பெண்மையை போற்றுவோம்...! 003

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்மையை போற்றுவோம்...! 003

பெண்மையைப் போற்றுவோம்...


முன்னுரை :

பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை நன்கு அறிந்து வளர்ச்சி பணியில் ஈடுபட்டு தாங்களும் வாழ்ந்து பிறரும் வாழ பெண்கள் வழிவகைச் செய்கிறார்கள். முன்னேற்ற பாதையில் முனைந்து சென்று நாடு உயர மேன்மையுற தங்களை அர்ப்பணிக்கின்றனர்.அன்று கட்டமைக்கப்பட்டவற்றில் கட்டுப்பட்டு இருந்தோம், வீறு கொண்டு எழுந்தோம் விண் உயரம் முயற்சி செய்தார்கள் முடியவில்லை ஆனால் இன்று படித்த பெண்கள் சமுதாயத்தின் தலை நிமிர்ந்து நிற்கின்றனர். "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடந்த வந்தோம் !
எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி..... ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்றிருந்தவர் மாய்ந்து விட்டார் !
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்றும் விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் எனப் பெண் விடுதலைக்குப் பாரதியார் பாடிய பாடல் இன்று நனவாயிற்று.ஆம் இக்கட்டுரையில் பெண்களின் பெருமையைப் பற்றிப் பார்க்க போகிறோம்.

