உலக இரத்த தான தினம் தன்னம்பிக்கையாளர் விருது

இரத்த தானம் செய்வோம் கவிதைப் போட்டி

உலக  இரத்த தான தினம்  தன்னம்பிக்கையாளர் விருது

உலக  இரத்த தான தினம்  தன்னம்பிக்கையாளர் விருது

"இரத்த தானம் செய்வோம்..." கவிதைப் போட்டி

 

001. குருதிக் கொடை

மகப்பேறு விபத்து  எது வாயினும்

மனித குல நெருக்கடி தவிர்க்க

சக உயிர்கள் சலிக்காது வாழ

சடுதியில் குருதிக் கொடை நல்கி

அகமகிழ்ந்தே அண்டை அயலார்

அழைப்பது யாராயினும் அன்பு கொண்டு

சுக வாழ்வு அனைவரும் பெற

சுணக்கமின்றி செயல் படுவோம்.

ஆண் பெண் பேதமிலாது

அயலவர் நம்மவர் வேறுபாடிலாது

தான் ஆடாவிடினும் தன் சதை

தான் ஆடுவது போலக் கருதி

தேன் சுரக்கும் பூப்போல

தேடி வரும் அழைப்பு களுக்கெல்லாம்

நாமிருக்கிறோம் எனச் சொல்லும்

நண்பர் குழாம் பல உண்டு.

மத பேதம் தவிர்த்து மானுட

மாண்பு தனை மீட்கும் செயலிது

எதிர்பாரா இன்னல் வரினும்

எதற்கும் அஞ்சாது துணி வுடனே
கதிர் காட்டும் ஒளி போல

கனிந்த முகம் தான் கொண்டு

மதிபோல தன்மையுடன் பலன்கருதாது

மகிழ்வுடனே குருதிக் கொடைதருவர்.

அன்ன தானம் பொருள் தானம்

ஆடை தானம் எனப் பலவுண்டு

என்ன தானம் செய்தாலும்
ஏற்ற பொழுதில் உயிர்காக்கும்

தானம் ரத்த தானம் மட்டுமே

தாயினும் சாலச்சிறந்த அந்த

வானம் போல் மனம் படைத்தோரை

வாழ்த்தி வணங்கி நாளும் போற்றுவோம்.


  கவிஞர் மு.கிருஷ்ணன்,

  நெல்லை மாவட்டம்.

******************************************************************************************

002. இரத்ததானம் செய்வோம்

தானத்தில் சிறந்தது இந்த தானம்
தரணியில் மனித நேயத்தை காட்டுகிறது
உயிரை காக்க உதவும் தானம்
உள்ளத்தில் நிறைவை ஏற்படுத்தும் தானம்
பசிக்கு அளிக்கிறோம் அன்னம் தானம்
இறந்த பிறகு அளிக்கிறோம் உடல் தானம்
நாம் உயிரோடு இருந்து உயிரைக்
காப்பாற்ற கண்கண்ட தானமே இது
ஆபத்து காலத்தில் வழங்கும் இரத்தம்
ஆயுள் முழுக்க மறக்க முடியாதே
வாழ்வில் முன்வந்து அளிக்கும் இரத்தம்
முயன்றவரை நம்மால் மற்றவர்களை காக்குமே
நம்மை ஆரோக்கியமாக இருக்க உதவவுவது
நல்ல பழக்கங்களுடன் இருக்க வைப்பது
திடமான உடல் திண்மையான வாழ்வே
நமக்கும் பயன்பட்டு நம்மை சுற்றி
இருப்பவர்களுக்கும் தக்க சமயத்தில் காக்கிறதே
இரத்த வங்கி ஆயுளை உயர்த்துகிறதே
உயிரைக் காப்பாற்ற உன்னத வாய்ப்பே
உலகிவ் இன்னும் அன்பு உள்ளதே
விழிகளில் ஏக்கம் வாழ ஆசை
சாதிக்க துடிக்கும் உள்ளம் எல்லாமே
ஒருசேர நன்றி தெரிவிக்கும் நேரம்
நாம் வாழும் அடையாளத்தை காட்ட
நம்மை அன்பால் இணைய செய்ய
இரத்த நிறம் எல்லோருக்கும் சிவப்பே
இரத்த தானத்தால் உள்ளம் வெள்ளையாகிறதே
துடிக்கும் இதயம் நிற்காமல் போக
துடிப்படனும் விழிப்பணர்வேவோடும் வாழ பழகலாமே
இரத்த தானம் இயல்பாய் செய்வோமே
உயர்வு தாழ்வு எல்லாவற்றையும் தாண்டி
அகற்றி உயிர் அனைவருக்கும் ஒன்றே
ஒனறே குலம் ஒரே உலகமானதே

கவிஞர் தி.மீரா
ஈரோடு

**********************************************************************************************

003.

இரத்த தானம் செய்திடுவோம்///
 

இரத்த தானம் புது வாழ்வு தரும்//

நோய்வாய்ப்பட்டவர்களு தேவைப்படும் குருதி//

ரத்ததானத்தால் பிழைத்த உயிர்கள் பல//

ரத்ததானத்தால் வாழும் உயிர்கள் பல //

பணம் தருவதை விட ரத்தம் தருவது மேல்//

குணம் இருந்தால் போதும் கொடுக்கலாம்//

அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவன ருடன்//

பார்வையற்றோர் பயமின்றி குருதி தருகின்றனர்///

பார்வையுள்ளோர் பயப்படுகின்றனர் குருதி தருவதற்கு//

இறைக்கும் கிணறு தான் ஊரும்//

இரக்கத்துடன் ரத்தம் தந்தால் தானே ஊரும்//

உதவிடும் உள்ளமே மனிதனின் மகத்துவம்//

உதிரம் தந்து உதவுவது உயர்ந்த உள்ளம்//

உயிர் காக்கும் பணி ஒப்பற்ற பணி//

இனிதே மனம் உவந்து உதவுவது நற்பணி//

நம் அனைவருக்கும் என்ன பந்தம் //

நாம் ஆகிடலாம் இரத்த சொந்தம் //

உறவுகளாய் வாழ்ந்தால் மட்டும் போதாது//

இரத்த சொந்தம் ஆகிடுமா //

இரத்தம் தானம் தந்து வாழ்ந்துவந்தால்
நாம் இரத்தசொந்தம் ஆகிடலாம்//

உடல் உறுப்பு தானம் தந்தால்
இறந்தபின்னும் வாழ்ந்திடலாம் //

தர்மம் தலை காக்கும் என்பார்கள்//

தரும் ரத்தம் தலை காக்கும் உண்மை//

மனிதனை மனிதன் காப்பது கடமை //

மனிதனாகப் பிறந்த தன் அர்த்தம் விளங்கும்//

கொடைகளில் சிறந்த கொடை குருதிக் கொடை//

கொடைக் கொடுத்து காப்போம் உயிர்களை//

தன்னலமாக வாழ்வது வாழ்க்கை அன்று//

பொதுநலமாக வாழும் வாழ்க்கை நன்று//

தான் உண்டு தன் உயிர் உண்டு வாழ்வது நன்றன்று//

தான் உண்டு பிறருக்குத் தொண்டு உண்டு வாழ் நன்று//

தாய் தந்த நம் உயிரை - நாமும்
இரத்ததானம் தந்து தாயாவோம் ///


கவிஞர் .இ ஜீனத் நிஸா பி ஏ தமிழ் காயல்பட்டினம்

**********************************************************************************

004.

இரத்த தானம்

 அள்ள அள்ளக் குறையாத செல்வம்

குருதிச் செல்வம் குறைவில்லா செல்வம்....

 தியாகத்தின் அடையாளமாம் மண்ணில் செங்குருதி

 உனக்குத் தான் எத்தனை பெயர்கள்

உடல் தமனி நாடி உதிரம்

 செறுலை நாளம் என்னே அழகு

 குருதி ரத்தமாகவும் முலைகளில் பாலாகவும்

 வெப்பநிலையைச் சீராக்கி நோய் எதிர்ப்பு சக்தியாக

 சகலமாக இருக்கும் சக்தி நீயே...

 ஆபத்தில் பிறரின் உயிர் காக்கும்

ஆயுதமே அற்புதமே  அருமருந்தும் நீ

 ஏழை பணக்காரர் என்ற பாகுபாடில்லாமல்

ஒருதலை பச்சமில்லாத அரசி நீ

 வேற்றுமை ஒற்றுமைகளை களைந்த உன்னதமே

 பேரிச்சை பீட்ரூட் நின் வழிகாட்டியே

  குடும்ப உறவு மரபு இனம்

 உணர்ச்சி அத்தனையும் உன் வெளிப்பாடு

ஒடும் குருதியில் இல்லை இனப்பாகுபாடு

குருதி வகை மாறி ஓடினாலும்

 நின் குருதிக்கு இல்லை ஜாதி வேறுபாடு

  மனிதநேயம் கொண்ட யாவர்க்கும் மண்ணில்

 வள்ளலே கொடை வள்ளலே வள்ளலே

  தியாகிகள்  ரத்தம் சிந்தி நம்

 நலம் காத்தவர்கள் நல்லோர்கள் மண்ணில்

மனித ரத்தமே மகத்துவம் வாய்ந்தது

 மானிடம் காத்திடும் மகத்துவம் வாய்ந்தது

 நற்செயல்களில் ஈடுபடுவோம் இடர்படாது காப்போம்

 ரத்த தானம் செய்வோம் உறவுகளை பலப்படுத்துவோம்...

 முனைவர் ப.விக்னேஸ்வரி
உதவிப் பேராசிரியர்,
 தமிழ்த் துறை
 நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்.

*******************************************************************************************************************

005.

உலகைக்காக்கும்  குருதிக்கொடை   

தரணியெங்கும் தாகத்திற்கு  அளிக்கும் கொடை///         

தங்குதடையின்றி தடம்பதித்து  தாயகம்காக்க  சிறப்போடை///                    

மானிடரின் உயிரைக்காக்கும் ஆனந்த குருதி///       

சிலநேரங்களில் உரியகுருதி கிடைக்காது அவதி///     

சுவாசிக்க தேவை ஆக்சிஜன் வாயு///      

மனிதன் உயிர்வாழ இரத்தம் சீராய்வு///      

உடலும் உள்ளமும் பாதுகாப்பது இரத்தம்///                        

அவற்றை தானமாக அளிப்பது நிமித்தம்///              

ஆபத்தில் உதவிய  கொடையுள்ளத்தை மறவாதே///                      

எக்காலத்திலும் துணையாய் நினைக்க தவறாதே///                       

மனிதநேயம் மிளிரும் மனப்பக்குவ நிலைப்பாடு///                  

நானிலம் வணங்கும் உமது செயல்பாடு///       

வையகத்தில் எதுவும் எப்போதும் நிரந்தரமில்லை///              

பாரினில் இக்கொடை  அளிப்பதால் குறைவில்லை///               

இரத்தம்  வழங்குவதால் தத்தம் உடல்சீராகுமே///            

மற்றவறை காப்பாற்றும் பிரபஞ்சம்  கிடைக்குமே///                

 

-முனைவர் எ.செந்தில்வெங்கடாசலம்

ஆசிரியர், ஊ.ஒ.தொ.பள்ளி, ஜேடர்பாளையம்  , 

நாமக்கல் மாவட்டம்.

**************************************************************************************************

006.

இரத்த தானம் செய்வோம்!!!                        

வாழும் காலத்திலே கண் முன்னே, நாம் செய்த உதவியால் ஒருவர்,                                

பிழைப்பதைப் பார்த்து மனம் மகிழலாம்!!!               

சரியான எடையும் உதவும் உள்ளமும்,இருந்தாலே போதும் யாரையும் கேட்கவேண்டாம்!!!               

இறக்கும் உயிரை மீட்க்க உதவலாம்!!!                           

மருத்துவரும் கைவிடலாம். இரத்ததானம் காக்கும்!!!        

இரத்தம் தருவதால் நமதுஇரத்தம் புதிதாகும்!!!                           

புண்ணியமும் இன்பமும் வந்து சேரும்!!!                      

