கவிஞர் சைலஜாவின் என்னுள்ளே ஒரு தேடல் கவிதைகள்

கவிஞர் சைலஜா கவிதைகள்

கவிஞர் சைலஜாவின் என்னுள்ளே ஒரு தேடல்  கவிதைகள்

என்னுள்ளே ஒரு தேடல் – ஒரு விளக்கம்

"என்னுள்ளே ஒரு தேடல்" எனும் தலைப்பில் 80 கவிதைகளை எழுதியேன். இந்த தலைப்பு எனக்கென்று ஏன் தோன்றியது? ஒரு தேடல்... தமிழ் மொழியில் ஒரு வார்த்தையின் முடிவில் இன்னொரு வார்த்தை பிறக்கிறது. இந்த தேடல் முடிவில்லாதது. தமிழில் ஒரு வார்த்தையின் பின் இன்னொரு வார்த்தை தொடங்கி அதிலிருக்கும் பெருமை வெளிப்பட வேண்டுமென்ற எண்ணமே என்னை எழுத்து பக்கம் அழைத்தது.

தமிழ் ஒரு மொழியாக அல்ல, உணர்வாக, ஒரு பிரபஞ்சமாக எனக்குள் எழுந்தது. அதனால்தான், ஒரு வார்த்தையும் மீண்டும் இடாமல் 80 கவிதைகள் எழுதும் முயற்சி செய்தேன். தமிழ் சொற்களின் ஆழமும் இசையும் அந்தப் பாசமிக்க தேடலின் வழியாக வெளிவரவேண்டும் என்பதே என் நோக்கம்.

தமிழ் மொழியின் பெருமையைப் பற்றி பலரும் எழுதியுள்ளனர். அவர்களில் சிலர், அவர்கள் கூறிய சிறப்பான கருத்துகள், மற்றும் அவர்கள் காலகட்டம் பற்றிய விவரங்களை பார்க்கலாம்

1. தொல்காப்பியர் (முதலாம் நூற்றாண்டு கி.மு.)

தமிழின் மிகப் பழமையான இலக்கண நூல் "தொல்காப்பியம்" என்ற பெயரில் தொகுக்கப்பட்டது.

தமிழ்மொழியின் மரபு, இலக்கணம், செந்தமிழ் பண்புகள் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.

அவர் கூறியது:

 "தமிழ் எப்போதும் வளர்ச்சியடையும் மொழி, அதற்குள் எண்ணற்ற இலக்கியச் செல்வங்கள் பிறக்கின்றன."

2. திருவள்ளுவர் (கி.பி. 1-2ம் நூற்றாண்டு)

"திருக்குறள்" எனும் இலக்கியத்தின் மூலம் தமிழ் மொழியின் ஆழத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

அவர் கூறியது:

 "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி" – தமிழ் மொழியின் அடிப்படை தன்மையை இது வெளிப்படுத்துகிறது.

3. அவ்வையார் (பழைய மற்றும் நடு காலம்)

தமிழ் மொழியின் இனிமை, அறம், நடத்தை ஆகியவை பற்றி எழுதிய சிறப்பான பெண் கவிஞர்.

அவர் கூறியது:

 "கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு." – தமிழ்மொழியின் செல்வம் அளப்பரியது.

4. கம்பன் (கி.பி. 9-10ம் நூற்றாண்டு)

"கம்பராமாயணம்" மூலம் தமிழின் இலக்கிய வளத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்டினார்.

அவர் கூறியது:

"தமிழொடு தெளிவுநின்று தாமரைக்கண் சாத்திற்றே." – தமிழின் இனிமை தாமரையின் மென்மையைப் போல் உள்ளது

5. சுப்பிரமணிய பாரதி (1882-1921)

தமிழ் தாயின் பெருமையைப் பற்றி தனது கவிதைகளில் பாடியவர்.

அவர் கூறியது:

"தமிழுக்கென்று தனி உலகம் உருவாக வேண்டும்

6. உ வே சாமிநாதையர் (1855-1942)

தமிழ் பழமையான இலக்கியங்களை சேகரித்து உலகிற்கு அறிமுகப்படுத்திய தமிழ் அறிஞர்.

அவர் "தமிழில் மறைந்த நூல்களை மீட்டெடுத்தவர்" என்று அழைக்கப்படுகிறார்.

