தென்னாட்டுத் தியாகி அண்ணா...67

அறிஞர் அண்ணா அறிவு ச்சுடர் விருது கவிதை போட்டி

தென்னாட்டுத் தியாகி அண்ணா...67

தென்னாட்டுத்தியாகி அண்ணா

தென்னிந்தியக் காந்தியே!
திராவிடக் கொள்கைக் காந்தமே!

மாற்றான் தோட்டத்து மல்லிகையையும் மணந்த மணவாளா!

தமிழர்க்குக் கடமை ஆற்றி!
தமிழின் கண்ணியம் காத்து!
தமிழ்நாட்டோர் கட்டுப்பாட்டை வளர்த்த நவீன கரிகாலா!

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்னும் புதிய வேத கீதம் ஓதிய நன்மறையோனே!

திராவிட நாடு கேட்டு
தனது நிலையை மாற்றிக் கொண்ட உண்மைத்  தமிழனே!
தமிழ்நாடு பெயர் வாங்கித் தந்த பெரியாரின் பெரியோனே!

நீதிதேவன் மயக்கம் தெளிய வைத்து மருத்துவரே!
சமூக நீதி மலரச்செய்த மகத்துவனே!

அண்ணா காட்டிய வழியில் 
பெரியார்கள் பலர் வரவில்லை என்றாலும்
தம்பிகள் இதோ புறப்பட்டு விட்டோம்!
தமிழ்நாட்டைக்காக்க!

- தண்டமிழ்தாசன் பா சுதாகர்
ஆசிரியர்
46/73 திருவள்ளுவர் தெரு மேலூர் செங்கோட்டை _ 627809
தென்காசி மாவட்டம்.