பெற்றால் தான் பிள்ளையா..? 019

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதைப் போட்டி

பெற்றால் தான் பிள்ளையா..? 019

"பெற்றால்தான் பிள்ளையா"

உயர்நிலை பள்ளியில் உன்னத ஆசிரிய பணியில்!
தம்பதிகள் இருவரும் ஆசிரியர்களாய் பணியாற்றி வரும்!

சுதாகர் சுசிலாவும்
இருவரும் ஒருமித்த கருத்துக்களால் ஒருங்கிணைந்தனர்! இல்லற தம்பதிகளாய்!

நாட்கள் பல கடந்தன! ஆண்டுகளை தொடர்ந்தன! ஆனாலும் இவர் இவர்கள் வாழ்க்கையில் இல்லற வரவு இல்லாது இருந்தது!

இருவர் தம்மில் மனக்கஷ்டங்கள்! ஏராளம் !!
இருவரும் ஆசிரியர் பணிகளில் இருப்பதால் பணமோ தாராளம்!

செல்லக் குழந்தைகள் இல்லாதது! இவர்களுக்கு மனதில் பெருத்த சஞ்சலம்!

சுசிலாவும் ,சுதாகரும் வேண்டாத தெய்வங்கள் இல்லை! ஏறாத கோயில்கள் இல்லை! செலவளிக்காத காசுகளும் இல்லை! ஆனாலும் இவர்களுக்குள் குழந்தை பாக்கியம் இல்லாதது பெரும் தொல்லை!

சுசிலா ஒரு நாள்
பக்கத்து வீட்டு குழந்தையை ஆசையோடு! அனைத்து தூக்கி கொஞ்சிக் கொண்டிருக்கிறாள்!

அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரம்மா ருக்மணி!
என்னம்மா! சுசிலா நீ எல்லாம் இந்த குழந்தையை தூக்கக்கூடாது! தவம் இருந்து பெற்று எடுத்த குழந்தை! முதன்முதலாக கோவிலில் முடி காணிக்கை செலுத்த போகிறோம்! உன் கையில் இருந்து வாங்க கூடாது! உனக்கும் 15 வருடம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாத மலடி !என்று கண்ணெதிரே சொல்லிவிட! கலங்கிக்கொண்டு விட்டுக்குள் சென்றாள்!

சுதாகர் அவள் நிலை கண்டு பயங்கர கோபம் கொண்டு! பக்கத்து விட்டாரோடு சண்டை போட்டுக் கொண்டார்!

அடுத்த மாதமே அந்த தெருவில் இருந்த வீடு விற்றுவிட்டு! பக்கத்து ஊருக்கு சென்று விட்டார்கள்!

சுசிலா ஒரு நாள் இரவு தன் கணவரிடம் ஆசிரமத்தில் குழந்தைகளை எடுத்து நாம் வளர்த்து அவர்களை சீர்பட செம்மைபட !இந்த உலகுக்கு அறிமுகம்செய்வோம்! என்று சொல்ல!! சுதாகர் தலை அசைத்துக்கொண்டு! பக்கத்து டவினுக்கு சென்று அங்கிருந்து ஆசிரமத்தில் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார்கள்!
பெயர் ராஜன்!!

ராஜன் மிடுக்கான குழந்தை !அழகிலும்
அறிவிலும்!

இருவரும் ஆசிரியர் பணி என்பதால் குழந்தை வளர்ப்பதற்கு ஒரு அன்பான பெரிய மூதாட்டியை வைத்துக் கொண்டார்கள்!

ராஜன் நாள்ளொரும் மேனியும் !பொழுது ஒரு வண்ணம்மாய் வளர்ந்து வர! இவர்களுக்குள் சந்தோசம் அளவில்லா அன்பு கடலாய் அலை வீசிவர!
ஐந்து வயதை தாண்டி ஆறாவதாய் அடியெடுத்து வைக்க!
அவர்கள் பள்ளியிலே பையனை சேர்த்துக்கொண்டு! மூன்று பேருமாக பள்ளி சென்று திரும்பி வந்தார்கள்!

ராஜன் வந்ததிலிருந்து அவர்களுக்கு அளவில்லா ஆனந்தம்!
 அவனைக் கொண்டு பொழுதுகள் இன்பமாய் கடந்து சென்றனவாம்!

சுதாகர் ,சுசீலா நான் ஒன்று கேட்கிறேன்! நாம் இருவரும் சம்பாதிக்கின்ற பணம் நம் தேவையை விட அதிகமாக! இருக்கிறது நம் உற்ற குழந்தைக்கும் செலவழித்தது போக மீதமாய் இருக்கிறது!