அவர் கூறியது:

 "தமிழின் செல்வம் ஒளியால் அளவிட முடியாதது!"

7. இரா. பி. சித்தார்த்தன் (நவீன தமிழ் அறிஞர்)

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அதன் பெருமைக்கும் ஆராய்ச்சிப் பதிவுகள் செய்தவர்.

அவர் கூறியது:

 "தமிழ் உலகத்தின் முதன்மை மொழிகளில் ஒன்றாகும், அது தொன்மையானதோடு அறிவியல் நுட்பமும் கொண்டது."

தமிழ், எப்போதும் ஒளிரும் ஒரு சந்திரன். அது காலத்தால் அழியாததொரு நதியாகவும், சந்ததிகளுக்கு வாழ்க்கை தரும் பசுமை நிலமாகவும் திகழ்கிறது.

இந்த "என்னுள்ளே ஒரு தேடல்" எனும் கவிதைத் தொகுப்பு, தமிழின் அழகை மட்டுமல்ல, அதன் அடர்த்தியையும், ஆழத்தையும் உணர்த்தும் ஒரு பயணமாக அமைந்தது.

என்னுள்ளே ஒரு தேடல்

தமிழே!

உன் பெயரை ஓரெழுத்தாக நான்கடிக்க,

ஒவ்வொரு எழுத்தும் ஓர் உலகம் ஆனதே!

ஒரு வார்த்தை பிறக்க, இன்னொன்று தோன்ற,

என் நினைவில் நீயே முழுதாய் ஓடியதே!

அகர முதல எழுத்தாக வந்து

ஆதியை நீயே அரும்பட வைத்தாய்,

ஒலியின் ஓசையாய் பரந்தெழுந்து

உலகமெங்கும் நீயே தொண்டெழுப்பினாய்.

 

தமிழின் கருவியில் கணக்கில்லா சொற்கள்,

அவை ஒவ்வொன்றும் ஓர் அழகிய முத்து,

தொட்டவன் கையில் தான் இருக்குமோ?

நீருள் ஒளிரும் மணிக்கல் அது!

 

காணாத தேடலாய் எங்கோ பயணிக்க,

களிப்பாய் மொழிதர, வரிகள் கலிக்க,

உணர்வுகள் ஒவ்வொன்றாய் உயிர்த்தெழ,

உன் எழுத்தில் என் உயிர் ஒடிக்க!

 

இதோ, என் தேடல் முடிவில்லா

அது தமிழின் பேரழகைத் தேடி,

ஒரு வார்த்தை இன்னொன்றை அழைக்கும்,

என் கவிதை நீயே தொடர்ந்து சொல்லடி!

1.நிலா

நீ தொட முடியாத தூரத்தில் நிற்கின்றாய்

உன் சிரிப்பால் மயக்குகின்றாய்

நீ இரவில் கதாநாயகனாக ஆகின்றாய்

உன் அழகை ரசிக்க தூண்டுகின்றாய்

நீ பிறையாய் வெளிச்சம் தருகின்றாய்

உன் இருளில் நினைவுகளை நினைக்க செய்கின்றாய்

நீ விடியலுக்கு நடுவே ஜொலிக்கின்றாய்

உன் வருகையை காண காக்க வைக்கின்றாய்!!!!

2.சூரியன்

அதிகாலை உதயம் நீ

ஆதவனின் அருள் நீ

பூக்களின் புன்னகை நீ

வெப்பத்தின் வெளிச்சம் நீ

தாவரங்களின் வளர்ச்சி நீ

கிரகங்களின் முதல்வன் நீ

மனிதனுக்கு சக்தி நீ

பிரபஞ்சத்தின் தலைவன் நீ

3.காற்று

உயிரினங்களுக்கு உயிர் கொடுப்பவன்

என்னை சுவாசிக்க வைத்தவன்

தென்றலாய் வீசி மனதை வருடியவன்

பருவத்துக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்பவன்

விண்வெளியில் இருந்து பாதுகாப்பவன்

சூறாவளியாக வந்து பயங்காட்டியவன்

கண்களால் காண முடியாதவன்

தழுவி சுகம் தூண்டுபவன்

4.நீர்

நீ இல்லாமல் உணவு இல்லை

நீ இல்லாமல் உடை இல்லை

நீ இல்லாமல் இருக்கும் இடம் இல்லை

நீ இல்லாமல் தூய்மை இல்லை

நீ இல்லாமல் இயற்கையும் இல்லை

நீ இல்லாமல் உயிர்களும் இல்லை

நீ இல்லாமல் வாழ்க்கை இல்லை

நீ இல்லாமல் உலகம்

இயங்குவதில்லைமண்

5.மண்

உன் வாசனைக்கு நிகர் எது?

