தமிழர் பெருமைகள்...! 027

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழர் பெருமைகள்...! 027

*தமிழரின் பெருமைகள்*

*முன்னுரை*:
   உலகம், விஞ்ஞானத்தின் உச்சத்தை எட்டினாலும், மனிதனின் வாழ்விற்கு மெய்ஞானத்தை புகட்டி வாழ வைத்தவன் நம் தமிழனே. தமிழரின் பெருமை பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்..!

“தாய்மொழி ஊற்றாம், தமிழன் என்ற மரபாம்” என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழை வளர்த்தவர்கள் பழந்தமிழர்கள். உலகமே வியக்கும் வண்ணம் எண்ணிலடங்காத கருத்தை தமிழ் காப்பியங்கள் வாயிலாக எடுத்துரைத்து வரலாற்றில் சிறப்புற்று விளங்குகிறார்கள் தமிழர்கள். உலக மொழிகளான லத்தீன், லாவோஸ் போன்ற மொழிகள் போல பழமையும், பெருமையும் பெற்று விளங்கிய மொழி, தமிழ்மொழி. 247 எழுத்துகளில் உலகையே கட்டியிணைத்த மொழி.

*பழந்தமிழன் பெருமை*
அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல் அறிவுக்கு அறிவு சேர்த்து மகிழ்ந்தவன் நம் தமிழன். அதற்கு எடுத்துக்காட்டாக திகழ்வது ஐம்பெரும் காப்பியங்களே. வீரச்சுவை, இனிமைச் சுவை, மருந்து, இயற்கை என்று அனைத்திற்கும் பழங்காலத்தே படைப்பு கண்டவன் தமிழனே. உலகின் உயிர்வளம், இயற்கை வளம், செல்வ வளம், போர்த்திறன், செயல் திறன், அரசியலமைப்பு போன்றவற்றை தனது காப்பியங்களிலேயே கண்முன் நிறுத்தியவன் பழந்தமிழன்.

*தமிழன் பெருமை*

பல அறிவியல் புதிர்களுக்கு தமிழன் ஆதிகாலத்திலேயே விடைகள் கண்டுபிடித்துள்ளான். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு, “அணுவை துளைத்து ஏழ்கடலை புகட்டி” என்ற வாசகம், அதாவது நாம் இந்த நவீன யுகத்தில்தான் அணுவின் பயன்பாடுகளை அறிந்துள்ளோம். தமிழன் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அணு பற்றி அறிந்திருந்தான் என்பதையே அந்த வாசகம் சுட்டுகிறது. நாம் இப்போது காணும் பல்வேறு தொழில்நுட்ப- மருத்துவ சிறப்புகள் அக்காலத்திலேயே பழந்தமிழரிடையே வழக்கில் இருந்துள்ளது.

*தமிழின் தொன்மை*
உலகில் வாழ்கின்ற கோடிக்கணக்கான தமிழர்களின் தாய்மொழியாக விளங்குகின்ற தமிழானது குமரிக்கண்டத்தில் தோற்றம் பெற்றதாக நம்பப்படுகின்றது.

பிற்காலத்தில் குமரிக்கண்டமானது நீரில் மூழ்கி அழிவடைந்து போனாலும், அதன் எஞ்சியிருந்த நிலப்பரப்புக்களில் வாழ்ந்த தமிழர்கள் கடல் கடந்து அண்டை நாடுகளிற்கு சென்று அங்கும் தமிழின் புகழைப் பரப்பினார்கள்.

இவ்வாறு தமிழானது பல்வேறு ஆண்டுகளாக படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்றைய நவீன வடிவத்தை எட்டியுள்ளது.

தமிழின் பெருமையை புராணங்கள் *“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றி பிறந்த மூத்தகுடி”* என்று தமிழரை குறிப்பிடுவதனூடாக இந்த உலகம் தோற்றம் பெற்றபோதே தமிழும் தோன்றிவிட்டதாக குறிப்பிடுகின்றன.
*தொன்மை வாய்ந்த தமிழின் பயன்கள்*

தொன்மை வாய்ந்த தமிழானது பல்வேறு சிறப்புக்களையும், தனித்தன்மையையும் தன்னகத்தே கொண்டது.
பண்டைக்காலத்தில் கல்வெட்டு, ஓலைச்சுவடி ஆகியவற்றால் தகவல்களை பதித்து வைத்தார்கள். இணைய ஊடகத்தைத் தமிழர்கள் முதலில் இருந்தே அறிந்து நன்கு பயன் படுத்தி வந்துள்ளனர். அவை தமிழ் இலக்கியங்கள், வலைப் பதிவுகள் மற்றும் திறந்த நிலை மென்பொருட்களுக்கான பங்களிப்புகள் என்று எல்லா வகையிலும் பரவி வருகிறது. மொழிகள் பல இருக்க அதில் நம் தாய்மொழி இருக்கிறதா என்று ஆர்வம் கொண்டு தேடி அலையும் கண்கள், தமிழை ஊடகம் மூலம் கேட்கும்போது தேன்வந்து காதில் பாய்வது போன்ற உணர்வு. பிற மொழிக்கு பிறப்பிடம் கொடுத்த மொழியே என் தமிழ்மொழி. தமிழின் பெருமையை அறியவே பல்வேறு நாட்டவரும் தமிழை விரும்பி கற்கின்றனர். ஊடகங்கள் தகவல்களை சேமித்து வழங்க பயன்படுத்தப்படும் கருவிகளாக உதவுகின்றன. இப்படி, *‘தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா..’* என்கின்ற வாக்கியத்திற்கு இணங்க தமிழன் எந்த இடத்திற்கு சென்றாலும் அவன் மதிப்பை தானே தேடிக்கொள்வான். தமிழ் ஊடகங்கள் வழியிலே தகவல்கள் பரிமாற்றம் ஏற்படுகின்றது. அதனால் தமிழர்களும், பல்வேறு மொழி பேசுபவர்களும் பயனடைகின்றனர்.
*முடிவுரை*
தமிழன் கை வைத்த இடமெல்லாம் பொன் என்பதுபோல அவர்கள் கட்டிய கட்டிடங்களும் வரலாற்றில் பேசப்படுகிறது. ஒரே கல்லில் செய்யப்பட்ட தஞ்சை பெரிய கோவிலும், அதன் ராஜகோபுரத்தையும் எடுத்துக் காட்டாக கூறலாம். மொகஞ்சதாரோ போன்ற பல வரலாற்று நாகரிகம் பொருந்திய கட்டிடங்களுக்கு அடித்தளம் அமைத்தவர்கள் பழந்தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

- திருமதி .ராஜலட்சுமி
ராஜபாளையம்.