பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து கவிதை

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கவிதை

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து கவிதை

பிரதமர் நரேந்திர மோடி
ஜனன தினம் (17.09.2022)

குஜராத்தில் ஜனமான
பாரதத்தின் பிரணவம்!

அமைதி/நல்லிணக்கம்
இரண்டும் உயிர் காண..
ஒரு நாடு/ஒரு கொடி/
ஒரு அரசியலமைப்பு சட்டம்
வகுத்த சாணக்கியன்!

ஒன்றுபட்ட பாரதம்
ஒப்பற்ற பாரதம் வலியுறுத்த...
அனைத்து மாநிலங்கள்/யூனியன்
பிரதேசங்களின் மண்ணெடுத்து
வல்லபாய் படேலுக்கு
சிலை படைத்த சிருஷ்டிகர்த்தா!

சொல்லாமல் போதிக்கும் காற்றாகி
சொல்லி சாதிக்கும் மழையுமாகி.....
வர்த்தகத் துறையில்
2015ல் 81வது இடமிருந்த பாரதத்தை
2019ல் 52வது இடமாக
புத்தாக்க அட்டவணையில்
புகலிடமாக்கிய பகலவன்!

பூமியின் சுற்றல்
மண்ணுலகிற்கு புனிதம் 
தருவது போல....
உலக நாடுகளில் பவனி வந்து
பூவுலகை புண்ணியாத்மாவாக்கி
முன்னேற்றப்பாதை
திட்டங்கள் தீட்டுபவராகி,
வங்கி துறை நலனுக்காக
10 வங்கிகள் இணைத்து....
உலக வங்கி தரத்தில்
இந்தியாவை சிறப்புடன்
63வது இடமாக்கிய சகாதேவன்!

ஆத்ம பலம்/ஆத்ம திருப்தி/
ஆதர்சன கீர்த்தனை
குருதியில் ததும்ப.....
தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றி
ராமஜென்ம பூமியில்
ராமர் கோயில் கட்டுமாணப்
பணியில் பக்தசிரோன்மணி!

அலைகடல் போல
அகன்ற நெற்றிக்குள் விசாலமாகி...
கருணை கண்ணுக்குள் தீர்வு
முற்றிய நாவுக்குள் தீர்மானம்
நரையோடிய சிரசுக்குள் நிமிர்தேசம்
அத்தனையும் /அனைவரையும்/
அரவணைப்பில் முகிழ வைத்து,
கட்டிட/சிற்பக்கலை பார்வையிலே
இந்திய கலாசாரம் 
வெளி நாட்டினரை/ஜின் பிங்கை 
ஆளுமைப்படுத்தலில்  பீஷ்மர்!

நாட்டின் முதுகெலும்பு விவசாயமென
அறிந்து/புரிந்து/தெளிந்ததால்....
உழவன் கண்ணீரைத் துடைக்கும்
வாஞ்சைமிகு தலைவனாக
14.5 கோடி பேர் பயனுற
ஆண்டுதோறும் ரூ.6000  தரும்
"கிஷான் சம்மான் நிதி"யும்,
மண்வள அட்டை "E-NAM "வசதியும்,
பாசன திட்டம் "ஜலசக்தி அமைச்சகம்",
குடிநீர் அனைவரும் பெற
"ஜல ஜீன் இயக்கம்",
 பரிணமிப்பு அளித்தலில் கர்ணன்!

மழையில் உறைவிடம் தேடும்
பறவைகள் போலன்றி
மேகத்தின் மேல் பறக்கும் பருந்தாக....
சவால்களை தூசென ஏற்று,
தடைகளை படிக்கற்களாக்கி,
ஜன் தன் ஆதார் மொபைல்
தொழில்நுட்பம் சிந்தனைப்பூவாக,
ஜன் தன் சுரக்க்ஷா
காப்பீடு திட்டம் கருத்துப்பூவாக,
கடினமாக பாதைகளை 
செவ்வனே மாற்றிடுவதில் 
நந்தவன தோட்டக்காரன்!

சோதனை புயல்களை
 சுவாச மூச்சாக்கி.....
வேதனைகளை விழுங்கி ஜீரணித்து,
கோத்ரா ரயிலெரிப்பு போராட்டம்
பதவி தூக்கியெறிதலாகி,
07.10.2001 முதல் மே 2014 வரை
குஜராத் மாநில முதல்வராகி,
 மின்மிகை மாநிலமாக்கியே
திருப்பம் தந்த சீர்மிகு தலைவன்!

மௌனமாய் குடும்பத்தை
வடமிழுத்துச் செல்லும் 
குடும்பத்து குத்துவிளக்குகள்
நலம் பேணும் பெருந்தகையாய்....
உஜ்வாலா இலவச 
சமையல் எரிவாயு திட்டமும்,
பெண்மைக்கு பாதுகாப்பென
முத்தலாக் தடை
போக்சோ சட்ட திருத்தமும்,
சிவசக்தி சொரூப திருநங்கைகளின்
 உரிமை பாதுகாப்பும்,
பெண் பாலியல் தாக்குதலுக்கு
மரண தண்டனை சட்டமும்
அமைத்தே வழங்கியதில் அர்ஜுனன்!

