சொன்னாங்கமா என்றான்.உடனே சரண் பிஸ்கட்டை கொடுத்து விட்டு நீ என்ன  சாப்பிட்ட இன்டர்வெல் டைம்ல என்றான்.உடனே நரேன் எனக்கு   என்னோட ப்ரண்ட் சாக்லேட் கொடுத்தான் அப்பா.வேண்டாம்னு சொல்லிட்டேன்  என்று நரேன் சொல்லவும்  யாழினி நரேனிடம் ஆமா செல்லம் உனக்கு எப்படி  இந்த பாட்டிக்கு  பிஸ்கட் கொடுக்கணும்னு தோணிச்சி என்றாள்.
    அம்மா  நான் தாத்தா கூட தோப்பிற்கு போகும் போது சாப்பாடு கொடுத்து விடுவீங்க  அப்ப தாத்தா எல்லோருக்கும் கொடுத்து விட்டு அப்புறம் சாப்பிடுவாங்க.

   எல்லோரும் ஆசையா தாத்தா  கொடுத்த சாப்பாட்டை சாப்பிடும்  போது ரொம்ப சந்தோசமா இருப்பாங்க.இது பார்க்கும் போது எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்றான்.

நரேன் யாழினியை அழைத்து ஒரு  ஹெல்ப்மா என்றான் .சொல்லுமா  என்ன  பண்ணணும் என்று ஆர்வமாய் கேட்டாள்.நாளை ஸ்கூலுக்கு போகிறப்ப  வந்து ... வந்து... அப்படின்னு  சொல்லாமல் தாத்தாவை பார்க்க என்ன என்பது போல் கண்ணசைவில் தாத்தா சைகை காட்ட சொல்ல ஆரம்பித்தான்.
நாளைக்கு சாப்பாடு பேக் பண்ணுறப்ப எக்ஸ்ட்ரா கொஞ்சம் சாப்பாடு  பார்சல் பண்ணி தருவீங்களா என்று  பாவமாக கேட்டான்‌

      அதற்கு என்ன  தந்து விட்டால் போச்சு என்றாள். நரேன் தாத்தா மடியில் இருந்து எழுந்து யாழினியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். உங்க சாப்பாடு சூப்பரா இருக்கும் அந்த பாட்டியும் ரொம்ப சந்தோசமாக சாப்பிடுவாங்க .இனி அந்த பாட்டிக்கு  நல்ல சாப்பாடு கிடைக்கும் என்றான். 
உடனே ‌ 
தாத்தா தன் பேரனை இறுக கட்டி அணைத்துக் கொண்டு  இந்த விதை போதும்.நிச்சயமாக நாளை எல்லோர்க்கும் உதவும் கற்பக விருட்சமாக மாறுவான் என்பதில் ஐயமில்லை என்றார்.

நரேனின் இந்த செயலை பார்க்கும் மற்ற குழந்தைகளும் மாறுவார்கள்.பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள பிள்ளைகள் நிச்சயம்  நம்நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்று கூறி பேரனுக்கு முத்த மழை பொழிந்தார். இந்த சிறிய விதை நிச்சயம் மரமாகி அனைவர்க்கும்  பயன் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை......

- ப.மாலினி பாஸ்கரன்!