உன்னை தொடாத பாதம் எது?

உன்னில் நுழையாத வேர் எது?

உன்னில் அடங்காத உடல்கள் எது?

உன் மேல் படாத நிழல் எது?

உன் நிறத்திற்கு ஈடாவது எது?

உன்னைப்போல் உருவம் தருவது எது?

உன்னை போன்று சரித்திரம் படைத்தது எது?

6.நெருப்பு

அருகில் இருந்தால் எரித்து விடுவாய்

கண்ணால் பார்த்தால் மயங்கி விடுவாய்

எளிதாய் பரவிடுவாய்

சூரியன் போல் சுட்டு விடுவாய்

நீராய் வந்தாய் அணைந்திடுவாய்

மனிதன் தேவைக்கு உதவிடுவாய்

கோயிலில் ஜோதியாய் எரிந்திடுவாய்

திருவிழாக்களில் வெளிச்சம் தந்திடுவாய்

7.மழை

உன்னை கண்டால் மயிலும் தோகையே விரிக்கும்

உன்னைக் கண்டால் மேகங்கள் மிருதங்க வாசிக்கும்

உன்னை கண்டால் இயற்கையும் புன்னகைக்கும்

உன்னை கண்டால் ஏரிகள் பெருகும்

உன்னை கண்டால் காகித கப்பல் மிதக்கும்

உன்னை கண்டால் வானவில்லும் ஜொலிக்கும்

உன்னை கண்டால் காமம் ஜன்னலை திறக்கும்

உன்னைக் கண்டால் கவிஞனையும் காதலிக்க வைக்கும்

8.வானம்

எல்லையில்லா அடையாளத்தை கொடுத்தது நீதானே

நட்சத்திரங்கள் விளைவைத்தது நீதானே

நிலா சோறுக்கு தந்தது நீதானே

மழைக்கு காரணமாக இருந்தது நீதானே

ஆராய்ச்சிக்கு நாயகனாய் திகழ்ந்தது நீதானே

கிரகங்களுக்கு ஏற்றவாறு பிரகாசித்தது நீ தானே

கற்பனைக்கு வடிவம் அளித்தது நீதானே

ஆண்டு முடித்தவர்களை சேர்ந்தது நீதானே

9.மரம்

நிழல் தந்து நிற்கின்றான்

சுவாசிக்க காற்றை தருகின்றான்

குழந்தைகள் விளையாட உதவுகின்றான்

மருந்துகளை தயாரிக்க பயன்படுகின்றான்

மழைக்கு காரணமாக இருக்கின்றான்

உணவை தயாரிக்க எரிகின்றான்

பறவைகளுக்கு சரணாலயமாக அமைகின்றான்

தெய்வமா வணங்க வைக்கின்றான்

10.கடல்

வானோடு தொடும் பிம்பத்தை ரசித்தாயா

அறுசுவைக்குள் ஒன்றே ருசித்தாயா

அலைகள் தழுவுவதை கண்டு வியந்தாயா

சிற்பிகள் ஒதுக்குவதை கண்டாயா

உப்பு காற்றை உணர்ந்தாயா

கப்பல்கள் தவழ்வதை பார்த்தாயா

மீனவர்களுக்கு வாழ்வை கொடுத்தாயா

அழகினை ரசிக்க மனிதர்களை வர வைத்தாயா

11.நதி

ஓடிய இடங்களை பாதையாக்கியவள்

இயற்கை வளத்திற்கு முக்கியமானவள்

மனிதனின் தாகத்தை தணிப்பவள்

மீன்களுக்கு உணவுவினை அளிப்பவள்

விலங்குகள் வாழ உதவுபவள்

மலைகளின் பாய்ந்து வருபவள்

அருவியாய் மகிழ்ச்சியை தருபவள்

கங்கை தாயாய் இருப்பவள்

12.மலை

பூமியின் மேல்பரப்பினை கொண்டிருந்தவனே

நீரை சேமிக்கும் ஊற்றானவனே

முனிவரின் தவத்திற்கு முக்கியமானவனனே

சிரஞ்சீவி மூலிகையை மருந்தாக்கியவனே

அழகாள் மனதை மகிழ்விப்பனே

நதிகளின் உருவாக்குபவனே

விலங்குகளுக்கு அடைக்கலம் தந்தவனே

பழங்குடி மக்களுக்கு தெய்வமானவனே

13.பாலைவனம்

இவன் அதிக வெப்பநிலையை கொண்டிருப்பவனோ

இவன் இரவில் குளிர்ச்சியை கொடுப்பவனோ

இவன் ஒட்டகத்தின் சவாரி செய்பவனோ

இவன் தொல்பொருள் ஆராய்ச்சிக்கு ஈர்ப்பானவனோ

இவன் தாவரங்களின் வளர்ச்சி இல்லாதவனோ

இவன் தண்ணீரைத் தேடி அலைபவனோ

இவன் சூரிய ஒளியின் மீது குடியிருப்பவனோ

இவன் உலக அதிசயங்களில் ஒன்றானவனோ

14. பசு

தாயின் மறு உருவமாக பார்க்கிறோம்

கோமியத்தை மருத்துவத்துக்கு பயன்படுத்துகிறோம்

வீடுகளில் கிரகப்பிரவேசத்திற்கு வரவேற்கிறோம்

பாலில் இனிப்பு உணவுகளை தயாரிக்கிறோம்

சாணத்தை வயல்களில் உரமாக்குகிறோம்

தைத்திருநாளில் தெய்வமாகக் கொண்டாடுகிறோம்

வீட்டு விலங்காக வளர்க்கிறோம்

காமதேனுவாக வணங்கி வருகிறோம்

15.யானை

இறைவனை ஊர்வலமாக அழைத்துச் செல்கிறது

குறிஞ்சி நிலத்திற்கு பெருமை அளிக்கிறது

போர்க்களில் மன்னர்களுக்கு வெற்றியை தீர்மானிக்கிறது

காட்டையே உருவாக்கும் ஆற்றல் படைத்திருக்கிறது

விதைப் பரவலால் வனத்தை செழிக்க ச் செய்கிறது

நினைவுத்திறன் மிகுந்த சக்தியை பெற்றிருக்கிறது

தனக்கென்று தனி பாதையை உருவாக்கிறது

இருந்தாலும் இறந்தாலும் பயனுள்ளதாக இருக்கிறது.

