பெரியாரின் இளவல் பேரறிஞர் அண்ணா ...! 050

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

பெரியாரின் இளவல் பேரறிஞர் அண்ணா ...! 050

பெரியாரின் இளவலான பேரறிஞர் அண்ணா.. 

பட்டாடை ஊரில்
    பிறந்தாய் நீயும்
கதராடை எதிர்த்து
   கழகமும் கண்டாய்.

பாராளும் மன்றத்தில்
    பாடம் புகட்டினாய்
பாங்கானப் பேச்சில்
    பாராட்டும் பெற்றாய்.

நாடகத்தில் தடம்பதித்து
     நாடறியச் சிறந்தாய்.
நாநிலமும் போற்றிடவே
     நாட்டையும் ஆண்டாய்.

தமிழை உலகுரைக்கத்
   தமிழ்நாடு  பெயரடைந்தாய்
தலைகள் கடலாகித்
    ததும்பிட உயிர்நீத்தாய்.

பெரியாரின் இளவலான
    பேரறிஞர் அண்ணா
பெயராலே பின்வந்த
   மன்னருக்கும் மன்னா.

செந்தமிழில்  அடுக்குமொழி
    செப்பியதுன்  செந்நா.
சேயோனுன் புகழின்னும்
    சொல்கிறதே பின்நா.

- கோவை.லிங்கா.