பெண்ணியம்...! 002

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்ணியம்...! 002

பெண்ணியம்

முன்னுரை:-
உலகம் வேண்டுவது பெண்ணியத்தின் விடுதலையையும் சிறப்பையும் அதனை நமக்குப்பெற்றுத்தந்தவர் ஆவார்.பாரதி ஒரு ஒப்பற்ற தலைவர்,கவிஞர்,விடுதலைக்காகப்பாடுபட்டவர். சுதந்திரவேட்கையதுகொண்டு கவி புனைந்தவர் சுதந்திரக்கவி என்று பாராட்டப்பட்டவர் பெண்விடுதலைக்கு எதிரானவற்றிற்கு சாவுமணி அடித்துச்சளைக்காமல் போராடியவர். தனது பெயரையே காளிதாசன் என்றும் சக்தி தாசன் என்றும் மாற்றிக்கொண்டவர்.இதன்மூலம் பெண்ணினத்தின் மேல் அவர்கொண்ட பற்று நன்கு விளங்கும். பெண்ணினத்திற்குப்பெருமை சேர்த்தவர்  பாரதி. இதனின்மூலம்பெண்ணிய விடுதலைக்காக இவர்கொண்ட பற்று நன்கு விளங்கும்இவர் பெண்ணியம்குறித்து ஆற்றிய பணிகளை இக்கட்டுரையில் காண்போம் *பொருளுரை-*
*பெண்கல்வியில்லாமை:-*
பாரதிவாழ்ந்த காலம் நாம் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருகாலம்.தமிழ்ழாட்டுக் கல்வியறிவில் புன்தங்கியிருந்த காலம். பெண்கள் கல்வியறிவின்றி கட்டுப்பட்டிருந்த காலம்.அவர்களைப்பாடசாலைக்கு அனுப்புவதே பாவம் என்று எண்ணியிருந்த காலம். பாரதி வாழ்ந்த காலத்தின் நிலைமையினை "இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு பெண்கல்வி ஏற்பட்டால் மாதர் ஒழுக்கத்தில் தவறிவிடுவார்களென்று தமிழ்நாட்டில் பலர் கூறினர்" என்கின்றனர். எனவே அவர்காலத்தில் பெண்கல்வி என்பதும் பெண்விடுதலை என்பதும் சிந்தனையில் கூட சிந்திக்க இயலாத ஒன்றாக இருந்தது. அப்படிப்பட்ட காலகட்டமே அது. ஆணாதிக்கச்
சமுதாயம் பெண்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்தி வைத்திருந்த
காலம்.பெண்கள் கற்பில் சிறந்தவர்களாக இருக்கவேண்டும் என்று ஆணாதிக்கம் விரும்பியது.அவ்விருப்பம் பெண்கல்விக்கு பெருந்தடையாக இருந்தது. பெண்களைக் கற்பை முன்னிலைப்படுத்தியே அடிமைகளாகவே வைத்திருந்தனர் என்பதும் அவர்களுக்கு விடுதலை அளிப்பதை ஆணாதிக்கச்சமூகம் விரும்பவுமில்லை
என்பதே நிதரசனமான உண்மையாகும்.பெண்களுக்குள்ளே பொதுக்கல்வியை வளர்க்கவேண்டும் கல வியறிவில்லாதமூடர் எந்தத்தொழிலும்
நேரே செய்யமாட்டார்கள் என்பதும்  குறிப்பிட்டுச்சொல்கிறார்பாரதி. பாரதி "பெண்ணுக்கு ஞானம் வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்" 
- மண்ணுக்குள்ளே
சீலமும் என்றும் பெண்கள் அறிவில் சிறந்தால் மூடநம்பிக்கைகள் இந்த உலகைவிட்டு இல்லாமல்  ஆகிவிடும் என்றார். பாரதி " பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதமை யற்றிருங்காணீர்"
என்றும் கல்வி அறிவில் பின் தள்ளப்பட்டு
விடுதலையின்றிக் கிடக்கும்பெண்களுக்கு விடுதலையே உயிர்மூச்சாக வேண்டும் என்ற  பாரதியின் ஆழ்மனக்கருத்து தெளிவாக விளங்குகிறது. 