16.மயில்

உன் கவர்ச்சியாய் ஈர்க்கின்றாயே

தேசிய பறவையாய் இருக்கின்றாயே

மழையில் நடனம் ஆடுகின்றாயே

வானில் பறந்து செல்கின்றாயே

தோகையை விரித்து வருடுகின்றாயே

புராணங்களில் இலக்கணம் வைக்கின்றாயே

கிராமிய நடனங்களில் பங்கேற்றாயே

முருகனின் வாகனமாய் நின்றாயே

17.கோழி

உதயத்துக்கு முன் கூக்குரல் இசைப்பான்

ஆனந்தமாய் விவசாயிகளை அழைப்பான்

செல்லப்பிராணியாக இருப்பான்

முட்டையிட்டு குஞ்சுகளை காப்பான்

கரு நாகத்தை பகைப்பான்

உடலுக்கு ஊட்டச்சத்து தருவான்

ஆகாய கருடனை எதிர்ப்பான்

ஆறுமுகனுக்கு கொடிய பறப்பான்

18.அன்னப்பறவை

வெள்ளை நிற தேவதையோ

பாலில் லிருந்து நீரை பிரித்தாயோ

நடனத்தால் ஈர்க்கச் செய்தாயோ

புராணங்களில் பொக்கிஷமா இருந்தியோ

கலைகளில் காவியமாய் திகழ்ந்தியோ

அமைதியான சூழ்நிலையை விரும்பினாயோ

பெண்களின் நடைக்கு உதாரணமானையோ

கல்விதெய்வத்தின் அருகில் நின்றயோ

19.புறா

இவள் அமைதிக்கு அடையாளமானவளே

காதலர்களுக்கு தூது செல்பவளே

அன்பின் பிரதிநிதி ஆனவளே

போர்களில் செய்தியை சேர்ப்பவளே

கலாச்சாரத்துக்கு முக்கிய காரணமானவளே

இவளை இலக்கியத்தில் சித்தரிக்கப்பட்டவளே

வீட்டில் செல்லமாக வளர்க்கப்படுபவளே

உலகப் போரில் கௌரவிக்கப்பட்டவளே

20.கிளி

அழகால் பார்ப்பவரை மயக்கிடுவாள்

ஒலியை வேகமாக கற்றிடுவாள்

கால்களால் உணவை உண்டிடுவாள்

எதிர்காலத்தை கணித்து கூறிடடுவாள்

பார்வையால் மகிழ்ச்சியை தந்திடுவாள்

குரலால் நெஞ்சை இசைத்திடுவாள்

பெண்களின் மனதை கவர்ந்திடுவாள்

மீனாட்சி கையில் இருந்திடுவாள்...