அதனால் நாம் இருக்கின்ற மாவட்டத்தை தவிர்த்து !இன்னும் வேறநாலு மாவட்டங்களை தேர்ந்தெடுத்து! அங்கே இருக்கின்ற ஆசிரமத்தில் ஒவ்வொரு குழந்தையை தத்தெடுத்து !
நாம் படிக்க வைத்து இந்த நாட்டிற்கு நாம் ஒரு நல்லதோர் இளைஞர்களை உருவாக்கி கொடுப்போம் !
என் யோசனை எப்படி இருக்கிறது !என்று கேட்க சுசிலாவும் சம்மதித்தால்! அதன்படியே பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று அவர்கள் விருப்பம் படியே ஆசிரமங்களில் ஒவ்வொரு குழந்தை தத்து எடுத்துக் கொண்டார்கள்! அதற்கு நாங்கள் தான் தாய் தகப்பன் என்று உரிமையும் போட்டுக் கொண்டார்கள்!

ராஜன் ஆரம்பப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை விளையாட்டிலும் கல்வியிலும் பேச்சுப்போட்டி எழுத்துப்போட்டி எல்லா திறமைகளிலும் முதல் மாணவனாகவே வந்து கொண்டிருக்கிறான்!

இதேபோல் நாம் தத்தெடுத்த அந்த நான்கு பிள்ளைகளையும்! வளர்க்க வேண்டும்! இது என் அளவு கடந்த ஆசை! என்று சுசிலா சுதாகரிடம் சொல்ல! வாரம் வாரம் அந்த பிள்ளைகளை போய் பார்த்துவிட்டு! அவர்களுக்கான செலவு காசுகளையும் திண்பண்டங்களையும் உடைகளையும் கொடுத்துவிட்டு வருவார்கள்!

இப்படி நாட்கள் கடந்தன !மாதங்கள் வாரங்கள் கடந்தன! மாதங்கள் கடந்தன வருடங்கள் கடந்தன! இவர்கள் விருப்பம் போல் அங்கே! இவர்கள் தத்தெடுத்த அந்த நான்கு குழந்தைகளும் இவர்கள் விருப்பம் போல் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்பது போல! மிடுக்காகவே அவர்கள் பயிலுகின்ற பள்ளியிலே முதல் ரங்கிலே வந்து கொண்டிருக்கிறார்கள்!

சுதாகரையும், சுசிலாவையும் தான் இருந்த ஊர் நண்பர்கள் பொறாமையில் பலர் பார்க்கிறார்கள்!
 சிலர் பாராட்டுகிறார்கள்!

தான் பெற்ற பிள்ளைகளை கூட அந்த அளவுக்கு பாசமாய் மற்றவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் !!தான் பெறாத !பெற்றெடுத்த பிள்ளைகளை! கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்கள் மாதத்தில் ஒரு முறையோ ஆண்டுக்கு ஒரு முறையோ !எல்லா பிள்ளைகளையும் வீட்டில் அழைத்து வந்து நன்றாக உபசரித்து அண்ணன் தம்பி உறவுகளை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து! அம்மா! அப்பா பாசங்களை பகிர்ந்து? கொடுத்து அவர்களை வளர்த்து வர!!

வாலிப பருவம் வந்தது அனைவருமே கல்லூரி படிப்பிலே சிறந்து வளர்ந்தார்கள்!

ஐந்து மாணவர்களும் ஐந்து விதமான பாடங்களில்! தலைசிறந்த விளங்க வேண்டும் !அப்படி தலைசிறந்த விளங்கி நாம்! நம் பிள்ளைகள் இந்த நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும்! இதுபோல் அனாதை ஆசிரமங்கள் இனி வரக்கூடாது! என்பதற்கு நாம் ஒரு சமூக சேவையாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்! கைவிடும் கணவன் மார்களையும்! மனைவிமார்களையும் கண்டுபிடித்து குழந்தையின் பரிதவிப்பை சொல்லிக் கொடுத்து அவர்களை திருத்தி! அவரவர் கணவரோடும் மனைவியோடும் வாழும்படி நாம் சமூக சேவையாக செய்வோம் !
அனாதை இல்லத்தை உருவாக்காது! அவரவர் வீட்டிலே அடைக்கலம் போக வைப்போம் !
இது நம் நாட்டுக்கு செய்ய வேண்டிய ஒரு சேவை !என்று அந்த மாணவர்களுக்கும் தன் பிள்ளைகளாகிய அந்த செல்வங்களுக்கும் சொல்லிக் கொடுத்து வளர்த்து வந்தார்கள்!