கருணை இருந்தால்தான் உதவ முடியும்!!!                                

தானத்திலே சிறந்தது இரத்த தானம்!!!                    

கர்ப்பிணி பெண்ணிற்கு தயங்காமல் உதவுங்கள்!!!                           

எவ்வுயிரும் நம்முயிர் என்றெண்ணி உதவுங்கள்!!!                          

உயிர் காக்கும்  இரத்த தானம்,யாராலே ஆகும். நம்மால் ஆகும்!!!!                                 

இழப்பில்லா தருமம் இரத்த தானமாகும்!!!         

வேறுபாடற்ற உதவி இரத்த தானமாகும்!!!      

பலன் எதிர் பாராத உதவியாகும்!!!                       

சாதி மதம் இனம் மொழி, என்ற  வேறுபாடு தேவை இல்லை!!!                              

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம், வாடினேன் என்ற வள்ளலாரை மனதில்,                                  கொண்டால் முழுமனதோடு இரத்ததானம் செய்யலாம்!!!                            

ஒரு உயிரை வாழவைத்த நிம்மதி கிடைக்கும்!!!                         

சாலை விபத்துக்கள் பெருகி விட்டன!!!                

இரத்த சேதம் அதிகமாக இருக்கிறது!!!                      

உங்கள் உதவி சமுதாயத்திற்குத் தேவை!!!                               

ஒரு உயிரைக் நாம் காத்தால், நம் குலமே சிறக்க வாழும்!!!                                 

இரத்த தானம் செய்து புண்ணியத்தை, நமது வாரிசுகளுக்குத் தந்து செல்வோம்!!!               இளையோருக்கும் இரத்ததானத்தைச் சொல்லித்தருவோம்!!!          

இரக்கமும் மனிதமும் நிலைக்கச் செய்வோம்!!!   

 

-சித்திரக்கவி முனைவர் பீ.ரகமத் பீபி, ஆத்தூர்.

******************************************************************************************************

007.

இரத்த தானம் செய்வோம்

இன மொழி பாராத மனிதமிது

இறைவன் அளித்த கொடையின் சிறப்புமிது

ஊர் பெயர் அறியா ஒருவற்கு

குருதியை தானமாய் நாம் கொடுப்போம்

உறைந்து போகும் குருதியுமே உயிரோட்டமாகிடுமே

உரிய நேரத்தில் உயிரையும் காத்திடுமே

குருதிக்கு விலை பேசி மனிதமிழக்காதே

இரத்ததானம் செய்திட்டால் மனிதமும் வாழ்ந்திடுமே

அழிந்து போகும் உடலும் நிரந்தரமில்லையே

இரத்ததானம் நாம் தந்து சொந்தமாகிடலாம்

உறவுகளுக்கும் மேலான உயிராய் மாறிடலாம்

இரத்தம் தந்து உயிர் காத்தால்

மனிதா!  அன்னையும் நாமும் ஒன்றாவோம்

நமக்குள் புதிய ரத்தம் ஊற்றெடுத்து

வாழும் வரை புத்துணர்வு பெற்றிடுவோம்

சாவின் விளிம்பில் உயிர் காப்போம்

குருதி தானம் நாம் கொடுப்போம்

குருதி தானம் நாம் செய்தால்

தரணி போற்ற தனித்து நிற்போம்

ஊரும் பேரும் அறியா ஒருவன்

உன் பேர் சொல்லி வாழ்ந்திடுவான்

பணத்தை வாரி இறைத்தாலும் மறந்திடுவோம்

இரத்தம் தந்து மீட்டோரை மறவோமே

மூன்று மாத இடைவெளியில்
ஊற்றெடுக்கும்

உன்னதமாய் மனமுவந்து உயிரை காக்கும்

பதினெண் அகவை தாண்டி வந்தால்

பல பேர் உயிரை காத்திடலாம்

உடலும் உன்னில் உறுதியாய் இருந்தால்

உயிர் காக்கும் இரத்தம் தந்திடலாம்

தாய் கொண்டு வந்த உடலை

தானம் செய்து காப்பதனால் தாயாகிடலாம்

உயிரை மீட்டெடுத்து  உலகை காத்திடுவோம்

புலவர் பெ. மீனா
பட்டாபிராம்

********************************************************************************************

008.

இரத்த தானம்

மனிதநேய மாண்பின் முதன்மை ரத்ததானம்

ஜாதியை பார்ப்பதில்லை மதங்களை பார்ப்பதில்லை

உயிர்களைப்பிழைக்க வைக்கும் அமிர்தம் ரத்த தானம்

இருகரம் கூப்பி கும்பிடும் மனிதம்,
இரத்ததானத்தால் புனிததன்மையை பெறும் மனிதகுணம்

குருதி கொடுத்தாலும் மீண்டும் உற்பத்தியாகும்

ஆரோக்கியமான புதுரத்தம் புதுவிதமாய் புத்துணர்ச்சியாகும்  

மனிதாபிமானம் மனிதம் மனிதநேயம் அவசியம்

அதற்கு முதன்மையான வழியே தானம்தான்

அன்னதானம் ஒருவேளை உயிரை காக்கும்

ரத்ததானம் ஒருஉயிரை ஆயுசுக்கே காக்கும்

மாந்தர்கள் சமமாய் இருப்பதும் ரத்ததானமே

கொடுப்பவனும் யார் என்று தெரியாது

பெறுபவனும் யார் என்று தெரியாது

விபத்துக்கள் ஏற்பட்டால் முதன்மையானது ரத்ததானமே

கவிதைகளில் வரிகளுக்கு உயிர் உள்ளதுபோல்

வாழ்க்கையில் உணர்வுக்கும், உணர்ச்சிக்கும் உயிர்கொடுக்கலாம்

உயிர்களை மனதாரகாப்பாற்றலாம் ரத்ததானம் செய்வதால்

வாழ்வது ஒருமுறைதான் சாவதும் ஒருமுறைதான்

இடைப்பட்ட காலத்தில் நல்லதையே செய்வோம்

குருதிக்கொடையை தானமாய் பலஉயிர்களுக்கு கொடுப்போம்

மனிதர்களாய் இருப்போம் மாக்களாய் இல்லாமல்

ஆபத்துக் காலத்தில் அவசியமாய் கொடுப்போம்

திருப்பூர் குமரன், எண்ணற்ற தியாகிகள்

ரத்தம்சிந்தி  சுதந்திரம் பெற்றநாடு புனித மண்ணான

நம் இந்திய திருநாட்டில் துணிந்து

அறத்தை விதைப்போம் தேவைப்படுவோருக்கு உதவுவோம்

இரத்ததானத்தை மனமுவந்து பயப்படாமல் கொடுப்போம்

உதிரம்கொடுத்து பல உயிர்களை காப்போம்
 
    வி.கணேஷ் பாபு , ஆரணி

**************************************************************************************

009.

இரத்த தானம்...

தோழர்களே இரத்த தானம் செய்யுங்கள்...!!!
     உயிரின் தாகம் நிற்கட்டுமே
    உயிரின் செந்நீரால்
ஒரு சொட்டு மழைத்துளி உலகைக் காக்கும்
     என்றால் உங்கள் ஒரு சொட்டு இரத்தம்
ஒரு குடும்பத்தையே காக்கும்!

உங்கள் இரத்தத்தால்
      ஒரு சிரம் காக்காப்பட்டாலும்
ஆயிரம் கரங்கள் சேர்ந்து
     உன் சிரத்தை காக்கும்...!

எமனின் பாசக் கயிற்றை
     குருதியால் அறுக்கலாம்!...
உங்கள் குருதியால் உலகையே காக்கலாம்
     மனதில் உறுதியோடு இருங்கள்!

மனிதனை தின்னும்
     மண்ணுக்கு இரத்தத்தை அர்பணிக்கும் மனிதனே!!!
ஒரு உயிரைக் காக்க அறப்பணி செய்யுங்கள்...

முனைவர்.எஸ்.கிரேசிராணி
விநாயகா மகளிர் கலை அறிவியல் கல்லூரி
கீழப்பழுவூர்

******************************************************************************************

010.

இரத்த தானம்...

ரத்த தானம் அரிது அற்புதம்,
மனித மூலிகையாக மேவிய சத்துளம்.
பிறருக்குத் தரித்த அமைதியை,
அழிந்து வெல்ல முடியாத அடியார்கள்.

இன்றுக்கு இன்று வேண்டாம் காப்பாத்திரம்,
விடிய முன்னிட்டு அடைய வேண்டிய அழகு.
தமிழன் தான் மெய்ந்ததும் பிறர் உயிர்கள்,
தமிழில் அடிக்கடி பொருள் கொடுத்தல்.

வேறு மொழியில் வாழ்க்கையை மொழிக்க,
வெறும் வார்த்தைகளைக் கொடுத்து வாழ்க.
ரத்த தானம் பார்க்க வழியே என்னைத்,
தமிழ் தாய்மொழியாக வளர்த்து வா.

பிறர் வாழ்க்கைக்கு ஒரு அழகான வார்த்தை,
தமிழ் மொழி இதோ உன் கவிதையில் உள்ளது.
ரத்த தானம் என்று மட்டும் புகழும்,
அதன் மூலம் உயிரோடு வாழும் நம் வாழ்க்கையும்

இ.அருந்ததி
விநாயகா மகளிர் கலை அறிவியல் கல்லூரி
கீழப்பழுவூர்

****************************************************************************************************

011.

இரத்த தானம்

தானத்தில் சிறந்ததொரு
     நிதானம் என்பர் சிலர்
ஆனால் உள்ளவை அனைத்தையும் விட
     உண்மையான தானம்
அத்தனை பேருக்கும் உயிர் தரும்
     இரத்த தானம் ஒன்று தான்
உயிர்களை பிழைக்க வைக்கும்
     உன்னதமான செயல் அதுதான்
எவ்வளவு கொடுத்தாலும் நம்மில்
     எவள்ளளவம் குறையாத செல்வமதை
கொடுத்தது தான் கொடுத்தான்
     அதை யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
     அனைவருக்கும் கொடுத்தான்
கொடுக்க கொடுக்க நம்மிடம்
     கொழிக்கும் செல்வமே குருதி...
அதை தானம் செய்துப்பார் - உன்
செழிப்படையும் என்பது உறுதி
     பிறருக்கு வாழ்வளித்து, உன்
வாழ்வை செம்மைபடுத்தி கொள்
குருதி- பிறருக்கு உயிர் தரவே எனக்
     கருதி தானம் செய்,
இரத்ததானம் செய் அதை
ஒத்த தானம் இல்லை!!!


முனைவர்.ஆர்.திவ்யபிரகாஷ்
முதல்வர் விநாயகா மகளிர் கலை அறிவியல் கல்லூரி
கீழப்பழுவூர்

***************************************************************************************************

012.

ரத்த தானம் ஒன்று ஆனதே போதும்,
மேற்கொண்ட நன்மைகள் அதிகம் போதும்.
அரிதான உயிர்களுக்கு ரத்தம் தரும்,
அது தரும் நன்மையும் வரும் கருவி அனைத்தும்.

பலரும் வருகின்ற ரத்தம் நன்றி,
அதனால் வாழும் உயிர்கள் பல நலம் பெறும்.
கொடுக்கும் ரத்தம் பெரும்பாலும் பணம்,
அதனால் துன்பம் அனைவரும் விடும் பேரும்.

தமிழர் கையில் மூத்த ரத்தம் இருக்கும்,
அது மூன்று குணங்களையும் அடைக்கும்.
இதையும் உணர்ந்து தமிழ் மொழி வளர்க்க,
வேறு மொழிகளின் முயற்சியை நம்பிக்கை வைக்க

சி.தயாநிதி
தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, பெரம்பலூர்

*************************************************************************************************

013.

ரத்த தானம் !

தானத்தில் சிறந்தது ரத்த தானம் !   
தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் !

குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்து
உறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் !

விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை குருதி !
விரைவில் ஏற்றினால் உயிர் பிரியாது வாழும் !

பிஞ்சுக் குழந்தைகளுக்கு தேவைப்படும் குருதி !
பிஞ்சு மொட்டுகள் கருகாமல் காக்கும் குருதி !

நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தேவைப்படும் குருதி !
நோய் நீங்கிட உதவிடும் வழங்கிடும் குருதி !

ம.சித்ரா கீழப்பழுவூர்

**************************************************************************************************

014.

ரத்த தானம் செய்வோம்...


உயிர்உயிருள்ள உடல் சுரக்கும் இரத்தத்தை
உலகத்தில் எவரும் ஆய்வகத்தில்
உருவாக்க நினைத்தபோதும் இயலாமல் போகவே
ரத்ததானம் முன்னெடுத்தார் உலகமெல்லாம்
உயிருடனே இருப்பாரே இயன்றவரை
ரத்த தானம் செய்திடுவீர்
இயலாதோர் எழுந்து நடந்திட நோய்யுற்றோர் சீர் பெற
நாம் அளிக்கும் ஒவ்வொரு துளியும் பயன்படட்டும்
உயிரியல் திரவம் என்றும் உயிர் காக்கும் திரவம்
அறுவை சிகிச்சை முதல் அடிபட்டவர் வரை
உயிர் பிழைக்க ரத்த தானம் செய்வோம்
கொடுக்க கொடுக்க சுரக்கும்
கொடுத்த பிறகு சுறுசுறுப்பாக இருக்கும்
உயிர்காப்போம் ரத்த தானம் செய்வோம்...


முனைவர் சி . அருள் ஜோசப் ராஜ் கடலூர்

**********************************************************************************

015.

ரத்த தானம் செய்வோம்

உயிரைக் காக்க உன்னதமான வழி

உயிர்க் கொடுப்பவன் இறைவன் என்பர் வாழும் போதே நாம் இறைவனாவோம்

 

பிறதானம் செய்ய பணம் தேவை ரத்த தானம் செய்ய மனம் தேவை

ரத்த தானம் செய்து பிறருக்கு உதவி செய்து நம் உடலையும் சுத்தம் செய்வோம்

அறிவியல் முன்னேற்றத்தில் உன்னதமான கண்டுபிடிப்பு

வாழும்போதே பிறரை வாழ வைப்போம்


பிறர் வாழ்வின் நாம் மகிழ்ந்து

ரத்த தானம் செய்து என் உயிரை காப்போம்

ரத்த தானம் செய்வதால் உடன்பிறப்பாகும் ஒற்றுமை வளர்ப்போம்


ரத்தத்திலும் புத்துணர்ச்சி பிறக்கட்டும்

பிறர் வாழ்விலும் புத்துணர்ச்சி பிறக்கட்டும்

உன் உயிர் அணுக்கள் பிறர் உடம்பில் செலுத்தி உயிர் கொடுப்போம் உயிர் காப்போம்

ரத்த தானம் செய்வோம் மனிதம் காப்போம் ஒற்றுமையாய் வாழ்வோம்


இரா அன்சல்யா

உதவி பேராசிரியர்,

தமிழ் துறை குயின்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,

புனல் குளம் ,புதுக்கோட்டை.

******************************************************************************

016.

இரத்த தானம் செய்வோம்.

இரத்த தானம் உயிர் தியாகம்//
உயிருக்கு உயிர் உதவி செய்யும்//
உன்னத உண்மையான  இடுக்கண் கலைவது//
நண்பனாக இருக்கலாம் தானத்திற்குப்
நண்பர்கள்//
ஆகலாம்
உலகம் முழுவதும் இரத்தம் //
ஒன்றுதான்
மனிதன் பிரித்த பிரிவினை  //
மனிதம் ஆகாது
மனிதனையும் காப்பாற்றாது//
துயர் துடைக்கும் எல்லோரும் தூயவர்கள்//
நன்மையும் தீமையும்
செய்வினை பயனே//
தானத்தால் உயர்ந்து
தரத்தால் உயர்ந்து//
என்றும் அன்புடன்
உலகோடு ஒத்துவாழும்//
சிந்தனை சிறப்போடு
சீரான சமுதாய//
முன்னேற்றம் ஏற்பட
இயன்றவரை உதவியாய்//
நல்லோரை வாழவைக்க ஊக்கமாய்
ஆபத்தில்//
கைகொடுக்கும்
உற்றதுணையாக
மகிழ்வித்து மகிழும்//
மந்திரம் பலவற்றில்
குருதிக் கொடை கோபுரம் //
போன்றது தானும் வாழ்ந்து அடுத்தவரையும்//
வாழவைக்கும் அற்புதமான செயல்
அவனி //
போற்றும்
ஆனந்தம் நிலைக்கும் நிம்மதி//
கிடைக்கும் நீயா நானா போட்டிகள்//
ஓயும் உலகம் உய்யும்
உண்மை//
நிலைக்கும்
துரோகம் நீங்கும்
நீதி//
வலுப்பெறும் நிதானம் பிரதானம் இரத்ததானம்//
அமைதி நிறையும்
வேற்றுமை ஓடும்//
சமம் என்ற சந்தனம் மணக்கும்//
சகோதரத்துவம் பெருகும் பிறப்பின் அர்த்தம்//
விளங்கும் விவேகம்
வீரநடை போடும்//
வேதனை அடைந்தவன் சாதனை படைக்கவும்//
சமரசம் பெற்று சக்தியும் பெற்று//
பூலோக வாழ்வைப்
புனிதமாக்கலாம் பூர்வ//
ஜென்ம புகழும்
வினையின் விளைச்சல்//
நல்ல மகசூலாக  நாடே கொண்டாடும்//

கவிபேரரசி.
வீ மீனாட்சி மதுரை.

******************************************************************************************

017.

ரத்த தானம் !

தானத்தில் சிறந்தது ரத்த தானம் !   
தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் !

குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்து
உறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் !

விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை குருதி !
விரைவில் ஏற்றினால் உயிர் பிரியாது வாழும் !

பிஞ்சுக் குழந்தைகளுக்கு தேவைப்படும் குருதி !
பிஞ்சு மொட்டுகள் கருகாமல் காக்கும் குருதி !

நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தேவைப்படும் குருதி !
நோய் நீங்கிட உதவிடும் வழங்கிடும் குருதி !

ரத்ததானம் வழங்குவது மனிதநேயம் !
ரத்ததானம் வழங்கிட விழிப்புணர்வு வேண்டும் !

ரத்த தானத்தால் பிழைத்த உயிர்கள்  பல !
ரத்த தானத்தால் வாழும் உயிர்கள்  பல !

பணம் தருவதை விட ரத்தம் தருவது மேல் !
குணம் இருந்தால் போதும் கொடுக்கலாம் !

அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனருடன் !
அனைவரும் ஆண்டுதோறும் தருகின்றனர் !

நானும் அவர்களோடு சேர்ந்து தருகின்றேன் !
நன்மை செய்தால் நன்மை கிட்டும் நமக்கு !

பார்வையற்றோர் பயமின்றி குருதி தருகின்றனர் !
பார்வையுள்ளோர் பயப்படுகின்றனர் குருதி தருவதற்கு !

இறைக்கும் கிணறுதான் தானே ஊரும் !
இரக்கத்துடன் ரத்தம் தந்தால்  தானே ஊரும் !

உதவிடும் உள்ளமே மனிதனின் மகத்துவம் !
உதிரம் தந்து உதவுவது உயர்ந்த உள்ளம் !

ரெ.கலையரசி கீழப்பழுவூர்

*****************************************************************************************

018.

தர்மம் தலை காக்கும் என்பார்கள் !
தரும் ரத்தம் தலை காக்கும் உண்மை !

மனிதனை மனிதன் காப்பது கடமை !
மனிதனாகப் பிறந்ததன் அர்த்தம் விளங்கும் !

கொடைகளில் சிறந்த கொடை குருதிக்கொடை !
கொடைக் கொடுத்து காப்போம் உயிர்களை !

தன்னலமாக வாழ்வது வாழ்க்கை அன்று !
பொதுநலமாக வாழும் வாழ்க்கை நன்று !

தான் உண்டு தன்  உயிர் உண்டு வாழ்வது  நன்றன்று !
தான் உண்டு பிறருக்குத் தொண்டு உண்டு வாழ் நன்று !

ஆ.சுமதி
கீழப்பழுவூர்

**********************************************************************************************

018.

இரத்த* *தானம்
      ===============
மனிதன்   செய்யும்
மாண்பின்  மகிமை

தானம்  செய்வதே
தலை  சிறந்ததாகும்

உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே

தர்மம்  போற்றிட
தானம்  செய்வீரே

உயிர்கள் துடித்திடும்நேரம்
உதிரம்  கொடுத்திட

உயர்வாய் எண்ணுவார்
உலகிலே  சிறந்ததிடுவார்

குருதி  கொடுத்தால்
குருதி  பெருகுமே

இரத்தமில்லா  உயிரும்
புத்துயிரும் பெற்றிடுமே

குறையாத  குருதி
கொடுத்திட குறையின்றி

சுரக்குமே சுரபியாய்
சுகமாக்  பெருகிடும்

உயிர்காக்கும் தானமே
உயர்வான  தானமே

ஆன்மிக லட்சுமி, (சி. மீனாட்சி )

***************************************************************************************

019.

இரத்ததானம்
இரத்தம் வழங்கியே
  பெரியோர் என பெயர்
பெறுவோம் நாமே
  குணத்தில் கீழே உள்ளோர் என எவரும்
  இல்லை உலகில்
குருதிக் கொடையாளர்
   அனைவரும் மேலோர் எனப்படுவார் உலகில்
   பேதம் இல்லா குருதி
ஒன்றே அனைவரையும்
  வியப்பில் ஆழ்த்தும்
குருதி வழங்கும் நமக்கு
  தானே வந்து சேரும்
குருதி மூன்றே மாதமே
  அமிழ்தமே ஆயினும்
அளந்து உண் என்பது
    பழமை மொழி
தானத்தில் சிறந்த
   குருதிக் கொடைக்கு
ஏது?எல்லை என்பதே
   புதுமொழி வாழ்வில்
நல்லோர் வாழ்வு சிறக்க
  வல்லோர்  தருவதே
குருதித்தானம்  அன்பு
   உடையார் வழங்குவது
குருதிக் கொடையாளர்
   வள்ளல் பெருமானே.


திருமதி.கோ.சங்கரம்மாள்.திருவில்லிபுத்தூர்

***************************************************************************

020.

இரத்த தானம் செய்வோம்....

உலகின் சிறந்த தானம் இரத்த தானம்
உயிர் காக்கும் சிறந்த தானம்!

அள்ளி எடுத்தாலும் குறையாத தானம்
அள்ளியபின் புத்துணர்ச்சி கொடுக்கும் தானம்!

தீய பழக்கம்ருந்தால், கொடுக்க முடியாத தானம்,
தீய பழக்கத்திலிருந்து விடுபட உதவும் தானம்!

உடல் உபாதைகளை குறைக்கும் தானம் ,
 வாழ்நாள் அதிகரிக்க உதவும் தானம்!

உணவு பழக்கத்தை உறுதி செய்யும் தானம்,
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் தானம்!

முன் வரிசையில் நிற்க உதவும் தானம்,
மூன்று மாதத்திற்கொரு முறை கொடுக்கும் தானம்!

நன்கொடை கொடுக்கும் நல்ல தானம்,
நன்மை பெற்றோரால் ஆசி தரும் தானம்!

உயிரை காப்பாற்றும் உத்தம தானம்,
உயிர் பிழைத்தோர்முன் நிற்க வைக்கும் தானம்!

மகிழ்ச்சியையும், திருப்தி யையும் தரும் தானம்,
மயக்கத்தில் இருப்பவரை எழுப்பும் தானம்!

ஆயுள் முழுவதும் செய்யும் தானம்,
காயம்பட்டடோரின் ஆயுளை அதிகரிக்கும் தானம்!

வள்ளல் போல் வழங்கும் தானம்,
வள்ளல் என்று பெயர் தரும் தானம்!

புத்துயிர் கொடுக்கும் புனித தானம்,
பூமி எங்கும் பேசப்படும் தானம்!

அணுக்கள் அதிகரிக்க உதவும் தானம்,
ஆபத்தில் இருப்போரை காக்கும் தானம்!

