தேசத்தந்தை மகாத்மா காந்தி

காந்தி ஜெயந்தி கவிதை

தேசத்தந்தை மகாத்மா காந்தி

தேசத் தந்தை மகாத்மா காந்தி...:

1.இந்தியாவின் தேசத்தந்தை
மகாத்மா காந்தியடிகள்...
எந்தக்காலமும்
பேசிடவோம் புகழ்ந்திடுவோம்
அவரைநாம்...
உந்துசக்தி உயர்வான
எண்ணங்கள் நமக்காக...
சொந்தமவர்
எவர்க்குமினி
நற்செயல்கள்
சரித்திரமாய்...

2.சிந்தனைகள் சிறப்பாகும்;
சீரியநடை
மிடுக்காகும்...
கொண்டகொள்கை
எடுப்பாகும்
முடிப்பதினில்
முழுமூச்சாகும்...
இந்து முஸ்லிம் ஒற்றுமையே
தமது இலக்கு
தொடர்ந்தாரே...
கிராமத்தேசம்
நமதென்றே
முழங்கினாரே
தொடர்செயலில்...

3.வழக்கறிஞர் தொழிலதனால்
வாதாடியே
வென்றாரே...
சபர்மதி
ஆசிரமம்
யாவர்க்கும்
ஆக்கினாரே...
எளிமைவாழ்வு
நித்தம் நித்தம்
வாழ்ந்தாங்கே
காட்டினாரே...
ஓயாத உழைப்பினிலே
சுகமதுவேக் கொண்டாரே...

4.சத்தியாக் கிரகத்தை
உலகிற்கு உணர்த்தினாரே...
அகிம்சை நெறியினிலே
விடுதலைக்குப்
பாடுபட்டார்...
உண்ணாநோன்பு
இருந்தாங்கே
தம்மெதிர்ப்பு
செயலாச்சே...
இங்கிலாந்து ஆட்சியரை
விரட்டினாரே
வென்றாரே...

5.கதராடை தமிழராடை
உலகிற்கு
உயர்வாச்சே...
உழவராடை தன்னாடை
உயிர்பிரிந்தும்
உடனாச்சே....
அனைவர்க்கும் பொதுநெறி
நேசிப்பதனை
போதித்தாரே...
நானிலம் தானிங்கு
போற்றிடவே மகாத்மாவாய்..

         -சா.சையத் முகமது
        கிருட்டிணகிரி