பெரியார் கவிதை

பெரியார் பிறந்த தினம் கவிதை

பெரியார் கவிதை

*பெரியார்*
மூடநம்பிக்கைக்கு மூடுவிழா நடத்திய முன்னோன் நீ

பகுத்தறிவுப் பாடத்தைப் பக்குவமாய்ப் பரப்பிய பண்பாளன் நீ

சிலம்பால் எழுந்தது ஒரு காவியம்

உன்னால் உயிர்த்தது பலபேர் ஆவியும்

தாடியுடன் நீ எடுத்த தடி 

சாதிக்கு நீ கொடுத்த சவுக்கடி

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்றாய்

 தன்மானத்துடன் இருக்கத் தமிழனே பழகு என்றாய்

முடி திருத்தியவன் மகன் முன்னேறலாம்  இன்று

 கல்லுடைத்தவன் மகன் 
கலெக்டர் ஆகலாம் வென்று

உன்னால் ஏற்றம் பெற்றது சமூகம்

முன்னாள் நிலைமாறி இன்றானது சுமூகம்

குப்பனும் சுப்பனும் மட்டுமன்று அவன்

 அப்பனும் போகலாம் உள்ளே என்று

 எல்லோரும் கோவிலில் நுழைவதற்கு நீ

 போராடினாய்க் குற்றம் களைவதற்கு

இனமானம் மீட்டெடுக்க ஈரோடு ஈன்றெடுத்த குணவான் நீ

 இல்லோர்க்கு ஈந்தளித்த தனவான் நீ

அறியாமை இருள் அகற்ற அறிவையும் தான் வளர்க்க

 புரியாததைப் புரிய வைத்த பகுத்தறிவு பகலவன்  நீ! 

வாழ்க நின் புகழ்!

ஆ. பாலம்மாள்,
கிருஷ்ணகிரி.