ஊசலாடும் உயிர்களுக்கு உதவும் தானம்,
உயர்ந்த சேவையாளனாய் உருவாக்கும் தானம்!

பல உயிர்களை பாதுகாக்கும் தானம்,
பாதிக்கப்பட்டோரை வாழ வைக்கும் தானம்!

உயிர் காக்கும் தானத்தை உயிரோடு,
செய்வோம் பல உயிர்களை காப்போம்!

ஆ. ஜெசிந்த்

கேரள வித்யாலயம் மேல் நிலைப் பள்ளி ,

புரசைவாக்கம் , சென்னை – 600084

******************************************************************************

021.

இரத்ததானம்.                          

இரத்த தானம் செய்திடுவோம் வாருங்கள்!                            

நம்மால் முயன்ற உதவியை புரிந்திடுவோம் வாருங்கள்!        

இரத்த தானம் செய்து உயிரைக் காப்பாற்றும் வாருங்கள்!                             ‌

இரத்த தானம் செய்து ஒற்றுமைகளே உணர்த்திடுவோம் வாருங்கள்!

இரத்த தானம் செய்து புதிய இரத்தத்தை உருவாக்கிடுவோம்!          

பலதீய பழக்கம் இல்லாத மனிதனாக உருவாகிடுவோம்!

தண்ணீர் இன்றி எந்த உயிரினும் உயிர் வாழ இயலாது அது போல!   

இரத்தம் இன்றி உயிர்கள் வாழ இயலாது!                                          

உயிரைக் கொடுப்பவன் கடவுளாக கருதுவார்கள்?    

இரத்தத்தை கொடுப்பவன்! உயிரைக் காக்கும் கடவுளாக கருதுவார்!                         

தனக்குத் தேவையான போது உதவி புரிபவன் நண்பன்!   

உயிருக்கு போராடும் போது உதவுபவன் கடவுள்!          

மனிதா உன்னால் மட்டும் முடியும்.உனக்கு கிடைத்த வாய்ப்பை நீ தவற விடாதே!            

வாருங்கள் !வாருங்கள் !

வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம் 

ரத்த தானத்தை தந்து பல உயிர்களை காப்பாற்றுவோம்.           

- தர்ஷ்னா ஸ்ரீ

*******************************************************************************

022.

இரத்த தானம் செய்வோம்....

நம் அனைவருக்கும் என்ன பந்தம் ?
நாம் ஆகிடலாம் இரத்த சொந்தம் ....

உறவுகளாய் வாழ்ந்தால் மட்டும்
இரத்த சொந்தம் ஆகிடுமா ?

இரத்தம் தானம் தந்து வாழ்ந்துவந்தால்
நாம் இரத்தசொந்தம் ஆகிடலாம்....

உடல் உறுப்பு தானம் தந்தால்
இறந்தபின்னும் வாழ்ந்திடலாம் என்றும்

வாழும்போதே மனிதனாய் வாழ்ந்தஇன்பம்
இரத்த தானத்தால் தான் சாத்தியமே .....

சாவின் அருகில் சென்று திரும்பியவன்
நம்மை தெய்வமாக கும்பிடுவான் !

ஊர்பெயரும் யாதென அறியாதவன்
உன்னை உளமார வாழ்த்திடுவான்.....

உறைந்து போகும் இரத்தம் கூட
உயிரோட்டம் பெற்றிடுமே !

உரியவருக்கு நீயும் தந்தால்
அவர் உயிர்தந்து காத்திடுமே.....

பதினெண் அகவை தாண்டிவிட்டால்
நாற்பத்து ஐந்து மேல் உடல் எடையிருந்தால்

இரத்தம் தானமாக தந்திடலாம் அந்த
எமனையும் இதனால் வென்றிடலாம் ....

வெ.அமிர்தம்
கீழப்பழுவூர்

*********************************************************************************

023.

இரத்த தானம் செய்வோம்....

உடல்நிலை உன்னில் உன்னதமாயிருந்தால்
உடனே இரத்தம் தந்திடலாம் ,

மூன்று மாத இடைவெளியில்
முழுமனதாய் இரத்தம் தந்திடலாம் .....

தானம் தந்த இரத்தமது மீண்டும்
ஊரிடுமே இரண்டு நாளில் ,

புதிய ரத்தம் ஊற்றெடுத்து உடல்
புத்துணர்ச்சி நம் வாழ்நாளில் ....

இரத்தத்திற்கு விலை பேசி
அதை வியாபாரம் ஆக்கிடாமல்,

தானமாக நாமும் தந்து
தரணி போற்ற தனித்து நிற்போம் !

பணத்தை தானம் தர மனம் தயங்கினாலும்
இரத்தம் தானம் தர வீண் தயக்கம் வேண்டாம் ...

இரத்த தானத்தில் தனி புகழிடம்
தாய் தமிழகத்துக்கே இன்று முதலிடம் ,

இந்த இடம் நிலைத்திருக்க
உறுதிகொள்வோம் இந்நாளில் .

தாய் தந்த நம் உயிரை - நாமும்
இரத்ததானம் தந்து தாயாவோம்


இ.ஐஸ்வர்யா
ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி
திருச்சி

*************************************************************

024.

இரத்த தானம் செய்வோம்....

தானங்களில் சிறந்த தானம் இரத்ததானம் .//
இது உயிர் காத்து, உறவை//
உருவாக்கும். இரத்தம் ஏழை, பணக்காரன்// என்ற பாகுபாடு இன்றி//

சிறியோர் ,பெரியோர் வேறுபாடு இன்றி//
அனைவரின் உடலிலும் ஓடுகின்றது.பசுவைத்தானம்//

செய்வது பசு தானம். பசித்தோரின் //
ஒருவேளை பசியைப் போக்க கொடுப்பதே//

அன்னதானம் . உடல் உறுப்புகளைத் தானம் //
செய்வதே உடல்  தானம்.இதனால் //
இறந்த பின்னும் மனிதன் வாழ்கின்றான்.//
 நிலம் அற்றோருக்கு நிலக்கிழார்கள் உவந்து//
 அளிப்பதே பூமிதானம். இதனால் குடிசிறக்கும்.//

பொருள் செல்வத்தைக் கொடுக்க குறையும்.//

அறிவு செல்வத்தைக் கொடுக்க வளரும்.//

இரத்தத்தைக் கொடுக்க புதுஇரத்தம் ஊறும்.//

உடலும் உள்ளமும் தூய்மை அடையும் ./

/உயிர்க் காக்கும். உறவு உருவாகும்.//
உயிர்ப்பெற்றவரும் அவர்ச்சுற்றமும் //
நம்மை , வாழ்த்தி வரவேற்கும். நம்//

உள்ளமும் மகிழ்ச்சி அடையும் .மனிதனில்...//

ஜாதி, மதம், பாசைகளில் வேறுபட்டாலும் //

மனிதம் ஒன்றே. இரத்தத்தில் எ,//
பி, ஏபி,ஓ என்ற //
வகைகள் இருந்தாலும் நிறம் ஒன்றே,//

வேலையும் ஒன்றே, ஜாதி, மதம் ,//
பேதம் அற்ற ,காந்திய ஆயுதமே//

இரத்ததானம் .தியாகச் செம்மல்கள் பலர் .//

இரத்தம் சிந்தி சுதந்திர காற்றைச்//
 சுவாசிக்க வைத்தனர். இரத்தம் தேவைப்படுவோர்க்கு//

இரத்துதானம் செய்து உயிர்க்காத்து ,//
உறவு பெற்று, வாழ்வோமா? பெருகட்டும் ..,//
குருதி கொடைகள். இல்லாமல் ஆகட்டும் உயிர்ப்பலிகள்.

முனைவர்.சு. ஏஞ்சலதா,

வாவு வஜுஹா வனிதையர் கல்லூரி, காயல்பட்டினம்.

***************************************************************************************

025.

இரத்ததானம்

கொடுத்தாலும் குறையாதச் செல்வம் இரத்ததானம்//

*மீண்டும் உற்பத்தியாகும் ஊற்றுக்கண் இரத்ததானம்//

*மனிதனுக்கு வழங்கும் உயரிய விருது இரத்ததானம்//

*பாகுப்பாடு இல்லாப் பரிசுத்தமானது இரத்ததானம்//

*சுயநலம் இல்லாதப் பொதுநலமே இரத்ததானம்//

*ஏழைகளின் கூடாரம் தான் இரத்தவங்கிகள் //  

*பணத்திற்காக கொடுக்கும் இரத்ததானத்தை விட//

*பாசத்திற்காக கொடுக்கும் இரத்ததானம் சிறந்தது//

*இதயநோய்க்கு  இயற்கை மருந்து இரத்ததானம்//

*தாயிற்கும் சேயிற்கும் உறவினைத்தந்தது இரத்ததானம்//

*ஓருடல் ஓருயிர் உணர்வைத்தந்தது  இரத்ததானம்//

*மழைக்கு மேலானது நாம்தரும் இரத்ததானம்//

*அமிழ்தத்தை அள்ளி விருந்தளிப்பது இரத்ததானம்//

*தகடூர் தம் பிரியாணி இரத்ததானம் செய்பவருக்கே//

*உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்//

கவிஞர்.   ஆ.இளங்கோவன் MA., MPHIL , B.Ed., NET.,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
தொன் போஸ்கோ கல்லூரி, தருமபுரி

*********************************************************************************

026.

இரத்த தானம்...!

தானத்தில் சிறந்ததொரு
     நிதானம் என்பர் சிலர்
ஆனால் உள்ளவை அனைத்தையும் விட
     உண்மையான தானம்
அத்தனை பேருக்கும் உயிர் தரும்
     இரத்த தானம் ஒன்று தான்
உயிர்களை பிழைக்க வைக்கும்
     உன்னதமான செயல் அதுதான்
எவ்வளவு கொடுத்தாலும் நம்மில்
     எவள்ளளவம் குறையாத செல்வமதை
கொடுத்தது தான் கொடுத்தான்
     அதை யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
     அனைவருக்கும் கொடுத்தான்
கொடுக்க கொடுக்க நம்மிடம்
     கொழிக்கும் செல்வமே குருதி...
அதை தானம் செய்துப்பார் - உன்
செழிப்படையும் என்பது உறுதி
     பிறருக்கு வாழ்வளித்து, உன்
வாழ்வை செம்மைபடுத்தி கொள்
குருதி- பிறருக்கு உயிர் தரவே எனக்
     கருதி தானம் செய்,
இரத்ததானம் செய் அதை
ஒத்த தானம் இல்லை!!!

முனைவர்.இரா.திவ்யபிரகாஷ்
முதல்வர் விநாயகா மகளிர் கலை அறிவியல் கல்லூரி
கீழப்பழுவூர்

*************************************************************************

027.

இரத்த தானம்....!

வேருக்கு நீர் கொடுத்தால் மரத்தினை காக்கலாம்...
உடலுக்கு உதிரம் கொடுத்தால்
மனிதனை காக்கலாம்!!..
உதிரம் கொடுக்க வாருங்கள்!...
சக மனிதர்க்கும்
உயிரினை தாருங்கள்!!...
உனக்கு நான் இரத்த தானம் செய்தேன்
நான் பணக்காரன் அல்ல
இரத்த பிரிவில் சாதி இல்லை அதனால் எனக்கு எந்த தடையும் இல்லை
இரத்ததிற்கு தீண்டாமை இல்லை என் இரத்தமும் சிகப்பு
தமிழா
உன் இரத்தமும் சிகப்பு

க.இளவரசி கீழப்பழுவூர்

******************************************************************************

028.

இரத்த தானம் செய்வோம் ...

தானத்தில் சிறந்த தானம் இரத்த தானமே!!

உலகில் மனிதன் உயிர் வாழ்வதற்கு இரத்தமே!!

மனித உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு !!

இரத்தம் கொடுத்தால் உயிர்  பிழைப்பார்கள்!!

மனிதனுக்கு மாறாத இ ரத்தம் மட்டுமே!!

உடலில் இரத்தம் ஓடிக்கொண்டே இருக்கிறது!!

