காத்திருந்தேன்...

காதல் கவிதை

காத்திருந்தேன்...

வெளியூர்சென்ற கணவனுக்காக..!

நிலவு மட்டும் காயவில்லை மாமா! உன்னோட நினைப்பும் தான் காயுதே மாமா!

என் ஆசை மாமாவே! எப்பதான் வருவீங்க! எம்மனசு படும் பாட்டு எப்படி தான் புரிவீங்க!
 பிரிந்து சென்ற ! ஓரிரு தினங்கள் கூட! பிரிந்து போன ஓரிரு ஆண்டாய் தோனிட!

நீங்க அருகில் இருக்கும் போது! தெரியவில்லை!!
‌ நீங்க தொலைவாய் இருக்கும் போது தூக்கம் வரவில்லை!

 கண்மணி தூக்கம் நேரம் பாத்து!
 என்னை! நீங்க கையெனச்சி மெய்யணச்சி!

கண்ணக்கடி கடிச்சு! வச்சு கையோடு கைகோர்த்து! இன்னும் கொஞ்சம் வேணுமா !!
இதமா பதமா! இன்பதாகம் தீர்த்தீக!

 இமையிரண்டும் பூட்டாது கிடப்பதை!எப்ப தான் பார்ப்பீங்க!!

என் ஆசை மாமா! வுக்கு
 வீரன்னு பேரு! வச்சாலும் எங்கிட்ட வீரப்பா இருக்க மாட்டீங்க!

 என் வீர தளபதியே! எனையாளும் மாவீர தளபதியே !
என் மடி சாய்ந்து கிடப்பீக!
வீரபாச குழந்தையாக!

அன்பில் குழந்தையாகி! அரவணைப்பில் கணவனாகி !!
இந்த இரு பிள்ளைகளுக்கும் இனிய தகப்பனாகி!

 என் இதயம் நிறைந்த மாவீரரே!
 என்னை அன்பாய் தாங்கும் பாதுகாவலரே !
என் ஆசை மாமாவே! எப்பதான் வருவீக! உள்ளம் ஏங்குதே! அந்த ஒரு நொடிக்காக !
என் உசுரு வாழுதே!

பிரிவின் வேதனையில் !
பிடித்த வரிகளில் உங்கள் மனைவி!

-கவிதை மாணிக்கம்.