மகாகவி பாரதி ...! 039

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

மகாகவி பாரதி ...! 039

மகாகவி பாரதியார் 
            
ஆற்றல் மிகுந்தவன் பாரதி
         அருந்தமிழ் கற்றவன் பாரதி
 எங்கும் ஏற்றும் கவிதையைப்
          போற்றிப் புகழ்ந்திட
 என்றும் நமக்களித்தவன்
           பெருங்குன்றின் புகழ் படைத்தவன்
  எட்டயப்புரத்தில் பிறந்த மகாகவி 
            இருபதாம் நூற்றாண்டின்
   ஈடு இணையற்ற எழுச்சி கவிஞன்.

  எத்திசையும் தமிழ் மணக்க 
          எண்ணற்றப் படைப்புகள
   ஏட்டில் எழுதிக் குவித்தவன்
          பாப்பாப் பாட்டு,குயில் பாட்டு 
    கண்ணண் பாட்டு,பாஞ்சாலி சபதம் எனக்
           காலத்தால் அழியாத கட்டுரைகள்
    கவிதைத் தொப்புகளை
             கவினுலகிற்குத் தந்தவன
    பாட்டுக்கொரு புலவனாய் 
             பாரினில் வலம் வந்தவன்
    நாட்டுப் பற்றை பைந்தமிழில்
             நாடெல்லாம் பரப்பியவன்
    அச்சமில்லை அச்சமில்லை
             அச்சம் என்பதில்லையே என 
     மக்களுக்கு அறைகூவல் விடுத்தவன்
             மூன்றெழுத்தால் சிறந்து விளங்கியவன்.

    ஆணுக்கு நிகர் பெண் சமம் என்று
             பெண்கல்விக்கு பெருமை சேர்த்தவன்
     புதுமைப் பெண்களாய் வலம்வந்து 
               புத்துலகை காண வைத்தவன் 
      தனியொரு மனிதனுக்கு 
               உணவில்லையெனில்
      ஜகத்தினை அழித்திடுவோம் 
                என ரௌத்திரம் பழக்கியவன்.

       வெள்ளையனே வெளியேறு என 
               வீர முழக்கம் இட்டவன்
      செந்தமிழை அமுதாக்கி
              சிந்தையில் நிறுத்தியவன்
     தேனாக இனிக்க வைத்தவன் 
             சுதந்திர தாகத்தை ஊட்டியவன்
     தமிழினத்தை மீட்டெடுக்கத் 
            தரணியெல்லாம் சுற்றி வந்தவன்.

    வயிற்றுக்குச் சோற்றிடல் வேண்டும்- இங்கு
             வாழும் மனிதருக்கெல்லாம் என்றெழுதிய
    அந்த மகாகவிக்கு மரணமில்லை என்றும்….
              விரியுலகம் உள்ளவரை அவர்பாடல் 
      அழியாமல் நிலைத்திரக்கும்……
       
                                                                      ந.மலர்கொடி, 
   தலைமை ஆசிரியர்.  அரசு மேல்நிலை       பள்ளி கருப்பூர் பொய்யூர்.