*பெண் அடிமைய  ல்ல:-* பெண்என்பவள் பராசக்தியின் வடிவம் அவள் தாய்மையின் உருவம் அவள் அடிமைப்படுவது அனைவருக்கும் அவமானமாகும். பெண்ணை அடிமை என்று எண்ணாதே. முற்காலத்துத்தமிழர் மனைவியை வாழ்க்கைத்துணை என்றனர்.ஆத்மாவும் சக்தியும் ஒன்றே ,ஆணும் பெண்ணும் சமம்
என்னும் பாரதியின் கருத்துக்கள் பெண்விடுதலையை விரும்பும் பெண்களுக்கு விடுதலை உணர்வைத்தட்டி எழுப்பும் தாரக மந்திரமாகும் என்பதில் ஐயமில்லை.

மனிதரே மனிதரை அடிமைப்படுத்துதல்:- உலகில் யாரும் யாருக்கும் அடிமையில்லை அடிமையாகப்பிறப்பதுவுமில்லை. ஆனால. பிறரால் அடிமையாக்கப்படுகின்றனர். சுதந்திரம் பறிக்கப்படுகிறது. தான் சுகமாக வாழ அடுத்தவரை அடிமைப்படுத்தி  அடிமையாக்குகின்றனர்.அறிவற்ற அஃறிணை உயிர்களிடம் கூட இல்லாத ஒருபண்பை மனிதன் கடைபிடிப்பது சுந்திக்கத்தக்கது் மனிதன் தான் ஆடு மட்டும் போன்று மனுதரையும் அடிமைப்படுத்தி வைத்துள்ளான். என்பதே வேதனையின்உ ச்சமாகும்
*பெண்விடுதலைக்குவழி:-*
அறியாமையில. மூழ்கிக்கிடக்கும் பெண்கள்சமூகத்திற்கு விடுதலை அளிக்க முன்னுக்கு வருகின்றதே பெண்விடுதலைக்கு வழிகூறும் பெண்விடுதலைக்கட்சியாகும் இந்த அமைப்பு  தொடங்கப்பட்டதே பெண்பளுக்கு நல்லவழிகிட்டும் என்ற நம்புக்கையில் தான். இந்த அமைப்பு தொடங்கி வளர்ந்துவிட்டால் பெண்ணடிமைகளை நாம் ஒன்றும் செய்ய இயலாமல் போகும் என்று இதனை எதிர்த்தவர் பலபேர். ஆனால் பெண்ணிய விடுதலையே தனது எயிர்மூச்சாகக் கொண்டு இயங்கிய வர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்து பெண்விடுதலையை நிலைநாட்டிட உதவியது.

