புரட்சிக் கனல் 011

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

புரட்சிக் கனல் 011

புரட்சிக்கனல் அம்பேத்கர்

கல்லாமை எனும்  காரிருள்
  நீக்கவந்த  கலங்கரை விளக்கம்  !
தீண்டாமை நோயை விரட்டி 
  சமத்துவம் பேணிய புரட்சியாளர்  ! 
சாதிமதங்களை  தீயிட்டு கொளுத்திய 
  சரித்திர நாயகன்  - தன் 
அறிவாற்றலால் பட்டங்களையும்  
   சட்டங்களையும் உரித்தாக்கியவர் !
 பாமரனையும்  கல்வி கற்க ….
   தூண்டிய  அறிவுச்சுடர் !
  பெண்கள் முன்னேற்றத்தை
     பெரிதாய் நேசித்தவர்  !
   சாதி தான் சமூகமெனில்
     வீசும் காற்றில் விஷம் 
   பரவட்டுமென முழங்கியவர் !
     விமர்சனங்களை உடைத்தெறிந்து 
   உலகையே  தன்பால்  கவர்ந்தவர் !
    சுயசிந்தனையும், சுய மரியாதையும்
  இவரது  தலைக்கவசம் !
   கற்பி, புரட்சிசெய், ஒன்றுசேர் 
 தாரகமந்திரத்தின் தனித்துவமிவர் !
   இந்திய அரசியல் சாசனத்தால்…. 
 மகுடம் சூட்டப்பட்ட மாமேதை !
   மூடநம்பிக்கைகளை வேரறுத்து
 தன்னம்பிக்கையை விதைத்திட்ட 
   சீர்த்திருத்த செம்மல் !
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் 
   உரிமைகளை மீட்டெடுத்த….. 
விடிவெள்ளி வேந்தன் !
   பிரிவினையையும் வேற்றுமையையும்
தகர்த்தெறிந்த தன்னிகரற்ற தலைவன் !
   இப்படியாய்….உமைப்போற்றி புகழ
இப்பிறவிதனை எண்ணி - ஒருகணம் 
   பெருமிதம் கொள்கிறேன் நான் !

மதிப்புறு முனைவர்.நா.பாரதி ,கள்ளக்குறிச்சி .