புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினம் டிசம்பர் 6

அம்பேத்கர் நினைவு தினம் கவிதை

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினம் டிசம்பர் 6

அ அடிமை விலங்கை ஒடிக்க வந்தவர்!
ஆ ஆண்டவனாய் நேரில் பிறந்துவந்த மாமனிதர்!

இ இன்று வரை இவர் போல் கற்றோர் இல்லை!
 ஈ ஈடில்லா புகழில் இவருக்கு நிகர் யாருமில்லை!

உ உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ஒருவர்!
ஊ ஊக்கம் திறம் பட தீண்டாமையை எதிர்த்தவர்!

எ எங்கு சென்றாலும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்க முனைந்தவர்!
ஏ‌ ஏழையாய் பிறந்தாலும், கல்வியால் எஜமான்களையும் கண்வியக்க வைத்தவர்!

ஐ ஐயம் இன்றி அத்தனை பெண்களுக்கும் !சம உரிமையை நிலை நாட்டியவர்!

ஒ ஒளிமயமான எதிர்காலத்தை விளிம்பு நிலை மக்களுக்கு கல்வியால் கிடைக்கச் செய்தவர்!

ஓ ஓடி உழைத்தவர்க்கு ஓய்வாக 8 மணி நேர வேலையை நிறந்தரம் ஆக்கியவர்!

ஔ ஔதடமாய் வந்த சமூக சீர்திருத்தவாதிகளில் உலகில் முதன்மையானவர்!

ஃ இஃது போல் உலகம் வியக்க உயர்ந்த சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கர்!

கவிதை மாணிக்கம்

 

வாள்பிடித்து உலகை வென்றவர் மாவீரர் அலெக்சாண்டர் என்றால்,,!

நூல் படித்துஉலகை வென்று ,உயர்ந்தவர் சட்ட மாமேதை அம்பேத்கார் என்போம்!

நீர் மறைந்தும் நீர் படைத்த இந்தியஅரசியல் சட்டம் உயிர் பெற்று வாழ்கிறதே!!

-கவிதை மாணிக்கம்,