பகுத்தறிவு பகலவன்

பெரியார் பிறந்த தினம் கவிதை

பகுத்தறிவு பகலவன்

ஈ. வே. ராமசாமி பகுத்தறிவிற்கே பகுத்தறிவாளனாய்//

சாமிகளை கொண்டு 
இருக்கும் நேரத்தை வீணாக்கும் ஆசாமிகளாக//

நேரில் வராமல் 
நேரில் வந்தது போல் ஆடும்
சாமிகளுக்கிடையில்
 நேர்மையாக தானாக சிந்தித்து//


தம் சுட்டெரிக்கும் உரையால் உணர்வை தட்டி எழுப்பிய சூரியனாய்//

தெய்வ நம்பிக்கையை அழிப்பது நோக்கம் அல்ல//

தெய்வ நம்பிக்கையால் தன்னம்பிக்கை இழந்து இருப்பதே தவறு//

காலை மாலை இறைவனை வணங்கி இறக்கத்தை மறந்து போனாய் குழந்தை பசியின் முன்//

சாமியே சாமி என பலர் இருக்கி இப்பொழுது ராமசாமி என பலர் இருக்க வைத்து//

சிந்தனைகள் மலர ஆராய்ந்து அறிபவன் மனிதன் என்று வாழ்கின்ற மனிதர்களுக்கு மாமனிதராய்//

இன்றும் என்றும் வாழ்வார் சாமியாய் அல்ல ராமசாமியாய்//

ஜொ.சி.மோனிஷா கோவை