மனித உடலில் குருதி  செந்நிறமே!!

ஆபத்தில் இருப்பவர்களுக்கு இரத்தம் கொடுத்தால்!! 

ஆயுள்  அதிகரிக்கும் என்பதே நிதர்சனம்!!

ஜாதி இன வேறுபாடு இன்றி!!

மனிதன் இரத்த தானம் செய்யலாம்!!

மனிதனின் இரத்த தானம் மறு வாழ்வு!! 

இரத்தம் உடலில் ஒன்றாக கலந்து உறவாடுவடுகிறது!!

மனித உடலில் இரத்தம் இல்லாவிட்டால்!!

எந்த உறுப்புகளும் இயங்காமல் நின்றுவிடும்!!

உறுப்புகளை இயங்க வைப்பது இரத்தமே!!

மனித இரத்தக்குழு தெரிந்தால் வேண்டுமானாலும்!!  

ஆபத்தில் உள்ளவர்களுக்கு தாராளமாக வழங்கலாம்!!

சத்துள்ள உணவுகள் இரத்தத்தை அதிகரிக்கும்!!

சிவப்பு  காய்கள் இரத்தத்தை அதிகரிக்கும்!!

உயர் இரத்த அழுத்தம்!!

இரத்த கொதிப்பு  என்பதே உண்மை!!

மனிதா இரத்தத்தை தூய்மைப்படுத்து!!

உன் தூய்மை வாழ்வில் புனிதமாக்கும்!!

இரத்தத்தின் அளவே  சாப்பிடும் உணவே!!

மனித வாழ்வில் உணவே மருந்து!!

மருந்தே உணவு என்பதே  நிதர்சனம்!!

மனிதனின் ஆரோக்கியம் நல்ல உணவே!!

உணவின் ஆரோக்கியம்  உடலும் மனமும்!!

மனிதா இரத்த தானம் செய்வோம்!!

மனித இரத்ததானம் உயிர்களை காப்போம்!!

ஒரு துளி இரத்தம் உயிர் வாழ வைக்கும்!!

மனித இரத்தம் உன்னதமான  உண்மையாகும்!!

இரத்தம் கொடுப்பவர் இறைவனுக்கு சமமானவர்!!

இரத்தம் வழங்கி மனிதன் வாழ்ந்தால்!!

மறு பிறப்பு உதிரம் வழங்கி!!

வாழ்வதே உண்மையான வாழ்வு ஆகும்!!

*********************************************************************************************************

029..

இரத்ததானம் செய்வோம்...

கொடையில் சிறந்த கொடை குருதிக்கொடை//
கடைத் தெருவில் கிடைக்கின்ற பொருளாகுருதி//
மடை திறந்த மனத்துடனே கருணையுள்ளோர்//
தடையின்றி தருவதன்றோ குருதிக் கொடை!//

வெட்டிய நீள்முடியும் நகமும் போலே//
ஒட்டுமே உன்னுடலில் ஒரு திங்களிலே//
பட்டுப்போல் பாதுகாத்த உயிர் அழியாமல்//
தட்டி எழுப்புமே உம்குருதிக் கொடையே!//

ரத்தத்தை உன்னால் சுத்திகரிக்க இயலுமா//
ரத்தஅணுக்களை உற்பத்தி செய்யத்தான் முடியுமா//
வித்தையில்லை விந்தையில்லை இரண்டுமே கைகூடும்//
சத்தமின்றி கொடையளித்து கொடைப்பயனை நீயடைவாய்!//

தொன்னூறு நாட்களுக்கு ஒருமுறை கொடையளித்தால்//
பின்னாளில் வருகின்ற மாரடைப்பைத் தடுத்திடலாம்//
பொன்னான உயிரதையே போகாமல் நிறுத்திவைக்கும்//
உன்னாலே வழங்கப்படும் குருதிக் கொடைதனுமே!//

தகைசான்ற பெரியோரே தன்னார்வத் தொண்டர்களே//
புகையும் மதுவும் குருதிக்கொடைக்குப் பகை//
பகை கொடைக்கு மட்டுமல்ல உமக்கும்தான்//
புகையிலை போதைப் பழக்கம் ஒழிப்பீர்!//

பச்சைக் காய்கறியும் பழச்சாறு தானதுவும்//
இச்சையாய் உண்டுவர குருதி பொங்கிவரும்//
துச்சமாய் எண்ணாது துணிந்து முன்வருவீர்//
அச்சப்படத் தேவையில்லை அத்தனையும் நன்மைக்கே!//

கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த இம்மண்ணில்//
கொடைக்குப் பஞ்சமென்ற பழிச்சொல் தேவையில்லை//
விடைதெரியா வினாவினுக்கு விளக்கம் பெற்றிடுவீர்//
தடையின்றி இரத்தத்தை தானமாய் அளித்திடுவீர்!//

மனம் விரியட்டும் குணம் தெரியட்டும்//
கனப் பொழுதில் நிகழும் விபத்தினிலே//
இனம் அழியக் காண்போமா கைகொடுப்போம்//
தனத்தினும் சிறந்தது தானமென்று உயிர்காப்போம்!//

த.தமிழ்ப்பூங்குன்றன் ,

குமரலிங்கம்.

************************************************************************************************

030.

இரத்த தானம் செய்வோம்...

இரத்த தானம் செய்து வாழ்வோம்/
 மண்ணில் பிறந்த உயிர்களுக்கு எல்லாம்/
 மரணம் ஒருநாள் வந்தே தீரும்/
அவசர கதியில் இயங்கும் நிகழ்வில்/
 ஆபத்தை உணர வேகம் வேண்டாமே/

 எதிர்பாரா ஏற்படும் விபத்தில் தானே/
 உதிரம் போகும் அதிகம் தானே/
 எல்லா நேரத்திலும் எல்லா ரத்தமும்/
 அரிதாக கிடைப்பதில்லை அனுபவ உண்மை/
 கிடைக்கும் போது சேர்த்து வைத்து/
 வேண்டும்போது பயன்படுத்த வேண்டுமே/
மூன்று மாதங்கள் கழிந்தால் சுரக்கும்/
 குருதியை யாரும் கொடுத்து மகிழலாமே /
மரண வாயிலில் இருக்கும் உயிரினை/
 மன்றாடி காப்பாற்ற குருதி வேண்டுமே/
 இன பேதம் இல்லாமல் கொடுத்து உதவிட/
 அனைவரின் ரத்தமும்  சிகப்பு தானே/
உதிரம் கொடுத்து உயிர் காப்போம்/

முனைவர்.ஜெ.ராஜகுமாரி.  

உதவிப் பேராசிரியர் -தமிழ்துறை. 

கிறிஸ்டோபர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. 

நான்குநேரி. திருநெல்வேலி.

***************************************************************************************

031.

மானிடத்தின் உயிர்  நாடி இரத்த தானம்
 ஓடும் குருதியில் இனம் தெரிவதுண்டோ?
 யாவரும் ஓரினம்
 ஓர் நிலையே!
 மண்ணோடு மண்ணாய் மக்கும் உடம்பே!
 உயிர் உள்ள போது நினைப்பாயா?
 நம் குருதி மற்றவரைக் காக்குமே!
 உனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்வாயா!
 சிந்தித்தால் பொதுநலமாக வாழலாமே? நீ!
 மனிதன் வாழ குருதியை கொடுக்கலாமே?
 சிந்தனை செய் மனமே? நீ
 மானிடத்தர்மம் மனிதா? உன்னை போற்றுமே!
 பாரினில் எவருக்கும் தோன்றா புதுமையே!
 உனக்குத் தோன்றினாள் அருமையே! நினைவாய்
 உயர்ந்தவன் தாழ்ந்தவன் நிலை மாறுமே!
 பணக்காரன் ஏழை  என்றில்லாமல் வாழலாமே?
 நம்  இரத்தம்பலருக்கு பயன்படலாமே?
 உயிரோடு வாழும்போது சிந்தனை செய்வாயா?
 உடல் உறுப்புகள் தானத்தோடு சிறந்ததே! ரத்த தானம் நாம் செய்தால்
 மண்ணில் புகழோடு வாழலாமே? நீ
 நம் ரத்தத்தில் வேறுபாடு இல்லையே?
 ஆழ்மனத்தின் வெளிப்பாடே! ரத்த தானம்
 உடலைக் காப்ப ரத்தத்தை அதிகரிக்க
 உணவுப் பழக்கத்தையே! மாற்றுவாய் நீ!
 சரியான உணவு தேவையே!உனக்கு!
 சுவையான உனக்கு தேவை இல்லை
 சத்தான உணவை உட்கொள் நீ!
 ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள் நீ
 சுத்தமான ரத்தத்தை பிறருக்கு கொடுப்பாய்!
 நீயும் வாழு! மற்றவரையும் வாழவிடு
 இரத்ததானம் செய்வோம் வாருங்கள் இன்றே!

ஜே. கே. சுந்தரி,
திருவள்ளூர்.

***************************************************************************

032.

இரத்த தானம் செய்வோம்
...................................................
இறக்கின்ற உயிர்களை உயிர்ப்பிக்க இரத்த தானம் செய்வோம்
இருக்கின்ற உறவுகளைப் புதுப்பிக்க  இரத்த தானம் செய்வோம்

குழந்தைப்பேறின் போது குறையும் குருதியை ஈடு செய்ய
விபத்துக் காலங்களில் வெளியேறும் இரத்தப்போக்க சமன் செய்ய
குருதித் தானம் செய்வோம்

வெள்ளை அணுக்கள் சிவப்பணுக்கள் ஏற்றத்தாழ்வு பெறும் போது
சாதி மத பேதமற்று தரணியில் உள்ளோம் தானமாகப் பெறுவதற்குக் குருதித் தானம் செய்வோம்

தரமான குருதியைத் தானம் செய்வோம்
மதுவைக் குடித்துக் குருதியைக் கெடுக்காது
புகையிலை புகைத்துக் குருதியைக் கெடுக்காது குருதிக் கொடை செய்வோம்

குருதியைத் தூய்மையாக வைத்துக் கொள்வோம்
தேவைப்படுவோருக்குத் தேவையான நேரத்தில் குருதிக் கொடை செய்து
வாழும் குலங்காக்க குருதித் தானம் செய்வோம்

குருதி கொடுத்தால் புத்துணர்ச்சியோடு புது இரத்தம் ஊற்றெடுக்கும்
புதிய உறவுகளைப் பெற்றெடுக்கும்
பல உயிர்களின் பாதைகள் தெளிவுற பாதகமற்றுக் குருதி கொடை செய்வோம்

இருப்பதைக் கொடுப்போம் இல்லாதார்க்கு வாழும் உயிர்களுக்கு வாழ்வழிப்போம்
ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வின்றி
சாதி மத பேதமின்றி
இருக்கும் உயிர்களை இன்புறச் செய்ய
குருதிக் கொடை செய்வோம்

முனைவர் பெ.முத்துராஜ்,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
வேப்பந்தட்டை
.

******************************************************************************

033.

இரத்த தானம் செய்வோம்...

வீரத்திற்கு முகப்பு சொல்லும் மனிதம்,

விழாமல் தூக்கி காக்கும் புனிதம்,

அன்பை வெல்லும் காலத்து சாயல்,

அன்பால் கொள்ளும் வீரத்து கோணம்,

கொடைக் காலம்
குறுதிக்கும் வகைக்கும்,

வகையில் எத்தனை நிறைய போசாக்கு,

தலைக்கும் அத்துனையும் அவசிய குறுதிதான்,

குறுதி என்று வங்கிக் கிளைகள்,

ஊர் ஊராய் வழக்க வேலையில்,

வைத்தியம் கேற்கும் அவசிய மூலம்,

வரையரை கொண்ட உயிரியல் வளம்,

உலக யுத்தங்கள் கேட்ட மூலம்,

மனித உறுதிக்கு தேவை காலம்,

கொடையில் மனிதம் வெல்லும் கலை,

குறையில்லா மனம் கண்ட நிலை,

குறுதிக் கொடை கோடிக்கும் தோல்வி,

குறையில்லா அவசியம் குணப்படுத்தும் அதிசயம்.

