தமிழும் பாரதியும்...041

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

தமிழும் பாரதியும்...041

தமிழும் பாரதியும்...

கவிதை 
வாழ்க்கையைக்
கவிதையாய்க்
கொண்டாய் ..

செம்மொழித்
தமிழை
நல்லுணவாய்
உண்டாய் ..

பன்மொழிப் 
புலமையில் 
தனிப்புலமை 
பெற்றாய் ..

பன்மொழிப்
பயிற்சியை
ஆர்வலனாய்க் 
கற்றாய் ..

தேசியக்
கவியாய்ச்
சுதந்திரத்தை 
விதைத்தாய் !

அந்நிய 
மோகத்தினை 
மேகமாய் 
முறைத்தாய் !

கன்னலென
கனிவான
கதைகளினை 
மொழிந்தாய் ..

இன்னலும்
இனிதாகிட
மருந்தாகவே
இருந்தாய் ..

இதமான
இதழியலில் 
இதழினைப்
பதித்தாய் !

நமதான
சுதந்திரத்தைப் 
பாடல்களால்
துதித்தாய் !

அக்கினி 
குஞ்சொன்றை 
உணர்வாய் 
ஊட்டினாய் ..

பள்ளுவினைப்
பாடியே 
பண்பொளி
ஏற்றினாய் ..

குழந்தையைப்
போற்றியப் 
பாவலனும்
நீயே .!

குயிலினைப் 
பாடியக்
காவலனும்
நீயே .!

சபதம்
தந்து 
வீரத்தினைச் 
சமைத்தாய் ..

சந்தம்
மொழிந்து 
சந்தனமாய் 
மணந்தாய் ..

தமிழன்
நிமிர்ந்திட 
இனமாய் 
அழைத்தாய் .!

தமிழை
விதைத்திட 
இன்னுயிராய்
உழைத்தாய் .!

வறுமையிலும் 
தமிழ்
மாண்பினைக்
காத்தாய் ..

உரிமையில் 
ஒன்றாகிட
தமிழர்களை
அழைத்தாய்..

தமிழ்
இருக்கும்
இதயத்தில்
இருப்பாய் ...

தமிழும்
பாரதியும் 
மொழியின்
தித்திப்பாய் ...

நம்மொழிக் 
காத்திடக் 
காவலராய்
இருப்போம் ...

நம்மொழிப் 
பெருமையைக் 
காதலராய்ச்
சுவைப்போம் ...

-முனைவர் இரா. இராமகுமார்,
உதவிப் பேராசிரியர்,
விவேகானந்தா கல்லூரி,
அகஸ்தீஸ்வரம்,
கன்னியாகுமரி மாவட்டம்.