கனவுகளின் நாயகன்

அப்துல் கலாம் பிறந்த நாள் கவிதை

கனவுகளின் நாயகன்

 

கனவு நாயகனின் நினைவலைகள் 

 1 *இந்தியாவின் தன்னலமற்ற ஏவுகணை நாயகனாய்//*
*2. இளைஞர்களின் எழுச்சி வீரனாய் மிளிர்ந்த//*
*3. எளிமையின் இலக்கணமாக வாழ்ந்த சிகரமே//* *4.வலிமையின் மருஉருவமாக இருந்த மகத்துவமே//*
*5.விஞ்ஞானத்தில் பற்பல மாற்றங்கள் நிகழ்த்திட//*
 *6.மெய்ஞானத்தில்   சிறந்து விளங்கிய ஞானபீடமே//*
*7. மாணாக்கரின் நற்பணி நாயகனாய்  நயம்படவே//*
*8.மதங்களைத் தாண்டிய  மகத்துவம் நீயே//*
 *9. நொடிப்பொழுதில் வரும் மாற்றம் நிரந்தரமில்லை//*
*10. படிப்படியாய் வளரும் ஏற்றும் அழிவதில்லை//*
 *11.பொய்யான வேதமதனை தகர்த்திடும் ஆற்றலாய்//*
*12. மெய்யான  பிரதிபலிப்பாய் வந்தது வார்த்தையே//*
*13 .மண்ணில் மகத்தான படைப்புகளை உருவாக்கி//*
*14. விண்ணில் சென்ற போதும் இளைஞர்களின்//*
*15. வியப்பூட்டும் அன்பிற்கு பாத்திரமாக திகழ்ந்து//*
*16 .வெற்றிச் சிகரமாய் தடைகளைத்  தகர்த்து//*
*17.அணுசக்தி  திட்டத்தில் அணுஅணுவாய் சாதித்து//*
*18. அற்புத இயற்கையே  எதிர்காலமென போதித்து//*
*19.வாழ்வுதனை நாட்டிற்காய் அற்பணித்த  அற்புதமே//*
*20.வல்லரசு கனவை நிறைவேற்றுவோம் நாங்களே//*

-கவிஞர் முனைவர்
செ.ஆயிஷா
பல்லடம்