முஹம்மத் ஷரீப் முஹம்மத் சஜ்ஜாத்(கபூரி),

இளம்கலை பட்டதாரி மாணவன்,
இலங்கை.

**********************************************************************

034.

 இரத்த தானம் செய்வோம்..!

 உயிர் வாழ குருதி கொடுக்கும் உறவு என்றும் தேவை!

 உயிர் காக்க குருதி  கொடுத்த உள்ளம் என்றும் தேவை!

 பெற்றோர் காத்த உயிர் இது!
 இன்று குருதி  தந்தோரால் வாழும் உயிரே!

 வலியால் வாடும் உறவுகளுக்கு இரத்த தானம் செய்வோம்!

 அடிப்பட்டு அழுவும் அன்பர்களுக்கு
இரத்த தானம் செய்வோம்!

 நம்மிடம் இருப்பதை கொடுப்போம் இல்லாதவர்க்கு!

 தானமாக கொடுக்கும் குருதிக்கு கைநீட்டி பொருள் எதுவும் வாங்காதே!

 அரசு கொடுக்கும் முத்திரைத்தாள் கூட முகவரி கேட்கும்!

 கொடுப்பதற்கு முகவரி தேவை இல்லை !

அன்போடு கொடுத்து அனைத்து உயிர்களையும் காப்போம்!

 கவிச்செல்வம்
 இரா.  வாசுகி பொன்னரசு
 கள்ளக்குறிச்சி

************************************************************************************

035.

ரத்த தானம்   செய்வோம்....
                  
உயிரைக் காப்பது இறைவன் செயல்

உதிரம் தருபவர் அனைவரும் இறைவன்

உயிரின் மதிப்பை உயர்ந்தவர் உணர்வார்

உதிரம் தந்து உயிரைக் காப்பார்

மனிதம் மறைந்ததென்பது சிலர் பேச்சு

மனிதம் என்றும் அழியாத மூச்சு

உயர்ந்தவர்  தாழ்ந்தவர்
பிறவியில் இல்லை

உதிரம் தருபவர் கடவுளின் பிள்ளை

உள்ளம் தெளிந்தவர் உண்மையை அறிவார்

உதிரம் தருவது நன்மையென புரிவார்

நன்மை செய்வோருக்கு காலம் துணை வரும்

உதிரத்தின் மகத்துவம் உலகம் சொல்லும்

உள்ளத்தில்  நல்லவரால்
உலகம் வெல்லும் லக்னோ

உதிரம் தருவதால்  தீமைகள் இல்லை

கூடுதல் பலத்தை உடலும் பெறலாம்

தன்னுயிர் போற்றுதல் தலைவர்க்கு அழகல்ல!

பிறர் உயிர் பேணுவதே தலைவர் பண்பாகும்

உதிரம் தருபவர் என்றுமே தலைவரே!

G. சரவண பிரியா.
TBAK  கல்லூரி,
கீழக்கரை.

******************************************************************

036.

இரத்த தானம் செய்வோம்

தானத்தில் சிறந்தது நிதானம்// அன்னதானம் கல்வி தானம்//

அணைத்தையும் விடச் சிறந்தது
இரத்த தானமே//

பூமி வாழ தண்ணீர் வேண்டும்
உயிர் வாழ இரத்தம் வேண்டும்//

விபத்தில் சிக்கியதால்
துடி துடிக்கும் உயிர்
ஓசை உயிர் பெறவும்//

குறை மாத குழந்தை குணம் பெறவும் குருதி வேண்டுமே//

அறுவை சிகிச்சைக்கும்// அவசரமாய்  
அளிக்க வேண்டும் இரத்தத்தையே//

நொடிக்கு ஒருவர் துடிக்கின்றனர் நோய்களால்//

நீ யோசிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உயிரிழப்பு ஏற்படுமே//

நாம் வழங்குகின்ற ஒவ்வொரு துளி இரத்தமும்//

அடுத்தவரின் ஆயுளை அதிகரிகின்றதே//

எவ்வளவு கொடுத்தாலும்// எள்ளளவும் குறையாதே//

இறைக்கும் கிணறு  தானே ஊருமே//

இரக்கத்துடன் நீயும் தந்தால்//
இதயத்தின் இரத்தமும் ஊருமே//

உரியவனுக்கு உரிய நேரத்தில்//
உன் உதிரம் கொடுத்து//
உயிர் காத்திடு//

தானம் தந்த ரத்தம் மீண்டும் ஊரிடுமே//

புதிய ரத்தம் ஊற்றெடுத்து //
உன் உடல் புத்துணர்ச்சி பெற்றிடுமே//

உறவுகள் மட்டும் நம் உறவுகள் அல்லவே//

உதிரம் கொடுப்பதால் அனைவரும் நம் இரத்த உறவுகளே//

சாதி மதம் கடந்து மனிதனை இணைப்பது ரத்தமே//

தன்னலமாக வாழ்வது வாழ்க்கை அல்லவே//
பொதுநலமாக வாழும் வாழ்க்கை சிறந்ததே//

மரணத்தை
நெருங்கும் மனிதனை
காக்கும் கடவுள் நீயே //

ஒருவருக்கு நீ கொடுக்கும் இரத்தம்//
அவரின்  தலைமுறையை வாழ வைக்குமே//

உயிர்களை பிழைக்க வைக்கும்// உன்னதமான செயலையே//
உயிருள்ளவரை செய்ய வேண்டுமே//

உதிரம் தந்து உதவும் உயர்ந்த உள்ளமே

உன் உயிரிலிருந்து
பிரியும் ரத்தம்
பிரிய போகும் உயிரை காத்து விடுமே//

பிறருக்கு ரத்தம் கொடுத்து//
பிறர் வணங்கிடும் தெய்வமாகிடுங்கள்//

தாய் தந்த இரத்தத்தையே// நாமும் தானம்
செய்தே//
தாயாய் மாறிடுவோமே//

பெ.சித்ரா இளஞ்செழியன்
பள்ளி முதல்வர் ஓஎப்டி,திருச்சி 16.

***************************************************************************************************

037.

ரத்த தானம்
                  செய்வோம்
அன்பால் உலகை அழகாய் வெல்வோம்

ஆற்றல் மிக்க ஆயுதம்
வேண்டாம்

இயன்ற உதவியால்
மனிதநேயம் காப்போம்

ஈடில்லா வளங்களை
எப்போதும் காண்போம்

உதிரம் தருபவர்
உலகில் சிறந்தவர்

ஊக்கம் இன்றி
வாழ்தல் தவறு

எப்போதும் மனிதம்
வாழ்தல் வேண்டும்

ஏக்கத்தை அழித்து
ஆக்கத்தை வளர்ப்போம்

ஐயம் வேண்டாம்
குருதி தருவோம்

ஒருவர் தானம்
ஒருவர் வாழ்வு

ஓட்டம் நீக்கி
வாட்டம் தகர்ப்போம்

ஔடதம் என்பதில்
குருதியும் சேரும்

அஃதே என்றும்
எப்போதும் நன்று.

உதிரம் தந்து
உலகை வெல்வோம்.

உதிரம் தருபவர்
உலகில் சிறந்தவர்

உடலுக்கு நன்மை
உதிரம் தருவது

சாதியோ,மதமோ
குருதியில் இல்லை

அங்கே இருப்பது
சிற்சில பிரிவுகளே!

குருதி கொடுத்தால்
இணையும் உறவுகளே!


சு. ஜெகநாத சேதுபதி,
முதுகலை தமிழாசிரியர்,
முஹைதீனியா ப மே நி பள்ளி, கீழக்கரை.
இராமநாதபுரம்.

************************************************************************

038.

இரத்த தானம் செய்வோம்


 உணவுக்கு அன்னதானம்
 உயிர்காக்க
இரத்ததானம்!
குருதியில் ஜாதியில்லை தானம்தரத்
தடையுமில்லை!
 ஏழைப் பணக்காரன் என்ற பேதமில்லை!
கோவிலா,மசூதியா கொடுப்பவர்க்கு நிகரெதுவுமில்லை!


முத்திங்கள் இடைவெளியில்
இரத்தமும் ஊறிடுமே!
மூவாறு வயதென்றால் முன்வந்து தரலாமே!
குடித்தவரும் கொடை தரலாம் ஒருபொழுது கழிந்தாலே!
உதிரம் சிந்தியவளும் கொடுப்பவரும் தாய்தானே!


 பதினான்கு ஆறு பார்புகழும் தினமன்றோ!
கலியுகக் கர்ணனை கவுரவப்படுத்தும் நாளன்றோ!
 போகும் உசிரை மீட்டுத் தந்து
மீதி உசிரை
வாழவைப்பரும்  வள்ளலன்றோ!

அணு விஞ்ஞானியாலும் புதிதாய் கண்டுபிடிக்க முடியாதய்யா!
அறிவியலாலும் உணர முடியா அதிசயமய்யா!
குருதிக்கு மாற்று மருந்து கிடையாதய்யா!
கொடை தருபவர் குடும்பமும் உயருமய்யா!

அஞ்சுப்பத்து நிமிடம் ஒதுக்கித் தாருமையா!
அவர் தலைமுறையே
உனது புகழ் பாடுமையா!
காலம் கடந்தால் போனதெதுவும் வராதய்யா!
இளம் தலைமுறையே இனியுமென்ன யோசனைய்யா!


 செங்குருதி நீதந்து உறவுகளை வளருமய்யா!
 தாய்நாடு தனைத் தலைநிமிரச் செய்யுமய்யா!
 கால நேரம் பாராமல்  வாருமய்யா!
 பாலகனோ வயோதிகனோ பாசத்துடன் கரம் தாருமையா!


 இரத்தம் கொடுக்க கொடுக்கத்தான் ஊருமையா!
இதயத் துடிப்பும் சீராய் இயங்குமய்யா!
இரும்புச்சத்தும் இதனால் சமன் ஆகுமய்யா!
எதிர்கால சந்ததியில் உனது பெயர் நிலைக்குமய்யா!

படித்தவர்கள் புரிந்தவர்கள் பாமரருக்கு கூறும் ய்யா !
 பட்டிதொட்டி எல்லாம் விழிப்புணர்வு வேண்டுமய்யா!
 வழியிலே போகும் உயிர்வாழ வழி செய்யுமய்யா!
 மறுபிறவி தரும் நீயும்  மனித தெய்வமய்யா!

 இரா.பானுமதி பொள்ளாச்சி

**************************************************************************************************

040.

ரத்ததானம்  செய்வோம்
      ==========================
பிறப்பால் உறவுகளாய்
பிறந்திட்டோம் பூமியிலே

உறவாய்  வாழ்ந்தால்
உன்னதம்  உண்டா

வாழும் வாழ்க்கைக்கு
வம்சம் தழைத்திட

வாழும்போதே  மனிதனாய்
வாழ்ந்தே புனிதமடைவோம்

உலகைக் காக்குமே            குருதிக் கொடை       
      
மனிதன்   செய்யும்
மாண்பின்  மகிமை

தானம்  செய்வதே
தலை  சிறந்ததாகும்

உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே

தர்மம்  போற்றிட
தானம்  செய்வீரே

உயிர்கள் துடித்திடும்நேரம்
உதிரம்  கொடுத்திட

உயர்வாய் எண்ணுவார்
உலகிலே  சிறந்ததிடுவார்

குருதி  கொடுத்தால்
குருதி  பெருகுமே

இரத்தமில்லா  உயிரும்
புத்துயிரும் பெற்றிடுமே

குறையாத  குருதி
கொடுத்திட குறையின்றி

சுரக்குமே சுரபியாய்
சுகமாக்  பெருகிடும்

உயிர்காக்கும் தானமே
உயர்வான  தானமே

ஆன்மிக லட்சுமி  (சி. மீனாட்சி ) சென்னை

****************************************************************************

039.

