தமிழும் பாரதியும்... 031

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

தமிழும் பாரதியும்... 031

"காலத்தை வென்ற மகாகவி பாரதி

தமிழை அன்பாக்கினேன்,
தமிழை ஆராதித்தேன்,
தமிழை நேசித்தேன்,
தமிழை வாசித்தேன்,
தமிழை படித்தேன்,
தமிழை பருகினேன்,
தமிழை பூஜித்தேன்,
தமிழை சுவாசித்தேன்,
தமிழை சுவைத்தேன்
தமிழை உயிராய் நினைத்தேன்,
தொன்மை மொழிகளுள் முதன்மை மொழி,
எக்காலத்திலும் சிகரமாய் நிற்கும் சிந்தனை மொழி - தலைப்பு

காலத்தை வென்ற மகாகவி பாரதி அல்லவா,
தமிழ்மொழியின் அடையாளம் மகாகவி பாரதி,
பாரதத்தையும், தமிழையும் உள்ளடக்கிய பாரதி,
நாட்டுப்பற்றை கவிதையாய் வார்த்தவன் பாரதி,
கவிஞர்களுக்கு எல்லாம் மகாகவி பாரதி
தமிழும்,. பாரதியும் வேறல்ல,
உயிரும் உடலும் போல்,
தமிழையும் பாரதியையும்,
 பிரித்து பார்க்க இயலாது
காலத்தை வென்றது தமிழ் மட்டுமல்ல பாரதியும் தான்,
தமிழே மகாகவி பாரதி,
மகாகவி பாரதியே தமிழ்.

-ப. கைலாஷ்
ஆறாம் வகுப்பு
பி.ஏ.சி.எம்.மேல்நிலை பள்ளி
இராஜபாளையம்- 626117.
விருதுநகர் மாவட்டம்.