அறிஞர் அண்ணா என்னும் ஆயுதம் 004.

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை

அறிஞர் அண்ணா என்னும் ஆயுதம் 004.

அறிஞர் அண்ணா என்னும் ஆயுதம்

காஞ்சிபுரம் கண்டெடுத்த தங்கக் கலசம் 

நடராசன் அய்யன் தோளில் சுமந்து

 பங்காரு அன்னை வயிற்றில் பிறந்த பத்திரை மாத்து தங்கம்

அன்பால் அகிலத்தை கட்டிப் போட்டு

 ஆக்கத்தால் அகிலத்தை அக்கிய மகான்...

 அடையாளம் வேண்டாம் உங்களை அறிமுகப்படுத்த

 உங்கள் புகழ் வானினும் விசாலம் 

தடையேதும் இல்லை உங்கள் தகுதியை உரைக்க

 தன்னலமற்ற அன்பை தமிழ்நாட்டுக்குத் தந்தவரே...

  தரணி போற்ற தமிழ்நாட்டை வாழ வைக்க பிறந்தவரே

 மங்காப் புகழ் கொண்ட மாசற்றவரே..

முத்தமிழை உயிர் பெறச் செய்த முதல்வரே

சத்தான சொற்களால் சகாவரம் பெற்றவரே...

 ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றவரே

 கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை கண்ணாகப் போற்றியவரே

 அடுக்கு மொழியில் பேசி அகிலத்தை ஆச்சரியப்பட வைத்தவரே..

 விண்ணும் மண்ணும் உள்ளவரை உங்கள் வாழ்வும் வரலாறாகவே மாறும்.. 

சோதனை கண்டு சோர்ந்து விடாமல்

 வேதனையைக் கண்டு வெம்பிவிடாமல்

 வறுமை கண்டு 
அஞ்சாத சிங்கமே ...

  அச்சத்தில் இருப்பதை விட

 ஆபத்தை எதிர் கொள் கற்றுக் கொடுத்தவரே

 சூழ்நிலைகளைப் புரட்டிப்போட்டு சுயசரிதம் படைத்தவரே

 துயர் கண்டு துவண்டுவிடாமல்

 மதி கொண்டு அவற்றை வென்றுவிடவும் 

அகிலகத்திற்கே அண்ணன் ஆனவரே

நீங்கள் வாழ்ந்த காலம் ஒரு சகாப்தம்

உங்கள் வாழ்க்கையை பொன் ஏட்டில் எழுதிட வேண்டும்

அயராது தமிழ்நாட்டிற்கு உழைத்த அசையா சொத்தே

உங்கள் அசைவு ஒவ்வொன்றும் புதிய சரித்திரம்

வந்து போகின்ற வானவில் அல்ல உங்கள் வலிமை 

அவை தங்கி நிலைத்திருக்கும் வானமாய்

மூன்றெழுத்தில் மூச்சடங்கியும் மக்கள் உள்ளங்களிலும்

மெரினா கடற்கரையிலும் அண்ணா சதுக்கத்தில் மண்ணுக்குள்

ஆலமரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருப்பவரே....

முனைவர் ப.விக்னேஸ்வரி
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கோவை.