21.சிங்கம்

காட்டுக்கு ராஜாவாக இருக்கின்றவன் இவன்

அழகும் கம்பீரமும் கொண்டிருக்கின்றவன் இவன்

கர்ஜிக்கும் திறன் மிகுந்திருக்கிறவன் இவன்

தேசிய விலங்காய் வீற்றிருக்கின்றவன் இவன்

எதிர்பார்த்து எதிரிகளை வேட்டையாடுகின்றவன் இவன்

வாசனை மூலம் உறவுகளை அணைக்கின்றவன் இவன்

வாழ்க்கையை கூட்டமாகவே அமைத்திருக்கும்

பத்ரகாளியின் வாகனமாக அமர்ந்திருக்கின்றவன் இவன்

22.குதிரை

தன் அழகால் கவருவான்

தடைகளைத் தாண்டி ஓடுவான்

மன்னர்களுக்கு தளபதியாக ஆவான்

மனிதனின் போக்குவரத்துக்கு உதவுவான்

எதிரிகள் சத்தத்தை அறிவான்

நின்று கொண்டே தூங்குவான்

கடற்கரையில் சவாரி செய்திடுவான்

காக்கும் தெய்வத்தின்

23.குரங்கு

மரத்திலிருந்து மரம் தாவுவேன் இவனோ

பழங்களை விரும்பி உண்ணுவேன் இவனோ

குழந்தைகளோடு அன்பாக பழகுவேன் இவனோ

மனிதர்களோடு நெருக்கமாக வாழ்வேன் இவனோ

புத்திக்கூர்மையில் மனிதர்களை மிஞ்சுவேன் இவனோ

ஹனுமான் வடிவம் ஆவேன் இவனோ

விஞ்ஞானிகளுக்கு ஆராய்ச்சிக்கு பயன்படுவேன் இவனோ

ஸ்ரீ ராமனை அருளால் வாழுவே இவனோ

24.மான்

காடுகளில் துள்ளித்துள்ளி ஓடுபவனோ இவனா

கூட்டமாக கூடி வாழ்பவனோ இவனா

சிங்கத்தைக் கண்டாய் ஒழிபவனோ இவனா

கவனத்தை ஈர்க்க செய்பவனோ இவனா

அழகிய கொம்புகளை கொண்டவனோ இவனா

அலங்கார பொருள்களுக்கு பயன்படுபவனோ இவனா

புராண கதைகளில் பேசப்பட்டவனோ இவனா

சீதாதேவி மனதிற்கு பிடித்தவனோ இவனா

25. நாய்

வீட்டில் செல்ல பிராணியாக வளர்கின்றேன்

முதலாளிக்கு விசுவாசமாக இருக்கின்றேன்

தீயசக்தியை பார்த்தால் குரைக்கின்றேன்

இரவு முழுவதும் காவல் காக்கிறேன்

திருடர்கள் வராமல் பாதுகாக்கிறேன்

குழந்தைகளோடு அன்பாய் விளையாடுகின்றேன்

நன்றிக்கு இலக்கணமாக திகழ்கின்றேன்

பைரவருக்கு வாகனமாக நிற்கின்றேன்

26.இறைவன்

ஆலயங்கள் அமைகின்றோம் நீ வருவாய் என

பூஜைகள் செய்கின்றோம் நீ வருவாய் என

தேர்களை இழுக்கின்றோம் நீ வருவாய் என

திருவிழாக்களை நடத்துகின்றோம் நீ வருவாய் என

இசைகளை இசைக்கிறோம் நீ வருவாய் என

விரதங்களை இருக்கிறோம் நீ வருவாய் என

மனதால் நினைக்கிறோம் நீ வருவாய் என

அன்னதானங்கள் செய்கின்றோம் நீ வருவாய் என

27. அன்பு

அள்ள அள்ளக் குறையாத இருப்பவன் இவன்

வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு முக்கியமானவன் இவன்

உணர்வுகளின் பரிமாற்றம் செய்பவன் இவன்

வலிமையான உறவுகளை ஈர்ப்பவன் இவன்

சமாதானத்துக்கு பிறப்பிடம் இருப்பவன் இவன்

