காமராசர் பிறந்த நாள் கவிதை..

காமராசர் பிறந்த நாள் கவிதை..

உழைப்பால் உயர்ந்த வல்லவர் இவரே! 
ஊருக்கு உழைத்த உத்தமர் இவரே! 
நாட்டிற்கு வாழ்ந்த நல்லவர் இவரே! 
கருமைக்கு பெருமை சேர்த்த... 
விருது நகரின் விருது படித்தவர் 
போற்றும் படிக்காத மேதை..! 
அடுத்தவரை அரசனாக்கி ஆளவைத்து.. 
வரலாறு படைத்தும் வாடகை வீட்டிலேயே 
வாழ்ந்திட்ட ஏழை..! 
நாட்டு மக்களின் நலம் ஒன்றே 
அவருக்கு துணையானதால் இல்லறத்தை 
மறந்து வாழ்ந்த பிரம்மசாரி..!! 
குலக்கல்வியை அகற்றி மதிய உணவு திட்டம் 
கொண்டு வந்து படிப்பவர் எண்ணிக்கையை 
உயர்த்தி அறிவுக் கண்ணைத் திறந்தவர்..! 
மனிதருள்மாணிக்கமே பெருந்தலைவா...
என் காமராஜரே 
உன் போல் உயர்ந்தவர் 
இனி யொருவர் பிறப்பாரோ? 
சட்டங்கள் கற்றதில்லை பட்டங்கள் பெற்றதில்லை!! 
திட்டங்கள் பலகோடி தந்துவிட்ட அறிவு பெட்டகமே!!  
கல்விக்கு முக்கியத்துவம் அளித்த கர்ம வீரரே! 
காலத்தை வென்ற காவியமாய் வாழும் தலைவரே! 
ஊர் போற்ற வாழ்ந்த தலைமையே ! 
ஏழை எளியோருக்கு உதவிய மேன்மையே! 
விருதுநகரில் உதித்த உதயமே !
மக்களை கவர்ந்த இதயமே! 
ஆட்சி அனுபவம் பெற்ற இமயமே !
படிக்காத மேதை அதிக ஆளுமையே! 
உணவுத் திட்டத்தை உருவாக்கிய உன்னதமே! 
அந்நியரை எதிர்த்து நின்று அவரே 
அகிம்சை முறையில் வென்றவரே! 
அதனால் தான் பெரும் தலைவர் ஆனார் 
காமராஜர், 
ஏழைகளின் தலைவர் அவர் தானே! 
எங்களின் வழிகாட்டியும் அவர் தானே! 
வாழ்க தமிழ், வளர்க தமிழ்! 
 -வி. கணேஷ் பாபு, ஆரணி