நதி நீரில் உடையும் நிலா

நிலா கவிதை

நதி நீரில் உடையும் நிலா

*நதி நீரில் உடையும் நிலா*

பெண் பார்த்து சென்றவன் மறுக்க
தை மாத மங்கலநாண் கனவு 
தடைபட்ட *கன்னி* யின் கண்ணீரில்
ஜனவரி *சாகம்பரி நிலவு* ....

வைகை ஆற்றில் கள்ளழகர் காண
விழைந்த *ஆன்மீகவாதிகள்* மனம்
கொரானா காலத்து தடை கண்ட
பிப்ரவரி *மகா பூர்ணிமா*.....

பூக்கோலம் நிறப்பொடிகளோடு
ஹோலி தினம் கொண்டாடுதல்
புதிய முதல்வரால் தடைபட்ட கல்லூரி
*மாணவிகளின்*  கனவுகள் உள்ள
மார்ச் *பால்குண பூர்ணிமா*.....

யுகாதி தினத்தோடு அனுமன்
ஜெயந்தி கொண்டாடும் ஆசை
அலுவலக விடுப்பு கிடைக்காமல் மண்
விழுந்தது போல் *தொழிலாளி* க்காக
ஏப்ரல் *சைத்ர பூர்ணிமா*....

புத்த ஜெயந்தி/நரசிம்ம ஜெயந்தி
காண முடியாமல் மாத விலக்கான
*குடும்பஸ்திரி* விருப்பங்கள் முறிபட
மே மாத *வைஷாகப் பூர்ணிமா*....

ஆசிரியராம் *குருக்களை* வயதாகி
ஓய்வூதியத்தில் சாப்பிட விடாமல்
கலங்கி அமர்ந்திடும் சட்டம் வந்திட,
ஜூலை *ஆஷாத் பூர்ணிமா*.....

ஆவணி அவிட்டம் கண்டு
ரட்சா பந்தன் கொண்டாட
சகோதரிகளற்ற *சகோதரன்களுக்கு*,
ஆகஸ்டு *ஷ்ரவண பூர்ணிமா*....

பித்ருக்களை வணங்க விடாமல்
ஆரோக்கியம் தடைபடும் *நோயாளிக்கு*,
செப்டம்பர் *பத்ரபத் பூர்ணிமா*....

சொத்துக்களை இழந்து
வறுமையில் உழலும் *விவசாயிக்கு*
அக்டோபர் *அஷ்வின் பூர்ணிமா*....

கார்த்திகை தீபமேற்றிட
காற்றின் வருகை தீபமணைத்திட
வீட்டின்  *முதியவர்கள்* 
அபசகுனமென பயத்தில் நடுங்கிட,
நவம்பர் *கார்த்திக் பூர்ணிமா* ....

திருவாதிரை நட்சத்திரம் கண்டு
தத்தாத்ரேயர் ஜெயந்தி காண,
சீரடி பயணம் திட்டமிட,
வேலையிழப்பில் கதி கலங்கிய 
*குடும்பத் தலைவனுக்கு* 
டிசம்பர் *மார்கசீர்ஷ பூர்ணிமா* ...

எனும் அத்தனை முழு நிலவுகளும்
கனவுகள் சின்னாபின்னமான
*நதியில் உடைந்த நிலவுகளாக!*

உடைந்த நிலவின் ஓர் பிம்பமாக,
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
வாலாஜாப்பேட்டை.