தேசிய கீதம் இசைக்கப்பட்ட தினம் டிசம்பர் 27

தேசிய கீதம் இசைக்கப்பட்ட தினம்

தேசிய கீதம் இசைக்கப்பட்ட தினம் டிசம்பர் 27

ஜன கன மன கீதம்..
இசைக்கப்பட்ட தினம்...

கவிஞர்/ஓவியர்/பாடகர் /கதாசிரியர் எழுத்தாளர்... என பன்முக வடிவம் கொண்ட நோபல் பரிசு பெற்ற
*ரவீந்திரநாத் தாகூரின்*  
வங்காள வரிகளிலான 
இந்திய நாட்டுப்பண்!

24.01.1950 ல்
இந்திய முதல் குடியரசுத் தலைவர் *ராஜேந்திர பிரசாத்தால்* 
இந்தியாவின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்ட பண்! 

கல்கத்தா நகரில் 
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாக தாகூரின் உறவினர் *சரளாதேவி சவுதி ராணியால்* 
 52 வினாடிகளில் முழுவதுமாகப்
பாடப்பட்ட கீதம்!

தேசிய கீதமாக அறிமுகமான காலத்தில் அனைத்திந்திய வானொலியில் அன்றாட நிகழ்ச்சி இறுதியில் ஒளிபரப்பாகி, திரையரங்கங்களின் திரைப்படம் முடிவிலே/தேசியக்கொடி திரையிலும், தேசிய கீதம் ஒலியிலுமாக மக்கள் அனைவரும் எழுந்து நின்ற 
காலமாக பரிணமித்த கீதம்!

ஒரு நிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது என்ற பாடும் விதியாகி, 
பாடும் போது ஆடாமல் அசையாமல் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் 
என்ற மரியாதையுடனான கீதம்!

இரவீந்திரநாத் தாகூரின் 
*தத்துவ போதினி* என்ற பத்திரிக்கையில், 
*பாரத விதாதா* தலைப்பில்
வெளியிடப்பட்டு 110 வயதான கீதம்!

இந்திய அரசியல் நிர்ணய சபையால் 24.01 .1950 ஏற்றுக்கொள்ளப்பட்ட,
1919 இல் ஆங்கிலத்தில் ,
 "இந்தியாவின் காலைப் பாடல்"
 என மொழி பெயர்க்கப்பட்ட கீதம்!
இந்தி மொழியில் *ஆபித் அலி*  மொழிபெயர்த்த கீதம்!

"இந்தியத் தாயே மக்களின் இன்ப, துன்பங்களை கணிக்கின்ற அனைவருடைய மனதிலும் ஆட்சி செய்கின்றாய்!" என்றும்,
"உன் திருப்பெயர் பஞ்சாப்/சிந்து, குஜராத்/மராட்டி/திராவிடம்/ஒரிசா, வங்காளத்தையும் *உள்ள கிளர்ச்சி*  அடையச் செய்கின்றது"  என்ற
தமிழ் வரிகளான கீதம்!

"உன் திருப்பெயர் விந்திய,
இமயமலை தொடர்களில் எதிரொலிக்கிறது!
யமுனை,கங்கை ஆறுகளின்
இன்னொலியில் ஒன்றுகிறது!
 இந்திய கடல் அலைகளால் வணங்கப்படுகிறது!"
என்று தனித்துவ வரிகள் பதிந்த கீதம்!

"நின்னருளை வேண்டுகிறது!
உன் புகழைப் பரப்புகிறது! இந்தியாவின் இன்ப/துன்பங்களை கணிக்கின்ற தாயே!
உனக்கு வெற்றி!வெற்றி!வெற்றி!"
என்று அனைவரும்  
அர்த்தம் அறிந்து பாடி/நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டிய கீதம்!

 சமஸ்கிருதம் கலந்த வங்காள மொழியில் ஐந்து பத்திகளாக
 1911 ல் எழுதப்பட்டு/ முதல் பத்தி மட்டுமே தேசிய கீதமாக ஏற்கப்பட்டு,
தாகூரின் நெருங்கிய நண்பர் ஜேம்ஸின் மனைவி 1911பிப்ரவரியில் 
*மார்கரெட் சுசின்ஸ்* பாடிய மெட்டிலே,
இன்று வரை நம்மால் பாடப்படும்,
 நம்மையும் அறியாமல் 
உடல் சிலிர்த்து/வலிமை ஏற்படுத்தும்
ஆற்றல்  கொண்ட கீதம்!  