பெண்களின் பங்கு:
இன்றைய காலத்தில் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனும் அளவிற்குப் பெண்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றனர். ஆனால் முன்னோர் காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அடக்குமுறைகளும் உச்சத்தில் இருந்தபோது அவர்கள் அனுபவித்த துன்பங்கள் மிக மிக அதிகம்.
பெண் என்ற தாய்மையில் இருந்து தான் இந்த உலகத்தில் உயிர்கள் அனைத்தும் தோன்றுகின்றன. ஒரு வெற்றிகரமான சமூகம் உருவாவதற்குப் பெண்கள் மிக முக்கியமான பங்களிப்பை அளிக்கின்றனர். குழந்தைகளைப் பெற்று வளர்த்து அவர்களை ஆளாக்கி குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கொண்டவர் பெண்களே!
பெண்களின் அசாத்திய மனவலிமையும் பொறுமையும் உடையவர்கள் ஒவ்வொரு ஆண்களின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண்ணின் அன்பும் ஆதரவும் தியாகமும் நிறைந்திருக்கும். இத்தகைய பெண்களுக்கு உரிய அந்தஸ்து உரிமையும் பாதுகாப்பும் சமூகத்தில் மறுக்கப்படுவது ஏனோ தெரியவில்லை .பழைய கதைகளில் பெண்ணின் அடிமைத்தனத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இன்று இந்த இருள் விலகத் துவங்கியுள்ளது பெண்கள் முன்னேற்றம் உள்ள சமூகம் தலைசிறந்த சமூகம் என்றும் மாறி வருகிறது.
இப்படிப்பட்ட சமூகத்தின் பெண்களின் பங்கு அளப்பரியது. ஒரு பெண் சமூகத்தில் பல வேடங்கள் எடுக்கிறார் ஒரு குழந்தைக்குத் தாயாகவும் கணவனுக்கு மனைவியாகவும் பெற்றோருக்கு நல்ல மகளாகவும் சகோதரர்களுக்கு அன்பான சகோதரியாகவும் மாணவர்களுக்கு அன்பான ஆசிரியராகவும் மருத்துவர்கள் ஆகவும் இப்படிப் பல துறைகளில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அன்பு அரவணைப்புத் தியாகம் சகிப்புத்தன்மை இவற்றுக்குப் பெண்களுக்கு நிகர் பெண்களே இப்படிப்பட்ட பெண்களின் பங்கு சமுதாயத்தின் மிக முக்கியமானது.
பெண்களின் முக்கியத்துவம் :
பெண்கள் ஒரு சிறந்த சமூகம் ஒன்றை கட்டமைக்கின்றார்கள் பெண்கள் இல்லா குடும்பம் அன்பின் இலக்கணம் அறியாது என இலக்கணங்கள் கூறுகிறது .
பெண்களை எண்ணத்தால் சொல்லால் செயலால் இழிவு படுத்துவது அறிவற்ற செயல் என்றும் அதனை அறவே நீக்க வேண்டும் என்றும் பாரதியார் கூறுகிறார். உண்மைதான் பெண்மையை நாம் போற்ற வேண்டுமே தவிரத் தூற்றக்கூடாது.
பெண் என்பவள் குடும்பத்தின் அச்சாணியாகத் திகழ்கிறார். தாயாய் தங்கையாய் மகளாய் மனைவியாய் இப்படி அனைத்தையும் இருப்பவள் பெண் மட்டும் தான் எனவே பெண்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால் அவர்கள் கல்வியில் சிறந்த விளங்க வேண்டும் எனவே பெண் கல்வியை நாம் போற்றி அவர்களுக்கான கல்வியை நாம் பெற்றுத் தர வேண்டும்.
பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள்:
பெண்கள் பிறப்பின் அடிப்படையில் உடல் அளவில் மென்மையானவர்கள். ஆனால் ஆண்களை விடப் பெண்களை மிகுந்த பலமானவர்கள் ஆவார். எந்தப் பிரச்சினை எப்படிக் கையாள வேண்டும் என்ற உத்தி பெண்களுக்கு எளிதாக அணுக தெரியும்.
பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களில் மிக முக்கியமானது பெண்கல்வி இவர்கள் கல்வி கற்க சுதந்திரமாக அனுமதிக்கப்படுவதில்லை அவர்களது கனவுகளை யாரும் அங்கீகரிப்பதில்லை பெண் வளர்ந்தால் அவளைத் திருமணம் செய்து வைப்பதே தமது கடமை எனும் சிந்தனை பெற்றோர்கள் மனதில் உள்ளது. இதனால்தான் பெண்கள் தமது கனவுகளைப் பெற்றோருக்காகச் சிதைத்து கொள்கின்றனர். இவ்வாறான நிலை இன்று கணிசமாக மாறி பெண்கள் பலர் கல்வியில் முன்னேறி வருகின்றனர் இருப்பினும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்த வண்ணமே உள்ளன பல தடைகளைத் தாண்டி ஒரு பெண் இந்தச் சமூகத்தில் சாதிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
பெண்களைச் சில கயவர்கள் போதைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர் பார்க்கின்றனர் இது பெண்களுக்கு எதிரான வன்முறையாகும். மேலும் கல்வி கற்கும் நிலையில் பல தீய செயல்களால் துன்புறுத்தப்படுகிறார்கள் இது அவர்களுக்குக் கல்வியில் ஏற்படும் மிகப்பெரிய தடையாகும். இத்தனை தடைகளையும் மீறி படித்துக் கல்வியிலும் வெற்றி பெறுகின்றனர் பெண்கள்.
பெண்களுக்கான சுதந்திரம் :
பெண்களுக்கான சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பது தொடர்பான போராட்டம் இன்றும் நடந்து கொண்டே வருகிறது. மகாகவி பாரதியாருடைய வரிகளில் விதை போடப்பட்ட கவிதைகள் பாடல்கள் மூலம் பெண் விடுதலைக்காகப் பாரதி தனது புரட்சியைச் செய்தார். இன்றைய சமுதாய அரசியல் சட்டங்கள் பெண்ணுரிமையை முதன்மைப்படுத்துகின்றன. பெண் கல்வியும் அவர்களது உயர்வையும் இன்றும் வளர்ச்சி கண்டுள்ளன பெண்கள் எல்லாத் துறைகளும் சிறப்பான வளர்ச்சி காண்பது இந்தச் சமூகத்திற்குக் கிடைத்த வெற்றி ஆகும். அதே சமயத்தில் பெண்களுக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தை தவறான வழியில் பின்பற்றாமல் நேர்மையான வழியில் பின்பற்றினால் பெண்கள் என்றுமே இந்நாட்டில் மதிக்கப்படுவார்கள்.
பெண்களுக்கான பாதுகாப்பு :
பெண்களுக்கான பாதுகாப்பு என்பது அவர்களுக்கான சுதந்திரத்தை நாம் கொடுக்க வேண்டும் உருவாக்க வேண்டும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஈடுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகளைப் பெற்று தர வேண்டும் ஆண்கள் பெண்கள் தொடர்பான நன்மதிப்பை கடைபிடிப்பதில் குற்றங்கள் குறையும் பெண்களும் தமக்கான விழுமங்களை நின்று ஒழுகுவது சிறப்பானதாக இருக்கும் .இன்றைய சமூகத்தில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதால் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாகக் காணப்படுகிறது.
பெண்களுக்கான முன்னேற்றமும் சமூக வளர்ச்சியும்:
பெண்களுக்கான முன்னேற்ற பாதையில் முதலில் இருப்பது கல்வி வளர்ச்சியே ஆம் இன்றைய சமூகத்தில் பல பெண்கள் கல்வியில் முன்னேறி வருகின்றனர் முன்பெல்லாம் ஆண்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலை மாறி இப்போது பெண்களுக்குச் சமமாகக் கல்வி கிடைத்துள்ளது. சம்பாதிக்கும் திறனும் பெற்று பெண்களும் சம உரிமையில் இருக்கிறார்கள். இதனால் ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியும் அபிவிருத்தியும் மேம்பட்டு இருக்கிறது. சமூக வளர்ச்சி முன்னேற்ற பாதையில் செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. வீட்டை ஆளும் பெண்களுக்கு நாட்டை ஆள்வதா கடினம்.
எனவே பெண்களைப் போற்றுவோம்!
நாட்டின் வளர்ச்சியைப் பாதுகாப்போம்!
முடிவுரை:
உலகத்தில் தலை சிறந்த நாடுகள் என நாம் அடையாளப்படுத்தினால் அதில் முதலிடம் பிடிப்பது பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான முன்னுரிமை அளிக்கும் நாடே அந்த விதத்தில் நம் நாடு முன்னேறியுள்ளது என நினைத்தால் பெருமையாக உள்ளது. பெண்களின் முயற்சியால் ஆண்களின் சுமை வெகுவாகக் குறைந்து ஒரு ஆரோக்கியமான சமுதாய வளர்ச்சி கண்டுள்ளது எமது தேசமும் பெருமை கொள்கிறது பெண்களைப் பாதுகாப்போம்! பெண்களைப் போற்றுவோம்!

வாய்ப்பு வழங்கிய மகிழ்ச்சி அலைவரிசைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 

- இர.உஷாநந்தினி சதீஷ்குமார்
9/798-5 ஆபீஸஸ் காலனி
பச்சாபாளையம் , பேரூர்,
கோவை-641010