ராஜன் மருத்துவ படிப்பினை மேன்மை பெற! மருத்தவராகமுயற்சி!

ராமன் ஆசிரியர் பணியிலே ஆர்வம் உள்ளவன் அவன் பட்டம் பெற்று ஆசிரியப்பணி காண ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான்!

ரகுவரன் நீதித்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று அதற்கான ஆயத்த படிப்பிலே! இயங்கிக் கொண்டிருக்கிறான்!

ராகேஷ் ஏற்ற இளைய மகன் செல்லப்பிள்ளை
விவசாயத்துறை!

இப்படி ஐந்து முகங்களும் ஒவ்வொரு துறைக்கு வேலைக்கு போக வேண்டும் என்று பட்டப்படிப்பை முடிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்!

சுதாகரன் சுசிலாவும் 5 பிள்ளைகளை பெற்று வளர்த்து அளவில்லா ஆனந்தம் அடைவதை விட !100 மடங்கு சந்தோஷப்பட்டு! தங்கள் வாழ்வை தாங்கள் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தை !தன் பிள்ளைகளுக்காக செலவு செய்கிறார்கள்!

தன் பிள்ளைகளுக்கு உண்மையும் உழைப்பும் உறுதியும்! சமூக சேவையும் மனதில் கொண்டு வளர்த்து வருகிறார்கள்!

தன்னை மலடி என்று திட்டியவர் முன்னே! அவர்கள் வியந்து பார்க்க தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! பெற்றால் தான் பிள்ளையா பெற்று வளர்த்தால் தான் சந்தோசம் அடையுமா!

வயிற்றில் சுமந்து வளர்ப்பதை விட!
உள்ளத்தில் சுமந்து உருவத்தைத் தாங்கி உருகி உருகி வளர்த்த சந்தோசம் உண்மையில் ஒரு பேரானந்தமாய்! இவர்களுக்கு பெரும் வரமாய்! கிடைத்துள்ளது !என மகிழ்ந்து கொள்கிறார்கள்!

ஐந்து மாவட்டங்களிலும் முதன்மை பெற்று கல்லூரியில் அதிக மதிப்பெண்கள் பெற்று வரும்! இந்த ஐந்து மாணவர்களும் தான் !அதில் ஏற்ற இளைய மாணவன் ராகேஷ் தமிழ்நாட்டு அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்று!
யாரும் படைக்க முடியாத சாதனையில் தன் கல்லூரி வாழ்க்கையிலே அழியா முத்திரை பதித்துள்ளார்!

ஒரு நாள் தமிழ்நாடு முதன்மை கல்வி மையத்திலிருந்து! முதல்வர் தலைமையில் அதிக மார்க்குகள் எடுத்த மாணவர்களை பாராட்டி சென்னையில் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறார்கள்!

சுதாகர் சுசீலாவிற்கு சொந்த பந்தங்கள் அவ்வளவாக இல்லை!
காதல் திருமணம் செய்து கொண்டதால் அந்த கொஞ்சம் உறவுகள் கூட அவர்களை ஒதுக்கி வைத்து பார்த்திருந்தார்கள்!

சொந்த ஊர் காரர்கள் கூட இவர்கள் மேல் பொறாமையாய் தான் இருந்தார்கள்!

சென்னைக்கு முதல்வர் தலைமையில் விழா நடைபெறுகிறது!

பல கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் வந்துள்ளார்கள்!

அவரவர் பெற்றோர்கள் எல்லாம் உடன் வந்துள்ளார்கள்!

நண்பர்கள் பலரும் விழாவினை காண வந்துள்ளார்கள்!

பாராட்டு விழாவிலே பலதரப்பட்ட பரிவர்த்தனைகள் பரிமாற்றங்கள்
பரஸ்பரமான உரையாடல்கள் வாழ்த்துக்கள் பொழிந்தனர்!!

இறுதியாக மாநில அளவில் எல்லா பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் வாங்கி முதன்மை மாணவனாக இடம் பிடித்த ராகேஷை! பாராட்டி அவர்களை மேடைக்கு அழைத்தார்கள்!

ராகேஷ் தனக்கு கிடைத்த பரிசுகளை
கௌரவ மாலைகளை !தன் அப்பா அம்மா கழுத்தில் அணிந்து பாதம் கால் பணிந்து விழுந்து கண்ணீர் மல்க எழுந்து !அங்கே தன் பெற்றோர் வளர்ப்பை சொல்லிபாராட்டி கொண்டான்!