இரத்த தானம்

தானத்தில் சிறந்தது அன்னதானம்  என்று//

ஆன்றோர்கள் அருமையாக சொன்னார்கள் அன்று //

தானத்தில் சிறந்தது ரத்த தானம் என்று //

அறிவியலாளர்கள் பெருமையாக சொல்கிறார்கள் இன்று//

மதங்களில் எத்தனையோ மதங்கள் உண்டு //

சாதிகளில் எத்தனையோ பிரிவுகள் உண்டு  //

 அனைத்தையும் போதிப்பது
அன்புதான் என்று//

அறிவார்ந்த சான்றோர்கள் சொல்வது உண்டு //

ஒருவருக்கொருவர் நாம்  யாராக இருந்தாலும்//

 நாம் எல்லோரும் எம்மதமாக இருந்தாலும் //

 நாம் எல்லோரும் எச்சாதியாக  இருந்தாலும் //

நமது குருதியின் நிறம் ஒன்றுதானே //

அது செம்மை குறித்திடும்
சிகப்புதானே //

நமது உடலிலே உருவாகும்  உதிரம் //

நமது உடலிலே அழிந்து போகுமே //

உடலிலே அழிந்து போகும் உதிரத்தை //

உயிர் காக்க தருவது நம் கடனே//

உதிர தானம் உடலை சுறுசுறுப்பாகும் //

உடல் புதுபொலிவுடன் என்றும் இருக்கும் //

உடலில் நோய்
எதிர்ப்புசக்தி  இருக்கும் //

உடலில் நோய்தொற்று பரவாமல் தடுக்கும் //

ரத்தத்தில் பல
வகைகள் உண்டு //

அதனை  தெளிவாக அறிந்து கொண்டு //

 இரத்த தானம் செய்வது நன்று //

அன்று கர்ணன் தந்த செங்குருதி //

இன்றும் காவியம் எல்லாம் பேசுதே //

நம் உடலிலேயே அழியும் உதிரத்தை //

நம் உயிர் காக்க கொடுப்பமே //

உயர்ந்த வாழ்வை நாம் வாழ்வோமே //

 உதரத்தை  நாம் தானமாக கொடுப்பது //

இறைவனுக்கு செய்யும் சேவையாக கொள்வோமே //

மனித வாழ்வு மாண்புடையது அன்றோ//

அர்ப்பணிப்பும் அதில் ஒன்று அன்றோ //

நாம் உதிரத்தை தானமாக கொடுப்பதினால்//

உலகம் நம்மை என்றும் போற்றிடுமே//

தானத்து சிறந்தது
ரத்ததானம் என்று //

நாம் பெருமையாக சொல்லிடுவோம் இன்று//

மானிட வாழ்வு சேவை செய்யென்று//

மனிதம் சொல்கிறதே மனதில் கொள்வோமே //

உயிர் காக்க உதிரம் தந்திடுவோமே//

இயற்கை அன்னை வளங்களை  வழங்குகிறது //

இதயம் உள்ள நாமும் இரத்தத்தை//

தானமாக கொடுத்து சிறப்பு காண்போமே //

மனித மனமே   மாறுது தினமே//

மாற்றம் வந்திட்டால் மானிடம் சிறந்திடுமே //

குருதி தந்து குலம் காப்போம் //

உதிரம் தந்து உயிர் காப்போம் //

உடலிலே
அழிந்துபோகும் உதிரத்தை கொடுப்போம் //

மனிதநேய மிக்க மனிதனாக வாழ்வோம் //

உதிரம் கொடுத்து நாம் உயர்ந்திடுவோம் //

உலகத்தில் நல்ல மனிதனாக வாழ்ந்திடுவோம் //

 கவிஞர்
 அ. கனகவள்ளி காரைக்கால்

************************************************************************************************************

040.

இரத்த தானம்.
மனிதநேய மனிதர்களை அடையாளம் காட்டியது//
மருத்துவ சேவை விளக்கி காட்டியது//
அயராத உழைப்பால் செவிலியர் வளர்ச்சி//
அபார வளர்ச்சியில் குருதி கொடை//
உயிர்க்காக்கும் உயரியப்பங்கு இரத்ததானத்தினாலே பெருவளர்ச்சி//
இரைக்க இரைக்க ஊற்று சுரக்கும்//
இரத்தம் கொடுக்க கொடுக்க ஊற்றெடுக்கும்//
உயிர் கொடுக்கும் கடவுள் நாமே//
உயரிய குணம் இருத்தல் வேண்டுமே//
முதலுதவி செய்து உயிர்க்காக்க முன்வருவோம்//
அறியவகை இரமுடையோர் அறியாமையகற்றி முன்வாருங்கள்//
தானத்தில் சிறந்தது இரத்த தானம்//
உதவி உயிர் கொடுப்போம் இத்தருணம்//

நெய்வேலி
பா.வெண்ணிலா பாலாஜி

**************************************************************************************************

041.

குருதி கொடுப்போம்....


குவலயம் காக்க குருதி கொடுப்போம்.
இறைக்க இறைக்க வற்றாத ஊற்று.
கொடுத்தால் குறையாத அட்சயப் பாத்திரம்.
உயிர் காக்கும் உன்னத கொடை.
பச்சிளம் பாலகன் முதல்  பாட்டன் வரை பந்தம் சேர்க்கும்.
நோவு கண்டு நொறுங்கி  தேடும் அருமருந்து.
நினையாமல் நெருங்கி முடக்கும் விபத்து.
எந்த எலும்பு நொறுங்கியதோ
எத்தனை நாளம் வெடித்ததோ?
அள்ளிப் போட்டு குவியலாய் குவித்து
ஆறாய்ப் பாய்ந்த குருதியை அள்ள முடியுமோ
உற்றவரும் உரிமையும்  தேடுவது குருதியே.
குண்டலம் தந்து கர்ணன் வரலாறானான்.
உயிர் காக்கும் இரத்தம் கொடுத்து சந்ததி காப்போம்.
உயிர் காப்பான் தோழன்.
உயிர் கொடுப்பாள் அன்னை.
உயிர் பிழைக்க குருதி கொடுப்பவர்
அனைத்துமானவர்.


-ல. மதுமதி லட்சுமணன் உசிலம்பட்டி மதுரை மாவட்டம்.

*******************************************************************************************

042.

"ரத்ததானம் செய்வோம்"
&&&&&&&&&&&

உயர்ந்தோர் ஆயினும்! தாழ்ந்தோர் ஆயினும்!//


 குருதிக்கு நிறமொன்றே! சாதிமதங்கள் இல்லையே!//

உயர்வு
தாழ்வுமில்லை
உதிரத்தின்
தன்மைக்கே!//

உண்ணும் உணவே! உதிரமாய்
உருவாக்கிட!//

உடலின்
உயிர்ச்சலனம்
குருதியின்
 அளவீடே!//

உண்ட
உணவே!
செரிமான
உறுப்புகளால்!//
சிதைவுற்று
குருதியாய்
வடிவம்
பெற்று!//

இதயத்தை
இயங்கவைத்து
உச்சிமுதல்
பாதமவரை!//

உடலின் கழிவுகளைச்
சுமந்துவரும்
வீரணிவன்!//

ரத்தச் சிவப்பணுக்கள்
வெள்ளை யணு
குறுந்தட்டு!!//

என்றபல ஆக்கக்கூறுகளை
அகத்தினில்
கொண்டதுவே!/

வாயுவின் பரிமாற்றம்
உடலுக்கு
எடுத்துச்சென்று!//

மனிதன்
வாழ்வைச்
சீர்படுத்தும்
குருதியிது!/

ரத்தவகை
பலவுண்டு
ஒருவருக்கு
ஒன்றுமட்டும்!//


நோயின்
நிலைப்
பாட்டைக்
கண்டறிய!//


ரத்தவகை
சோதனையே!
மரபுகளின்
தீர்மானம்!//

ஆரோக்கிய
மனிதனுக்கு
குருதியே
நிலைப்பாடு!//

குருதியின்
ஆயுட்காலம்
நான்குதிங்கள்
ஆனாலும்!//

இதனளவு
குறைந்திட்டால்
சோகையும்
உருவாகும்!//

கொடுக்கக் குறையாத
குருதியும் சிறப்பாகும்!//

பச்சிளம் குழந்தைமுதல்
பாமரனும்
உயிர்வாழ!//

குருதியே
முதன்மையாகும்
அறுவைச்
சிகிச்சைக்கும்!//

குழந்தைப்
பேற்றுக்கும்
விபத்தில்
சிக்குண்டு
!//

உயிருக்கு போராடும்
மனிதருக்கும்
தினந்தேவை
!//


எத்தனையோ
கொடைகள்
உண்டு
இவ்வுலகில்!

குருதிக்
கொடையே
இங்கு
சிறப்பாகும்!//

கோடியில்
புரண்டாலும்
குபேரனாய்
வாழ்ந்தாலும்!//

குருதியும்
குறைவானால்
வாழ்வும்
தொல்லையே!//

நாம்கொடுக்கும்
குருதியால் உயிர்பிழைப்பார்
இன்னொருவர்!//

உயிர்காக்கும்
ரத்ததானம்
செய்திடுவோம்!
இனிமேலே!//

இன்னுயிரைக் காத்திடுவோம்!
இன்பங்கள்
கண்டிடுவோம்!//

நேயமிக்க
மனிதர்களாய்
வாழ்ந்திடுவோம்!
இவ்வுலகில்!//

மருத்துவர் ஜேகுணசுந்தரி ,ஒத்தக்கால் மண்டபம்.

**********************************************************************************************

043.

இரத்த தானம் செய்வோம்


அன்னையின் உதிரம் தாய்ப்பால் தானம்

அடுத்தவரின் குருதியே இரத்த தானம்

ஐம்பூதங்களும் இயற்கை மனிதனுக்குக் கொடுத்த

அற்புத தானங்கள் என்றால் - உடலின்

ஐம்புலன்களையும் காக்க அயலொருவர் நமக்கு

அளிக்கும் இரத்த தானம் என்பது......?


உலகில் ஜாதி, மதம் போன்ற

எத்தனை பிரிவினைகள் உள்ளன இருப்பினும்

இந்தியர் என்பதில் அனைவரும் ஒன்றிணைகிறோம் !

உளமாற அள்ளிக் கொடுக்கும் இரத்தமும்

பல்வேறு பிரிவினைகளைத் தம்முள் கொண்டுள்ளது

இருப்பினும் என்ன ஒரு விந்தை

நிறம் மட்டும் ஏனோ மாறவில்லை !

பொருட்செல்வமோ கொடுக்கக் கொடுக்கக் குறையும்

கல்விச் செல்வமோ கொடுக்கப் பெருகும்

இரத்தம் நம்முள் இருக்கும் சொத்து

சித்தம் அதை கொடுப்பதில் - நித்தம்

தவிக்கும் உயிருக்கு மறுபிறப்பு கிட்டும்

கல்வியைக் கற்றால் கொடுக்க முடியும்

செல்வத்தைச் சேர்த்தால் கொடுக்க முடியும்

இரத்தத்தை மனமுடைய அனைவரும் கொடுக்கலாம்


ஆதிகாலத்தில் மிருகத்தில் குருதி பார்த்தோம்

அரசன் காலத்தில் போர்க்களத்தில் பார்த்தோம்

இன்றைய நவீன காலத்தில் வாழ்ந்தும்  

குருதி பார்க்கிறோம் தினமும் சாலையில்

காவல்துறையோ  அனுதினமும் அறிவிக்கிறது அன்றோ

தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று, இருப்பினும்

உதறிச் செல்கிறோம் ஊர்சுற்ற உல்லாசமாக

உலகம் சுற்றும் வாலிபர்களே கேளுங்கள்

உதவி செய்யும் குணமிருந்தால் உரக்கச்சொல்லுங்கள்

உயிர் பிழைக்க உதிரம் தேவை

உற்றார் உறவினரிடம் இல்லாத உதிரம்

உலகில் உயர்ந்தவரிடம் இருக்குமேயானால் உன்னால்

உற்ற உதவியாய் உதிரத்தை நீ கொடுக்க

உயர்ந்தவன் ஆவாயடா - உலகில் மட்டுமல்ல

உயிர் பெற்றவரின் உள்ளத்திலும்....!    
                                              

 

 ஜோ.உதயலெட்சுமி,

 புன்னைச் சாத்தான் குறிச்சி.

*********************************************************************************************

044.

