அம்பேத்கர் என்னும் மாமேதை 033

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அம்பேத்கர் என்னும் மாமேதை 033

======================
அம்பேத்கர் எனும்  மாமேதை.
======================
முதல்வனே!  முதல் சட்ட அமைச்சரே!

ஒடுக்கப்பட்ட மக்களின்  இதய துடிப்பே!

கல்வி  ஒன்றே  அறியாமையை  விலக்கும்   என்றவரே!

"கற்பி"  அனைத்தையும்  அனைவருக்கும்;

"புரட்சி  செய்"தாலே  புதுமைகள்  பிறக்கும் ;

"ஒன்று  சேர்"ந்தாலே  விடியல்  தோன்றும் ;

எனும்  தாரக மந்திரத்தை  கொண்டவரே!

மத்தியபிரதேசத்தின்  மகிமையே  நீ  பிறந்ததோ!

பாரிஸ்டர்  பட்டம்  உன்னால்  பெருமைப்பட்டதோ!?

பொருளியியலுக்கே  பொருளை  கூறியவரே!

அரசியலில்  நேர்மையை  நிலைநிறுத்தியவரே!

சட்டம்  உன்கை   ப்  பட்டு  சாதனையானதோ!

மெய்யியலை  மெய்யாக அழகு  சேர்த்தவரே!

தத்துவம்  பௌத்தத்தை  தழுவ சொன்னதோ!

நீ  வாழ்ந்த காலத்தில்  வாழவில்லை  என்றாலும் ;
வாழ்ந்த மண்ணில்  வாழ்வதே  பெருமை!

-தமிழச்சி  மா.சித்ரா.
தருமபுரி.