காலத்தின் கரையோரம் 
தன் காலடிச் சுவடுகளை
அழுத்தமாக பதித்து நடந்து....
மக்கள் நலம் பேணுதலில்
"சர்வதேச யோகா தினம்"அறிவிப்பும்,
சுகாதாரம்/நலவாழ்வு இயக்கத்தில்
"ஆயுஸ்மான் பாரத திட்டம்"
குழந்தைகளின் நோயெதிர்ப்பு
 மருந்தில் "தனுஷ் இயக்க"மாகி,
கடைசி குடிமகனும் பயனடைய
மத்திய அரசின்
 "மலிவுவிலை மருந்தகம்"
நிர்மாணித்து காத்தலில் தன்வந்திரி!

கோப வெளித்தோற்றம்,
தீட்சண்யக் கண்கள்,
கலக்கம் /தடுமாற்றமில்லா
உறுதியான மனோதிடம் கொண்டு...
இரண்டாம் முறை 
முதல்வரென பரிணமித்தலில்
அனைவருக்கும் குடிநீர் தரும்
"ஜல் ஜீவன்" இயக்கம்,
பழங்குடி மாணவனுக்கு
உண்டு-உறைவிடப் பள்ளி,
மாணவர்கள் வருங்காலம் சிறப்புற
கல்விக் கடன் வழங்கிட,
"வித்யாலட்சுமி திட்டம்" ,
யாதும் சாத்தியமாக திடம்/துணிவுடன்
மாணவர்கள் பயம் நீக்குதலில்
"Exam warriors"ஆங்கில
புத்தக எழுத்தாளர் கலைமகன்!

வெற்றியெனும் மனச்சாட்சியுடன்,
அச்சமின்றி/சோம்பலின்றி,
தடைகள் ஆயிரம் தடுத்தாலும்
வழிகள் பல கண்டு
முயற்சியை விரிப்பாக்கி
நடப்பவர்களுக்கு/
புது தொழில்
துவங்கும் சூழல் வழங்குதலில்...
தாய்த்திரு நாட்டினை
உலகின் 3வது நாடாக்கிய தருமன்!

கனவுகளை தாண்டி
 கரைந்தோடும் கனமான 
எண்ணங்களுடன்....
தொலைந்து போன 
வாழ்வின் தேடலில்...
மனதின் குரலாகி
"மன் கி பாத்"நிகழ்வினில்
மக்களின் ஆத்மார்த்த தலைவன்!

100 இளைஞர்களால் 
வீர இந்தியா படைப்பேன்
என்றது விவேகானந்த நரேந்திரன்!
100 இராணுவ வீரர்களால்
கார்கில் போர் வென்று,
காஷ்மீரை முழுதும் 
கையகப்படுத்தியது
பிரதமர் நரேந்திரன்!

சுற்றியுள்ள 16 நாடுகளை
அரசுமுறை பயணமதில்
ஒரே வருடத்தில் பயணித்து
வர்த்தக ஒருங்கிணைப்பு நடத்தி...
அனைத்து நாட்டின் அதிபர்களும்
இந்தியாவை திரும்பி பார்க்க
வைத்ததில் உலகம் சுற்றும் வாலிபன்!

எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லா நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
பலநேரம் நேர்மையான/
சிலநேரம் குயுக்தியான பாதையில்
அகத்தில் நடந்து
புறத்தில் மிளிர்ந்து
ராமேஷ்வரம் முதல் கரிச்சல்முனை
வரை/தனுஷ்கோடி வழியே
"தேசிய நெடுஞ்சாலை வார்ப்பு
திட்டம்"வழங்கி சாலை
பராமரித்தலில் அசோக சக்ரவர்த்தி!

மின்சார ரயில் கண்ட பாதைகளை
விஞ்ஞான முன்னேற்றத்தில்
மெய்ஞ்ஞானம் ஒத்து பாட
திருச்சி பெல் நிறுவனம்
மின்சார பேருந்து தயாரிப்பில்!
காலாட்படை/குதிரைப்படை/
யானைப்படை/வாள்/கத்தி
இத்தனை போர்க்கருவிகளை
சங்ககாலம் முதல் கண்ட நாட்டில்,
கலாமின் வல்லரசு இந்தியா 2020ல்,
நவீனமய கனரக ஏகே 203
துப்பாக்கி தொழிற்சாலை
அமேதியினில் துவக்கமாக்கியதில்
புத்திசாதூர்யம் கொண்ட சகுனி!

முதுகலை படிப்பு
அரசியல் அறிவியல் ஞானமிருக்க...
அரபு எமிரேட்டில் ரூபேகார்டு சேவை!
சுற்றுலா/போக்குவரத்து துறையில்
34 வது இடமாக பாரதத்தை
 தக்கவைக்கும்  சாமார்த்தியம்!
கருப்புபண முதலைகளிடமிருந்து
தாய்நாட்டினை மீட்டிட
ரூ.500/1000 நோட்டிற்கு தடைவிதிப்பு!
புத்திசாலி/தைரியசாலியாகி
உலகத்தையே ஆட்டிப் படைக்கும்
கொரானா விரட்டுதலில்
நித்திரை மறந்து/முத்திரை பதிக்க
வியூகம் அமைப்பதில்
ஒப்பற்ற குரு துரோணாச்சாரியார்!