ஆனால் இதுவரையிலும் ஒவ்வொரு மாணவருக்கும் அவர்கள் உடன் பிறந்த உறவுகளாகத்தான் தெரியும்! உயிராய் வளர்த்த பெற்றோர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளாகத்தான் இதுவரையில் ஐந்து மாணவர்களுக்கும் தெரியும் !
அங்கே தான் ஓர் அதிர்ச்சியும் ஆனந்தமும் காத்திருந்தது!

ராஜேஷின் பெற்றோரை அழைத்து பேச அனுமதி அளித்தார்கள்!
சுதாகர் ஏற்கனவே சிறந்த பேச்சாளர் சிறந்த தமிழாசிரியர் சிறந்த தமிழ் பற்றாளர் கதை கவிதை இலக்கியம் நூல்கள்களை இயற்றியுள்ளார்!
 தனக்கேஉரிய சொந்த பாணியில் உரையை தொடங்கினார்!

உண்மை வரலாறுகளை எடுத்து இயம்ப! கண்ணீர் மல்க
அரங்கமே அதிர்ச்சியில் வியந்து நின்றது!

தன் கருவறையில் சுமக்காத ஐந்து திருஉருவங்களை! தன் உள்ள கருவறையில் சுமந்து உயரிய விருதுகளை! மாநில அளவிலே வாங்கித் தந்த அந்த ஐம்பெரும் காப்பியங்கள்! வளர்த்து எடுத்த! வார்த்து எடுத்த !அந்த பிள்ளைகளுக்கு தான் பெறாத தாய்! பெற்றால் தான் பிள்ளையா !பெற்றால் தான் சந்தோசம் கிடைக்குமா! பெறாமலும் சந்தோசம்!  வளர்ப்பிலே வாகை சூடி!

போற்றுதல் குரிய இவர்களது வாழ்க்கை! இவர்களுடைய பிறப்பு! சாதாரணமானது! இவர்களுடைய வளர்ப்பு சாதனையானது!

அனைவர் கண்களிலும் ஆனந்த வெள்ளம்! கரைபுரண்டு ஓடியது! ஐந்து பிள்ளைகளும் அப்பா அம்மாவை தூக்கி சுமந்தனர்! அங்கே பெரும் கரகோஷம் !அன்பு அலைகள் ஆர்ப்பரிப்பும் !ஆனந்த மழையிலே! தத்தளிப்பு !
வீடு திரும்பினர் விடை பெற்று!

ஓரிரு ஆண்டுகள் கடந்தன !உயரிய பதவிகளில் தன் 5 பிள்ளைகளும் அமர்ந்தன!

தாய் தந்தைக்கு சுதாகர் சுசிலாவிற்கு ஓய்வும் வந்தது!

ராஜன் பக்கத்து நகரத்திலே உயரிய மருத்துவமனை சொந்தமாக கட்டி! இதய மருத்துவத்தில் சிறந்து விளங்கினார்!
ஏழ்மை நிலையில் உள்ளவருக்கு அந்த இருதய அறுவை சிகிச்சைகளை! குறைந்த செலவில் செய்து முடித்துக் கொண்டிருக்கிறார்!
தன் தாய் கையால் தூக்கி அன்று வாசீனப்படுத்தப்பட்ட அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வசதி இல்லாமல் ராஜனுடைய ஆஸ்பத்திரியில் அனுமதி கேட்டு அவள் தாய்வர

ராஜனுடைய அம்மா காலில் விழுந்து ஆழத் தழுவி அனுமதியுங்கள் என்று கெஞ்ச

சுசிலா அந்தப் பழமை நினைவுகளை என்னாது !ஆரத்தழுவி தன் மகன் கையால் அறுவை சிகிச்சை செய்யச் சொல்கிறாள்! இதுவோ !அதிசயம் தானே!


ஆசிரியப் பணியில் அமர்ந்த ராமனும் தான் கற்றுக் கொடுக்கும் மாணவர்களுக்கு நல்லோர் உதாரணமாய்! கல்வியில் சிறந்தவிளங்க கற்றுக் கொடுக்கும் காலத்தை விட! அதிக நேரம் எடுத்துக்கொண்டு! பல மாணவர்களை சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்!