ஆபத்தின் போது உதவிட எண்ணுவான் இவன்

தன்னலம் கருதாமல் பேணுவான் இவன்

அமைதியான உலகை உருவாக்குவான் இவன்

28. அப்பா

மண்ணில் முளைக்க விதையானவர்

வளர்ச்சிக்கு ஆலமரமாய் திகழ்பவர்

ஆசானாய் அறிவுரை சொல்பவர்

தேவைகளை அறிந்து செய்பவர்

அரவணைப்பில் தாயாக இருப்பவர்

துன்பத்தில் நண்பராக நிற்பவர்

அளவிலாத பாசத்தை தருபவர்

வாழ்க்கையை குழந்தைக்காக அர்ப்பணிப்பவர்

29.அம்மா

கருவில் வெளிச்சம் தந்தவள் நீயே

வலிகள் தாங்கி பெற்றெடுத்தவள் நீயே

இமையாய் என்னை காற்றவள் நீயே

தாய்ப்பாலில் நம்பிக்கை விதைத்தவள் நீயே

குடையாய் துன்பத்தை தாங்குபவள் நீயே

இமயமாய் இன்பத்தை தருபவள் நீயே

உறவுக்கு ஏணியாய் இருப்பவள் நீயே

கண்முன்னே வாழும் தெய்வம் நீயே

30. கணவன்

வாழ்க்கை பயணத்துக்கு அர்த்தம் அவரே

பெண்மையை உணர செய்தவர் அவரே

பாதுகாப்பு வளையமாக இருப்பவர் அவரே

இன்பத்தின் சொர்க்கவாசல் ஆனவர் அவரே

துன்பத்தில் அரவணைத்து நிற்பவர் அவரே

குடும்பத்தில் நட்சத்திரமாக ஜொலிப்பவர் அவரே

நமக்கு நம்பிக்கை கொடுப்பவர் அவரே

கடவுளாக நம்மோடு வாழ்பவர் அவரே

31. மனைவி

குடும்பத்தை கோபுரமாக உயர்த்துபவள் அவளே

அன்னபூரணியாக அமிர்தத்தை படைப்பவள் அவளே

மகிழ்ச்சிக்கு இருப்பிடமாக திகழ்வுகள் அவளே

பொறுமைக்கு பிறப்பிடமாய் இருப்பவள் அவளே

சுமைகளை தோளில் தாங்குபவள் அவளே

தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக. இயங்குவள் அவளே

தாயின் மறு உருவமானவள் அவளே

வீட்டில் தெய்வமாக வாழ்பவள் அவளே

32. அண்ணன்

தந்தையின் சுமையை சுமப்பவன் இவனே

தாயாய் குடும்பத்தை அரவணைப்பவன் இவனே

ஆசானாய் அறிவுரைகளை கூறுபவன் இவனே

ஆலமரமாய் துன்பத்தில் நிற்பவன் இவனே

மகிழ்ச்சியின் நீரூற்றாய் இருப்பவன் இவனே

உறவுகளுக்கு பாலமாய் அமைப்பவன் இவனே

தேவைகளை அறிந்து நிறைவேற்றுவான் இவனே

சேவகனாய் வாழ்நாட்களை கழிப்பவன் இவனே

33.காதல்

முகம் ஆனந்தத்தில் பூத்திருக்குமே

கண்கள் பளிச்சென்று ஜொலிக்குமே

புன்னகையால் மகிழ்ச்சி நிறைந்திருக்குமே

சூரியனின் வெப்பம் நிழலாகுமே

நிலவின் இருள் வெளிச்சமாகுமே

மழையின் ஓசை இசையாகுமே

மனதில் பிம்பங்கள் நடனமாடுமே

சொர்க்கம் கண்முன்னே திறந்திருக்குமே

34.பெண்

குடும்பத்தில் நட்சத்திரமாக மின்னுபவள் அவள்

காவியம் உருவாக காரணமானவள் அவள்

கவிதையின் பிறப்பிடமாய் இருப்பவள் அவள்

சிற்பங்களில் ஓவியமாக நிற்பவள் அவள்

மழையாய் அன்பை பொலிவள் அவள்

