உத்தமர் காந்தியடிகள்

காந்தி ஜெயந்தி கவிதை

உத்தமர் காந்தியடிகள்

உத்தமர் காந்தியடிகள்

போர்பந்தரில் பிறந்த நீ
போரில்லா தேசம் விரும்பினாய்

அகிம்சையே ஆயுதமாய் ஏந்தி
அகிலத்தை வென்றாய்

உரிமையோடு சுதந்திரம் வேண்டி
உண்ணா நோன்பு நோற்றாய்

சத்திய சோதனைகள் யாவும்
அன்பால் வென்று காட்டினாய்

தீண்டாமைக்கு எதிராகத்
தீவிரப் பிரச்சாரம் செய்தாய்

உப்பு வரியை எதிர்த்து நீ
தண்டியாத்திரை புறப்பட்டாய்

வலிமை உடல் சார்ந்தது அல்ல
மனம் சார்ந்ததென புரிய வைத்தாய்

மனிதநேயம் காத்த மகாத்மாவே
உன்னிலும் உத்தமர் உலகில் உண்டோ?

முனைவர் சி.முத்துமாலை
சென்னை.