ஏழைகளின் விடிவெள்ளி அம்பேத்கர் 004

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

ஏழைகளின் விடிவெள்ளி அம்பேத்கர் 004

ஏழைகளின் விடிவெள்ளி அம்பேத்கர்

++++++++++++++++++++++

சமத்துவம் சகோதரத்துவம் கடைப்பிடித்த ஞானியே/
சமூக மேன்மைக்காக ஓடி உழைத்த தேனியே/
அரிசனங்களின் அறியாமை இருள் நீக்கினாய்/
அறிவென்ற ஆயுதத்தால் பட்டை தீட்டினாய்/
மண்டிய புழுக்களாய் கிடந்த மனிதர்களை/
முற்போக்கு சிந்தையோடு கிளர்த்தெழச் செய்தாய்/
சமத்துவ விவசாயத்திற்கு வித்திட்ட விவசாயியானாய்/
சாதிக் களைகளை வெட்டியெறிந்த உழவாளியானாய்/
மதச்சார்பற்ற இந்தியாவிற்கு அடித்தளமிட்ட மேதை நீ/ சுயமரியாதை அடையாளத்தோடு வாழ்ந்த சட்ட மாமேதை நீ/
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தைஆனாய்/
இருண்ட சமூக மக்களுக்கு அன்னையானாய்/ தாழ்த்தப்பட்டோர் அனைவரையும் மீட்டெடுத்த கடவுளானாய்/
தன்னலம் கருதாமல் வாழ்ந்த வள்ளலானாய்/
சமூக விடுதலை ஒன்றே நின் தாரக மந்திரமானது /
என்றும் எங்கள் மனதில் நீ வாழ வழி வகுத்தது...

வணங்குகிறோம் ஐயா

-கவி.காயத்ரிசுந்தர்,
நிறுவனர்
இளந் தளிர்கள் கூடம்  (மழலையார் குழுமம்)
 சென்னை.