குறை ஒன்றும் இல்லை...! 032

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதைப் போட்டி

குறை ஒன்றும் இல்லை...! 032

குறை ஒன்றும் இல்லை கண்ணா..

 ஒன்பதாம் வகுப்பு மாணவனும், மாற்றுத்திறனாளியுமான, கண்ணா, தன் தந்தையிடம் விபத்தில் இழந்த தன் காலை எண்ணி, செயற்கை காலை காட்டி வருத்தப்பட்டான். 

 அவனது தந்தை ராஜசேகர் ஒரு தங்க வியாபாரி . அவர் "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அது தரத்தினில் குறைவதுண்டோ"  என பாடிக்கொண்டே , கண்ணன் போட்டிருந்த சுத்தமான 22 கேரட் தங்க மோதிரத்தை கழட்டினார்.  மெழுகுவத்தி ஏற்றி, அந்த மோதிரம் கரியாகும் வரை பற்றவைத்து, தன்னுடைய காலணிகளால் நசுக்கி சுத்தியால் ஓங்கி அடித்தார் . 

கண்ணன் அவரிடம் அவர் செயல் ஒன்றும் புரியவில்லை என கூறி, தன் பிறந்தநாளைக்கு அவர் பரிசாக தந்த, நசுங்கி ,கரியாக்கி, மிதிபட்ட ,உருக்குலைந்த மோதிரத்தை தன்னிடம் திரும்ப பெற்றுக் கொண்டான்.  அப்போது அவன் தந்தை மோதிரம் நிலைக் குலைந்த போதும் , அதில் உள்ள தங்கத்திற்கு,  எந்த மாற்றமும் இல்லை. 

 கண்ணா நீயும் உன் உடலுக்காக மதிக்கப்படவில்லை.  உன்னிடம் உள்ள உயிர் உணர்விற்கே மதிக்கப்படுகிறாய்.  மற்றவர்களின் உணர்விற்கு மதிப்பு கொடுக்க மறந்து விடாதே. " மதிப்பு மரியாதை எல்லாம் மகத்தான உணர்விற்கு தான் " என்றுணர்ந்து, பின் கண்ணன் தந்தையிடம், "உணர்வாகிய உயிர் இல்லாத உடலை யாரும் மதிக்க மாட்டார்கள்" என்பதை அறிந்து கொண்டேன் அப்பா. 

" உணர்வே இறைவன்"

" மதிப்பு மரியாதை எல்லாம் அந்த உணர்விற்கே உரித்தானது". 

 "உணர்வே முக்கியம் என அறிந்து கொண்டேன்"  என, தந்தையிடம் கூற, அவர் கண்ணனை உச்சி முகர்ந்து,

" குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா " எனப்  பாடி, கண்ணாவின் தலையை ஆசையுடன் வருடி கொடுத்தார். 
இசைப்பேரரசி
 - லதா சங்கரன்,
  சென்னை.