உலகத்தையே தோளில் தாங்குவள் அவள்

தெய்வங்களாக கோயில்களில் காட்சியளிப்பவள் அவள்

படைப்பவனின் உடலில் பாதியானவள் அவள்

அழகால் சொர்க்கத்தையே வீழ்த்துபவள் அவள்...

35. கண்ணீர்

உணர்வுகளை வெளிக்காட்ட உதவிடுவானே

துன்பத்தில் வெளியே வந்துவிடுவானே

இன்பத்தின் ஆழத்தை வெளிப்படுத்துவானே

கண்களே ஆரோக்கியமாக வைத்திடுவானே

வலியால் உணர்ச்சிகளை வெளிகாட்டிடுவானே

உறக்கத்திற்கும் காரணமாக இருந்திடுவானே

மன அழுத்தத்தை குறைத்திடுவானே

மற்றவர்கள் அன்பை பெற்றுவிடுவானே

36.காமம்

சொர்க்கத்தின் வாசலாக உணர்வது

உணர்வுகளின் உச்சகட்டமாக. இயங்குவது

அன்பின் பரிமாற்றமாக இணைவது

உறவுகளின் பாலமாக அமைவது

அரசாங்கம் கவிழ்வதற்கு காரணமாவது

உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது

மனதிற்கு புத்துணர்ச்சி வழங்குவது

உலகமே மயங்கி வாழ்வது

37. சிரிப்பு

முகத்தை அழகாக காண்பிப்பது

மகிழ்ச்சியாக இருப்பதை தெரிவிப்பது

அழகை ரசித்தால் புன்னகைப்பது

காதல் உணர்வை நினைப்பது

மனதை புத்துணர்ச்சியாக வைப்பது

நோய்களுக்கு மருந்தாக இருப்பது

ஆனந்தத்தில் உச்சமாக காண்பது

தெய்வீக கடாசத்தை கொடுப்பது

38. ஆலமரம்

வேர்கள் நிலத்தின் ஆழத்தை தொடும்.

ஆயுர்வேதத்தில் நோய்களுக்கு மருந்தாக பயன்படும்.

புத்தருக்கு தியான இடமாக இருந்திடும்.

இந்தியாவில் பாரம்பரிய சின்னமாக நின்றிடும்.

வெப்ப காலங்களில் இளைப்பாற செய்திடும்

ஆற்றங்கரையில் விநாயகருக்கு நிழலாய் அமைந்திடும்.

சாதுவர்கள் தங்குமிடமாக திகழ்ந்திடும்.

விழுதில் சிறுவர்கள் விளையாட உதவிடும்.

39.வேப்பமரம்

பற்களை வலுப்படுத்த பயன்படுத்தலாம்

இலைகளை மாலையாக பயன்படுத்தலாம்

எண்ணெயை விளக்கேற்ற பயன்படுத்தலாம்

வீட்டின் கதவுகளுக்கு பயன்படுத்தலாம்

பூவை சமையலுக்கு பயன்படுத்தலாம்

விதையை வைத்தியத்திற்கு பயன்படுத்தலாம்

கர்ப்பிணிகளுக்கு வளையலாக பயன்படுத்தலாம்

ஆன்மீக காரியங்களுக்கும் பயன்படுத்தலாம்

40.வாழைமரம்

சுப நிகழ்ச்சிக்கு தோரணங்களை அழகுப்படுத்தும்

மண்ணில் நீர் மேலோட்டத்தை மேம்படுத்தும்

நோய் எதிர்ப்பும் சக்தியை அதிகப்படுத்தும்.

வாழை இலை சாப்பிடுவதற்கு பயன்பபடுத்தும்

வாழைத்தண்டு தசைகளை வலுவடைய உறுதிப்படுத்தும்

குடலுக்கு வாழைக்காய் நன்மைகளை ஏற்படுத்தும்

வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்தை மேன்மைப்படுத்தும்

வாழை நாரை வைத்து பூக்களை அலங்காரப் படுத்தும்