காலத்தை வென்ற மகாகவி பாரதி...! 030

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

காலத்தை வென்ற மகாகவி பாரதி...! 030

தலைப்பு: 

"காலத்தை வென்ற மகாகவி பாரதி".

பார் போற்றும் கவிஞன்,
எட்டையாபுரத்தில் உதித்த தமிழ்த்திலகன்,
தமிழை பறைசாற்றிய இளைஞன்,
தமிழை காத்து நிற்கும் காவலன்,
தமிழ்த் தாய்க்கு தலைமகன்,
கவிக்கெல்லாம் கவி தந்த மகாகவிஞன்,
அறவழியில் சென்ற மகாத்மாவை கொண்டாடிய காந்தியன்,
ஆணும்,பெண்ணும் நிகரென முழங்கிய முதல்வன்,
ஆண்மையை அன்னைத் தபிழால் அள்ளி தந்தவன்,
இயற்கையை கவியால் படைத்த இறைவன்,
ஈன்ற மொழியை உலகெல்லாம் பரப்பிய புதல்வன்,
எண்ணங்களை மேன்மையாக்கிய ஆசான்,
எட்டுத்திக்கும் முரசு கொட்டிய கலைஞன்,
மண்ணுக்கும், விண்ணுக்கும் தலைநிமிர்ந்த தலைவன்,
காலத்தை தாண்டி வென்ற காவியன்,
கண்ணியமான கண்ணம்மாவின் காதலன்,
சங்கத்தமிழ் நூலைப்படி என்ற பாரதிதாசனின் ஆசிரியன்,
செல்லக்குழந்தைகளின் செல்வமான செல்லம்மாவின் கணவன்,
தமிழ் எட்டிய திசையெல்லாம் பரவிய பாவலன்,
வந்தேமாதரம் வந்தேமாதரம் என முழக்கமிட்ட சுதந்திரன்,
பெண்ணியம் பேசும் பெண்டீரின் சகோதரன்,
பலருக்கும் ஔடதமாம் விளங்கிய மருத்துவன்,
பார்வையை பாரதமாய் மாற்றிய வித்தகன்,
பாரதியம் பேசும் பாரதி எங்கள் பாரதியன்,
அவனே
பார் போற்றும் பாரதி,
பாரதம் போற்றும் பாரதி, 
காலத்தை வென்ற மகாகவி பாரதி.

- ப. பிரபஞ்சன்
(ஏழாம் வகுப்பு, 
பி.ஏ.சி.எம். மேல்நிலை பள்ளி)
295/ 105, முகில்வண்ணம்பிள்ளை தெரு,
இராஜபாளையம்- 626117.
விருதுநகர் மாவட்டம்.