சிலரை வறுமைக் கோட்டில் அறிந்து
பலரை வாழ்க்கைக் கோட்டில் புரிந்து
நெருஞ்சியை குறிஞ்சியாக்கிட
5 லட்சம் வரை வருமானமிருக்க
வரி விலக்கு அளித்த கட்டபொம்மன்!

சங்கடங்கள்/சமரசங்கள்
நிறைந்த வாழ்க்கையில்
எட்டாத லட்சியம் 
தொட்டுப் பார்த்திட உதவிடும்
பூஜ்யத்து நாயகன்
மறைபொருள் உணர்ந்திட
ஹஜ் பயணிகளுக்கு
ரூ.175000 லிருந்து 200000
 உயர்வு வழங்கியதில்
கேட்டதில் கொடுக்கும் கர்ணன்!

10 மாதம் கருவறை சுமந்து
பூமியில் பிறந்து
உலகினை ஸ்பரிசித்து
வாழ்வின் முதல்படி தொட்ட
குழந்தைகளை தத்தெடுக்கும்
தாய்மைக்கு 12 மாதம்
விடுப்பளிக்கும் சட்டம் ஈந்த
அன்பின் மூலாதார தாயுமானவன்!

மானுடத்தின் 
அகவல் மொழி/உடல் மொழி/
கருணைமொழி அறியவே....
கலால் வரி/விற்பனை வரி/
நுழைவு வரி/சேவை வரி
எனும் அத்தனையும்
ஒருங்கிணைத்து GSD எனும்
ஒரே வரியாய் மாற்றிய மகாதேவன்!

டில்லி/குஜராத் பல்கலைக்கழக
படிப்பு உத்வேகமூட்டிட...
எழுத்துகள் எதுகை/மோனையாகி
வார்த்தைகள் வசன நர்த்தனமாட
சக்தி பாவ்/சமூக நல்லிணக்கம்/
ஜோதி பூனா/சமாஜிக் சம்ரஷ்தா
எனும் நான்கும் நூல்களாகியதில்
புத்தக சாம்ராஜ்ஜிய எழுத்தாளன்!

இந்திய மண்ணில் பிறந்து,
நடுத்தர குடும்பத்து 
பிள்ளையென வளர்ந்து,
ஆர்.எஸ்.எஸ் ஈடுபாட்டால்....
முதலிலே தேசிய தொண்டு 
உறுப்பினர் பணியேற்று,
பிறகு அகில பாரதிய 
வித்யார்த்தி பரிஷத்
குழுவின் தலைவராகி,
முத்தாய்ப்பாக
 பிஜேபியின் பொது செயலாளராக
நேர்மை தந்த பதவிகளின் பரிணமிப்பு!

வாழ்வின் அர்த்தம் ஜொலிக்க
தகுதிகள் தத்தெடுக்க,
மகுடமான விருதுகள்.....
1)ஆளுமைத்திறன் கோலோச்ச
"FDI Personality விருது "..
அழகுப்பூவாகி!
2)இந்தியா டுடே வின் 2006ன்
சிறந்த தலைவன் விருது...
செய்திப் பூவாகி!
3)கணினித் துறையில்
இ...ரத்னா விருது....
பன்னீர்ப்பூவாகி!
4)தூய்மை பணி சிறக்க
WHO விருது...விடிவெள்ளிப்பூவாகி!
5)2018 ன் "சியோல் அமைதி விருது"...
பரவசப்பூவாகி!
6)சுற்றுச்சூழல் பாதுகாப்பில்
"Champions of Earth"
சிந்தனை ப்பூவாகி!

28 மாநிலங்கள்/3யூனியன்
பிரதேசங்கள்/3 பெருங்கடல்கள்/
7 முக்கிய நதிகள்/3 பாலைவனங்கள்/
6 முக்கிய மதங்கள்/29 பண்டிகைகள்/
22 ஆட்சி மொழிகள்.....
ஆகியவைகளை
பரிபாலனம் செய்து,
வந்தே மாதரம் தாரக மந்திரம் ஓதி,
இந்தியா தன் நாடு,
தான் ஒரு இந்தியன் என
மார் தட்டி செப்பிடும்
பாரத மண் பிரதமருக்கு
இன்றைய தின பிறந்த தினத்தில்
(செப்டம்பர் 17ஆம் திகதி)
நல்வாழ்த்துகளை....
நீண்ட ஆயுள்/நிறைந்த ஆரோக்கியம்/
வற்றாத புகழோடு
இன்று போல் என்றும் வாழ 
அருள் புரிய இறைவனை வேண்டி,
மனம் நிறைந்து வழங்கிடுவோம்!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்,
முதுகலை ஆசிரியை,
M.Sc.,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil.,Ph.D.,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை....632513.