அண்ணா இன்னும் ஆகாயம்..! 023

அறிஞர் அண்ணா அறிவிச்சுடர் விருது கவிதை போட்டி

அண்ணா இன்னும் ஆகாயம்..!  023

அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்.

அண்ணா !
இவர் அரசியலின்  அணிவேர்!
ஒற்றை விரலசைத்து விந்தை புரிந்தவர்!
சிலையான போதும்
சிகரமாய் உயர்ந்தவர்!

உன் உணர்ச்சிப் பிழம்புகள்
கொதித்தெழுந்து
பெரும் புயலாய் வீசி
விவேகம்  புரிந்தன!

பேனா கூர்முனையால்
மனித மனங்களை
உழுத உழவனே!
உதவா பழமையதை ஒதுக்கி
உறுதியுடன் தடைகளை உடைத்தவரே !

சமதர்ம சமுதாயமே!
ஒர் இரவில் 
ஒளிக்கீற்றை
பாய்ச்சிய
காவியமே !

ஏழ்மை, செல்வச் செருக்கை
கத்தரிக்கோலாய்
கத்தரித்தவரே!     

உன் சொற்பொழிவுகள் !
ஆகாய மழைப்பொழிவுகள்!
உலகமே
உன்னதமான புத்தகம் என்றாய்!
எமக்கு
 நீயே  உலகமானாய்!

புரட்சிப் பாதையில்
பூத்த
புதிய புதுமையே!
உளி கொண்டு
மனித மனங்களை  
செதுக்கிய சிற்பியே !

சொல்லோவியமாய்!
மொழியை விதைத்த
வித்தகனே !
இருபதாம் நூற்றாண்டு 
இளைய கவியே!
ஆகாயமே! 
வாழிய! வாழியவே!

 

  -பேரா.சு.கிரிஜா
உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை (சுயநிதிப் பிரிவு)
திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் கல்லூரி.
தெ.கள்ளிகுளம்.