எம்பாட்டன் தேசிய கவி பாரதி ...! 072

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

எம்பாட்டன் தேசிய கவி பாரதி ...! 072

எம்பாட்டன் தேசியக்கவி பாரதி...:

எம்பாட்டன் எட்டையப் புரத்தானே பாரதியார்..
தம்பாட்டால் விடுதலை வேள்வித்தீ மூட்டினாரே...
'இம்'என்றால் சிறையன்று; சுதந்திரக் காற்றின்று...
நம்பிக்கை ஒளியூட்டி,
தேசியத்தை ஒன்றாக்கினார்...

ஆணுக்குப் பெண்ணிங்கு
இளைத்தவரிலை;
சளைத்தவரில்லை..
பெண்விடுதலை
வேண்டுமென்றே
பாட்டாலே பாடுபட்டார்...
உண்மையது உரக்கவே
சொன்னவரே;
உதயத்திற்காக...
தமிழ்ப்பணி
ஆற்றியாங்கே,
நாடுவிடுதலை
வேண்டிநின்றார்...

ஒருமைப்பாடு எப்போதும்
உரைத்தாரே நன்றாக...
சிறுமையும்
ஒழித்தாங்கே,
சீர் பெற்ற
சமுதாயம்...
உரிமைக்குரல் எழுப்பியவராய்,
சாதிகளில்லை
மறுத்தாரே..
பெருமையவர்
எம்பாட்டன்
என்றிடவே
எவர்க்குமே...

வறுமையின் மறுப்புடனே
மற்றவரின் நலன்பேணல்...
கருத்துடன்
நற்கல்வி
யாவர்க்கும்
வேண்டுமென்றார்..
சக்தியிடமே வேண்டிடுவார்,
மக்களின்நலன்
காத்திடவே...
மனதிலுறுதி
கேட்டிடுவார்;
பொதுவாகும்
யாவர்க்குமே....


- சா. சையத் முகம்மது, கிருட்டிணகிரி.