27.12.2011ல் 100ஆம் வருட நிறைவில்
ஒரு லட்சம் குழந்தைகள் 
பொது மக்களின் முன்னிலையில் ஆந்திராவில் மதனப்பள்ளியில் 
பாடிய பெருமை மிகு கீதம்!

கல்கத்தாவில் முதன் முதலில் காங்கிரஸ் மாநாட்டில் 5ஆம் ஜார்ஜ் மன்னருக்காக சரளாதேவி மாணவர்
குழுவினருடன்/வாழ்த்தி/வரவேற்பு 
தர பாடியதான  தகவலாகிய தேசபக்தியின் அடையாள கீதம்!

இந்திய தேசிய ராணுவப்படையின் தேசிய கீதமாக *நேதாஜி* பயன்படுத்தி/பேண்ட் வாத்தியார் குழுவினர் வாசிக்கும் இசையமைத்த 
*கேப்டன் ராம் சிங்கிற்கு*  
தங்கப்பதக்கம் வழங்கி 
நேதாஜி கௌரவித்த கீதம்! 

God save the queen எனும் பாடலை
பாடிக் கொண்டிருந்த காலத்தில், வங்கப் பிரிவினை அமலில் வர 
இத்தேசம் ஒன்று என்று வலியுறுத்த
கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட கீதம்!

 அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாக அரசு பாட நூல்களில் பயன்பாடாகி, சுதந்திர தினம்/குடியரசு தினம் 
எனும் நாட்டின் தேசியக்கொடி ஏற்றும் நேரங்களில் இசைக்கப்படும் கீதம்!

ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பேழை,
முன்னனி நடிகர் ஷாருக்கானின் திரைப்படத்தில் நவீன இசை
வடிவில் இடம் பெற்ற கீதம்! 
ஹவுடி மோடி நிகழ்வில்  
ரஸ் இசை சிறுவன் *ஸ்பாட் ஷா*  
மெய் சிலிர்க்கப் பாடிய கீதம்!
 
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு
எதிரானதென்ற சர்ச்சையிலான கீதம்!
காந்தி/நேரு இருவரின் ஆதரவோடு
தேசிய கீதம் ஆக அறிவிப்பான பண்! 
சிந்து என்ற வார்த்தையை நீக்கி காஷ்மீர் என்று சேர்க்கச் சொல்லி உச்சநீதிமன்றத்தில்   மனு 
தாக்குதலுக்குட்பட்ட கீதம்! 

இடையன்குடி தேவாலய மணியில் ஒலித்த தேசிய கீதம்!
மதரசா பள்ளிகளில் 
தினம் காலையில் பாட வேண்டும் 
என உத்தரவான கீதம்!
தான்சான்ய நாட்டு அண்ணன்/தங்கை இருவரும் பாடி லட்சக்கணக்கானவர் மனதை சமீபத்தில் கரைத்த கீதம்!

119 நாட்டு மக்களை ஒருங்கிணைத்து 
கின்னஸ்ஸில்  இடம் பிடித்த 
*துபாய் பள்ளி* பாடிய தேசிய கீதம்!
தேசிய கீதம் பாடிய பின்பே 
வகுப்பு துவங்க வேண்டுமென சிபிஎஸ்சி உத்தரவான கீதம்!

இரவீந்திரநாத் தாகூர் 
கைப்பட எழுதிய மொழியாக்கம், மதனப்பள்ளி தியாசஃபிகல்
கல்லூரி நூலகத்தின் கண்ணாடி சட்டத்திற்குள் வைக்கப்பட்டுள்ள கீதம்!
     
நூறு ஆண்டுகள் கடந்தும் இளமையாக இருக்கும் தனித்துவமிக்க 
ஜன கன மன
தேசிய கீதம் இசைக்கப்பட்ட
இன்றைய தினத்தில்
அப்பண்ணின் பெருமை போற்றுவோம்!

-முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன், 
வாலாஜாபேட்டை .