ராஜேஷ் நீதித்துறையில் நீதியின் கைகளை கட்டி விடாது !நீதியின் கண்களை அடைக்க விடாது !
நீதியை நூல் இழையில் கட்டினாலும்! அநீதியை இரும்பு இழையில் கட்டினாலும்!  நீதியே வலுவாய் அறுந்து போகாத அளவிற்கு! கரம் கொடுக்கும் நல்லோராய் நீதி வழங்கி வருகிறார்

இரும்பு இழையை விட நூல் இலை இழுத்த பக்கமே நீதி கரம் ஓங்கி நிற்க செயல்படுகிறார்!

ரவீந்திரோ! காவல்துறையில் சிறப்பான பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்! கைதியாக வரும் நண்பர்களை அன்போடு அரவணைத்து! திருத்தி அனுப்புகிறார்!
கணவன் மனைவி தகராறுகளை நன்முறையில் பேசி தீர்த்து வைத்து இணைத்து! வாழ்க்கை நடத்த செல்கிறார்!

மது பிரியர்களை! மது போதையில் வண்டி ஓட்ட அனுமதிக்காது அழைத்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லி! நன்முறையில் உபதேசம் சொல்லி மது குடியை நிறுத்தி விடுகிறார்!

ராகேஷ் நாட்டின் முதுகெலும்பாய்  இருக்கும் விவசாயிகளுக்கு! விவசாய அவசியம் பற்றிய செய்திகளை பகிர்ந்து விவசாயத் துறைக்கு அரசு கொடுக்கும் நிதிகளையும் கொடுத்து! விவசாயத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்! அரசின் தரிசு நிலங்களை எல்லாம் விவசாய பண்ணைகளாக மாற்றி வளம் சேர்க்கிறார் !அது நாட்டுக்கு வீட்டுக்கும் தேவை என்பதை உணர்த்துகிறார் !நீர் போக்குவரத்தை சரி செய்து விவசாயிகளுக்கு ஒத்துழைத்து கொண்டிருக்கிறார்!
ஓய்வு பெற்ற இரு ஆசிரியர் தம்பதிகள் மாதம் ஒருமுறை சமூக பணி என்ற பெயரில் !
பல கிராமங்களுக்கு சென்று மக்களிடையே விழிப்புணர்வு,, அதாவது அனாதை இல்லங்கள் உருவாகாதுஇருக்க!! முதியோர் இல்லங்கள் உருவாகாது தவிர்க்க! மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ! சமூக சேவை செய்து வருகிறார்கள்!

இப்படி தன் கருவில் சுமக்காத பிள்ளைகளைக் கொண்டு !நாட்டின் கண்களை திறக்கும் வண்ணம் !நாட்டிலே முதன்மை மாணவர்களாய் விளங்கச் செய்த! இந்த தாய் தந்தைகளை பாராட்ட மனமில்லை வாழ்த்தி துதிக்கிறோம்! வணங்கி போற்றி மகிழ்கிறோம் மாணவச்செல்வங்களை!

இப்படி மகப்பேறு இல்லாத மக்களை! மலடி என்று திட்டாது இருப்போம் !மற்ற குழந்தைகளை நம் குழந்தைகளாய் பேணி பாதுகாப்போம்!
அனாதை குழந்தைகள் ,தானே முளைத்து வருவதில்லை! உருவாக்கப்படுகிறார்கள் !அறிவில்லாத ஜீவிகளால்!

அதற்கு தடை செய்வோம் !அவரவர் குழந்தைகளிடம் அன்பாய் இருப்போம்! அனைத்து குழந்தைகளையும் நம் பிள்ளைகளைப் போல் பாராட்டும்அன்புநேசர் மனிதருள் மாணிக்கத்தை ஜவஹர்லால் நேருவை! நினைவுகூர்ந்து பாராட்டி மகிழ்வோம்!

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்! தன் பிள்ளை தானே வளரும்!

அனைத்து குழந்தைகளுக்கும் அன்பு காட்டுவோம்! அன்பு பிள்ளைகள் பெற இயலாத தாய்மைகளை அவதூறாக பேசாத இருப்போம்!

குழந்தைகளிடத்தில் சாதி மத பேதம் கூட்டாதிருப்போம்!

மனிதருள் மாணிக்கத்தை! ஜவஹர்லால் நேருவை !நினைவு கூர்ந்து !நாமும் அன்பு பாசம் பரிவு இவற்றை மற்ற பிள்ளைகளிடத்தில் காட்டுவோம் !
நம் பிள்ளைகளை பாதுகாத்து நாட்டின் சேவைக்காய் வளர்ப்போம்!!


-கவிதை மாணிக்கம்
சங்கு பட்டி!
திருவேங்கடம் தாலுகா !
தென்காசி மாவட்டம்