கண்ணம்மா..20

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

கண்ணம்மா..20

கண்ணம்மா
வீழும் விழிசெம்மல் நின் நினைவினால் உருக்கிட ||
காந்த குரலோலியோ என் சித்தத்தை சிதைத்து விட ||
கண்ணங் குழிதனிலே நான் சருகி வீழ்ந்துவிட ||
கன்னியவள் கொலுசு நாதம் இதயத்தை உடைத்து விட||
கார்முகில் கூந்தலும் தென்றலில் அசைந்தாட ||
என்னவள் எண்ணங்கள் எத்திசையும் படர்ந்திருக்க ||
முத்தமிழ் சொற்களும் அவள் முன் வந்தால் முடுங்கிடுமோ||
பேதையின் சிறு இதயம் சிறுவண்டாய் உன்னைச் சுற்ற||
எங்கு சென்றாய் கண்ணம்மா! உன் கற்பனையில் உள்ளேனடி ||
கரம் பிடிக்க நீ வந்தால் ! காலனும் காதல் கொள்ளவான்||
காதலியே கண்ணம்மா ! நின்னை காத்திருப்பேன் உயிர் உள்ளவரை.....


அஸ்வின் பகவத் ம.சு,

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்,