மஞ்சள் அரளிப்பூக்கள்

மஞசள்ப் பூக்கள் கவிதை

மஞ்சள் அரளிப்பூக்கள்

மௌனத்தை விட மெதுவாக
உதிர்கிறது மஞ்சள் அரளிப்பூ

கடப்பாரையையும் மண்வெட்டியையும்
தாங்கும் பூமியால் கூட
மெளனத்தின் மென்மையை
தாங்க முடியவில்லை

இவ்வளவுக்கும் சருகு கூட இல்லை 
வாளிப்பான மஞ்சள் வாகு

சொல்லொண்ணா துயரத்தில்
குலுங்குவது போல் இருக்கிறது மரம்
இரண்டாவது முறை பார்த்த போது
காற்றில் கிளைகள்
ஆனந்தமாக ஆடிக்கொண்டிருந்தன
கூடவே பூத்திருந்த பூக்களும்

இலைகளையே பார்த்துக்கொண்டிருந்தவள்
"எதுவுமே சொல்லமாட்டியா"
என்றாள்
"எதுவுமே சொல்லத் தோன்றவில்லை"
என்றேன் நான்

தங்கேஸ்.