 *பெண்கள்முன்னேற்றம்:-*
பெண்கள் முன்னேற வேண்டும்,விடுதலை பெறவேண்டும் என்று கூறிவிட்டு அமன் வழிகளை ஆராயாமல் இருந்து வருவது நம் தமிழரின் பண்பாகும். பாரதி இதற்கு வித்திட்டார்  விதிகளையெம் பெண்கள் முன்னேற வழியையும் கூறுகிறார். இந்திய தேசத்து ஸ்திரிகள் இங்குள்ள ஆண்மக்களால் நன்கு மதிக்கப்படுவார்கள் அதற்குண்டான பலவிசயங்களை நாம் உண்டாக்கிடுவோம் வெளி நாட்டவரின் மதிப்பைப்பெறுவதே ஒர்சிறந்த உபாயமாகும் என்கிறார் பாரதி 
*பெண்கள் விடுதலைக்கு வழிகள்:-*
பெண்களுக்கு இச்சமூகம் அளித்துள்ள கட்டுப்பாடுளை உடைத்தெறிந்தால. தான் பெண்கள் விடுதலை பெற முடியும் விடுதலைக்கும் வழிகள் கிடைக்கும்.இந்தக்பட்டுப்பாடுகளைப் பெண்களும் மற்றும் சமூகமும் நினைத்தால் தான் மாற்றமுடியுமே அன்றிமாற்றுதல் என்பது கடினமான ஒன்றாகும். இச்சமூகம் மாற்றவேண்டியவற்றை பிரமராய வாத்தியார்
கூற்றாகத்தனது கட்டுரையில் வெளிப்படையாகக்கூறியுள்ளார்
ருதுவான ஒரு பெண்ணுடைய விருப்பப்படி திருமணம்செய்யவேண்டும். கணவன் கொடுமைசெய்தால் பொறுக்கமாட்டாமல் இருந்தால் அவனைத்
த்யாஜ்யம் செய்துவிடவேண்டும் அந்த உரிமை பெண்ணுக்கு குடைக்கவேண்டும் என்று மிகவும் பாடுபட்டார்பாரதி.
சட்டத்தில் பெண்ணுரிமைக்கும் பெண்ணின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கவனிக்கப்படவேண்டும் என்கிறார்கள் *அகிம்சைப்போர்:*-
பெண்ணியசிந்தனையையும் விடுதலையையும் பற்றிப்பேசும்பொழுது அதனை அடையக்கூடிய வழிமுறைகளையும் நாம் அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும். எம்பொழுதுமே ஒரு கொள்கையை நிறைவேற்ற இரு மார்க்கங்கள் உள்ளனஎன்று முரட்டுப்பாதை.மற்றொன்று அகிம்சை பாதையாகும் புரட்சியாளர்களின் இயல்புக்கு ஏற்ப எவ்வழுயினைக. கடைபிடித்தாலும் வெற்றிக்கனியினைப்பறிப்பது  எளிதாகவே இருக்கும். பாரதி பெண்களுக்கு எந்தவழி நல்லவழியோ அந்தவழியையே சுட்டிக்காட்டுகிறார்
ஆண்மகனை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்காத காரியம் அதுபற்றியே சாத்வீக எதிர்ப்பினால் ஆண்களுக்கு நல்லபுத்தி வரும்படி செய்தல்வேண்டும் அதுவே சிறப்பாகும் என்கிறார்கள் அறிஞர்கள்.
 

முடிவுரை:-
பெண்கள் தங்கள்நிலையை உரிமையை விடுதலையை ப்பெற ஆண்களிடம் அடிமைப்பட்டுக்கிடக்கமாட்டோம் அடிமை வாழ்வு வாழமாட்டோம்  எங்களைச் சமமாக
நடத்திடவேண்டும் அப்படி நடத்தவில்லையென்றால் உங்களுடன் சேர்ந்துவாழமாட்டோம் என்று வெளிப்படையாகவும் தைரியமாகவும்  தெறிவாகவும் பேசுதல் வேண்டும் அப்படியும் ஆண்கள் கேட்கவில்லையென்றால் அதனின்றும் கோபத்தால் நமக்கு விதிக்கக்கூடிய தண்டனைகளை 
எல்லாம் தெய்வத்தை நம்பிப் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுப்பதே நல்லது" என்று இக்கட்டுரையின் முடிவில் கூறுகிறார் பாரதி. தனி இடங்களில் பெண்களுக்கு மரியாதை வேண்டும் எங்கு மரியாதை இல்லையோ இல்லை என்று தெரிகிறதோ அங்கு பெண்கள் செல்லவே கூடாது. அகிம்சைமுறையில் உமனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றவேண்டும் அந்த முயற்சியில் பெண்கள் ஈடுபடவேண்டும் என்று பாட்டுக்கொரு புலவர்  பாரதியார் பெண்களின்விடுதலைக்கு தாம் செய்த செயல்களும் பெண்கள் செய்யவேண்டிய செயல்களாகவும் கூறியுள்ளதை இக்கட்டுரையில் காணலாம்.

-முனைவர் சு.நாகவள்ளி
பட்டதாரி ஆசிரியர்.ஊ.ஒ.ந.நி.பள்ளி,கோவில்பட்டி,ஆண்டிபட்டி,
தேனி மாவட்டம்