"இரத்த தானம் செய்வோம்"

தானத்தில் என்றும் சிறந்தது "நிதானம்"//.
மனநிறைவுக்கு அமைதி தருவது "சன்னிதானம்//.
பசுக்களை தானம் அளிப்பது "கோதானம்"//
உயிர்களின் பசிக்கு உணவளிப்பது "அன்னதானம்"//.
"வள்ளல்"களால் வளம் பெற்ற நாடு "நம் பாரத நாடு"//.
முகம் தெரியாத பலருக்குக் "குருதி தானம்" செய்து//,
நாமும்"குருதிக் கொடையாளர்"களாய்//,
அறியாத உள்ளங்களில்
"வள்ளல்"களாய் இடம் பிடிப்போம்//.
உறுப்புகளைத் தானம் செய்வது "உறுப்புதானம்//,
சாதி,மதபேதமின்றி எந்த வகை//,
யாருக்குப் பொருந்தும் என நினைக்க//,
வாய்ப்பில்லாமல் ஆங்காங்கே "இரத்த வங்கி"//,
நாம் "இரத்த தானம்" செய்வதாலே பல்லுயிர்கள்//,
தனது மீதி வாழ்நாளைக் கழித்திடலாம்//,
நமது இரத்த உற்பத்தியும் பெருகுமே//.
தவமிருந்தாலும் கிடைக்காத பலகோடி புண்ணியங்கள்//,
நாம் அளிக்கும் "இரத்த தானமே"//.
குருதியின் நிறமோ "செந்நிறம்" அதை//
அளிப்பவர் உள்ளமோ "கருணை உள்ளம்"/.
மானுடப் பிறப்பின் அடையாளமே"தானமும்,தர்மமும்"//.
பிரதிபலன் பாராது நம்மைக் காக்கும்//,
இராணுவ வீரர்கள் நாட்டின் உயிர்காத்து நிற்பது நாம் அளிக்கும் "இரத்ததானத்தை" விட
உயர்ந்தது//.
நாட்டின் நல்வளம் காக்க அன்று//
போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள்//,
உயிர்த்தியாகம் செய்ததால் இன்று "சுதந்திரம்"//,
என்ற மூச்சுக்காற்றை நித்தம் சுவாசிக்கின்றோம்//.
அத்தகைய உயிர்த்தியாகம் செய்த வீரர்கள்//,
வாழ்ந்த மண்ணில் நாம் செய்வோம் "இரத்த தானம்"//.
மானுடப் பிறப்பின் பலனை "நடைமுறைப்படுத்துவோம்"//.


-கவிஞர்.முனைவர்.
ச.மீனாட்சி,ப.ஆசிரியை,13-வது வார்டு,தாரமங்கலம்,
சேலம்.63650
2.

**************************************************************************************

045.

இரத்த தான தினம்.


தலைப்பு - இரத்தம் அளிப்போம்...

" மனித உடலில் ஜீவ நதியாக,

ஓடிக் கொண்டிருக்கும் ஒரு வெள்ளம்...

தன்னில் இரண்டு பிரிவாக பிரிந்து,

அதிலும் நான்கு வகையாய் வகுந்து,

யாவரையும் வாழ வைக்கும் அமுதம்...

பல்லாயிரம் மைலை நாளும் கடந்து,

பாரில் வலம் வரச் செய்கிறது நம்மை...

ஒற்றைத் துளியிலும் ஓராயிரம் தகவல்களை

ஒன்றாய்த் திரட்டி வைத்திருக்கும் பெட்டகம்...

உலகில் பணத்திற்கு அடுத்து தனக்காக,

வங்கி கொண்ட ஒரு பொருள்...

சற்று சரிவர கவனிக்கா விட்டால்,

சினம் கொண்டு நோய்களைத் தேடி,

அழைத்து வரும் கோவக்காரி இரத்தம்...

மனிதர்களுக்குள்ளே வேற்றுமை என்றாலும் - இறைவன்

ரத்த நிறத்தை வேற்றுமையாக்கவில்லை..

தன்னார்வலர்கள் பலர் உண்டு இக்கொடைக்கு...

அரிதான ஒன்றாய் அவசியமான ஒன்றாய்,

நாளும் நம்மிடையே காட்சி அளிக்கிறது...

தேவையான சுத்த ரத்தம் வேண்டி,

இறைஞ்சி நிற்கும் பல மனிதர்கள்கள்...

இருக்கும் ரத்தத்தை அசுத்தமாக்கும் நாம்...

சிந்தித்துப் பார்ப்போம் ரத்தத்தின் மகிமையை...

தானும் கெட்டு பிறருக்கும் உதவாத

தரமற்ற ஒன்றாய் மாற்றுவதை விட,

ஆரோக்கியம் காத்து ஆலமரமாய் நின்று,

இயன்றளவு தானம் செய்வோம் ரத்தத்தை...

செல்வந்தர் அளிப்பர் அன்னதானம்...

வசதியானவர் தருவர் பொருள் தானம்...

ஆனால், நலமுடன் வாழ்பவரே தர இயலும்

ஒப்பற்ற தானமான இரத்த தானத்தை...

ஆதலால் தானம் செய்வோம் நம் ரத்தத்தை,

உதவிக் காத்திடுவோம் பிற மனிதர்களை..."

சீ. மகாலட்சுமி
விருதுநகர் மாவட்டம்.

*****************************************************************************************************

046.

இரத்த தானம் செய்வோம்

உலகில் எத்தனை வண்ணம் இருப்பினும்
அதிலே சிகப்பு வண்ணம் தான்
வாழும் உயிர்களுக்கு எல்லாம் சிறந்த
உயிர்வாழ் வண்ணம் என்போம் - ஆம்
மனிதாபிமானம் என்னும் உயர் பண்பினுக்கு!
மாண்பினும் மாறாப் புகழ் சேர்க்கும்
இம்மண்ணில் உயிர்கள் உள்ள வரை
எல்லோரும் நலமுடனே வாழலாம் பாரீர்…//

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்
என்பார் மூத்தோர் அதோடு நின்றனரா?
ஆதித் தமிழன் உயிர்தானமும் செய்து
உலகச் சாதனை புரிந்தான் கேட்டீரோ - ஆம்
திருமூலன் தான் செய்த தானத்தை
என்னென்று செல்லி வியப்பதோ மூலவனை…//

விஞ்ஞான உலகில் இயந்திரம் பெருகிவிட்டது
இயந்திர முன்னேற்றமே வாகனங்கள் பெருக்கம்
வாகனங்களில் வேகப் பயணம் எத்தனை
நன்மைகள் செய்தாலும் ஒரு நொடிப்
பொழுதில் வாழ்க்கையைப் புரட்டிப் போடும்!
விபத்து என்னும் விந்தை விளையாட்டு…//
 
இதை இயற்கையின் மாயம் என்பதோ?
அல்லது செயற்கையின் சதித்திட்டம் என்பதோ?
எப்படி இருப்பினும் பட்டது பட்டதுதானே
அன்பு என்னும் ஆறறிவுடைய மாந்தனே - நீ
பெற்ற பெரும் வரமன்றோ இரத்தம்
இரத்த சொந்தம் என்பார்கள் உலகில்
யாவரும் நம் இரத்த சொந்தங்களே!
ஆம் இரத்த தானம் செய்வீர்…//

இம்மண்ணில் இன்னும் அறமும் அன்பும்
சாகாவரம் பெற்று சர்புத்திரம் என்ற
வாரத்தையைப் போற்றி அறம் செய்வீர்
நல்லறம் செய்வீர் நாமும் நலமுடனே வாழ…//

 கவிஞர் முனைவர் அ. ஞானவேல்

 சிறுகளூர், தருமபுரி

*********************************************************************************************

047.

இரத்த தானம் செய்வோம்
 

உயிர் தங்கும்  இரவல் பை  உடலோ/

உடலுக்குள் இரவு பகலாய் செல்வது குருதியோ/

குழந்தைக்கும் வேண்டுமம்மா குருதி/

குணங்கெட்டவர் மனதில் அதை நிருபி/

வயிற்றுக்கு தானமம்மா உணவு/

வாழ்க்கைக்கு தானமம்மா குருதி/

அள்ள அள்ள குறையாத அமுதசுரபி/

ஆண்டவனையே இதில் தினமும் தரிசி/

மறுபிறவி கொடுப்பவர் தான் கடவுளம்மா/

மனிதனுக்கு குருதி தானம் கொடுப்பதால் நீயும் கடவுளம்மா/

மண்ணுக்குள் மனிதராய் வாழ்ந்திடவே/
 
மறந்திடாமல்  மனிதருக்கு குருதி தானம் செய்/

 நிறங்கள் இல்லை பிரிவு  இல்லை  கொடுப்பவருக்கு/

உயிரும் உண்டு  உடலும் உண்டு
குருதி பெறுபவருக்கு/

 தானத்தில் தன்னலமில்லா தானம் இரத்த தானம்/

தாயாகி தன்னலமில்லாமல்  வழங்கும் தானம்/

இரத்ததானம் செய்வோம் முதன்மை சாலைகளிலல்ல/

முகமறியா நபர்களுக்கும் முகாம்களில் தானமாய்/

-சோ.அனிதா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
ஜி.டி.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திண்டுக்கல்

************************************************************************************

048.

இரத்தம் தானம் செய்வோம்::


உடலில் ஓடும்
இரத்த நதியை
பிறருக்காக கொடுக்க
நினைக்கும் மானிடர்கள்
இருக்கும் வரை
மனித குலம்
மண்ணில் வீழ்ழாது...
வளர்ந்து கொண்டு
இருக்கும்.....!!!!!!

உடலை வளர்க்கும்
தானம் அன்னதானம்
என்றால்
உயிரை காக்கும்
தானம் இரத்ததானம்
இரக்கம் உள்ள
இளைஞர்கள் இருக்கும்
வரை ஒப்பாரி
பாடல்களை
ஒலிக்க விடமாட்டார்கள்....!!!
என் சிங்கங்கள்...!!!!


ஒரே ஆற்று நீரை
அருந்தியவர்
அண்ணன் தம்பி
என்றால்.....!!!
தன்னில் ஓடும்
இரத்தத்தை பகிர்ந்தவர்கள்
உயிரை காக்கும்
கடவுளாக மாறி
வழிபாடு செய்ய
 வைக்கிறார்கள்.....!!!!!
 வாழ் நாள் உள்ள வரை.....!!!!!

உதிரம் சிந்தி உழைக்கும்
மக்களுக்கு உடம்பில்
ஓடும் குருதியின்
மதிப்பை அறியாதவர்கள்...!!!
காலில் அடிபட்டாலும்
காலடி மண்ணை
வைத்து பூசும்
மருத்துவத்தை அறிந்தவர்கள்
மற்ற உயிர்களுக்காக
உடலில் ஓடும் குருதியை
கேட்காமல் கொடுக்கும்
தாராள பிரபுக்கள்.....!!!!
தன்மான சிங்கங்கள்.....!!!!!!
என் தமிழர்கள்......!!!!!!


பணக்காரனாக இருந்தால்
கொடுக்கும் மனம்
கிடையாது.....!!!
படித்தவனாக இருந்தால்
பிறரை கெடுக்கும்
மனம் கிடையாது....!!!!
பரந்த மனம் இருந்தால்
பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு
உடலில் ஓடும் குருதியை
உடனே கொடுக்கும்
உள்ளம் மறையாது......!
நண்பா......!!!!
எழுந்து வா.....!!!!

கொடு உன்னால்
முடிந்த உதவி
இரத்தம் தானம்...
விடு தான்!!
என்ற அகங்காரம்
மதி தன்னை போல்
பிறந்த மற்ற
உயிர்களை....!
மறவாதே மறுநாள்
என்ன வேண்டுமானாலும்
நடக்காலம்....!!!!!

குருதி அளிப்போம்.!!!
குருதி அளிப்போம்..!!!
சேர்ந்து வாழலாம்
சொந்தங்களை
உருவாக்கலாம்
இரத்த பந்தங்களாக
உருவெடுக்காலம்
உடலில் உதிரம்
உள்ள வரை.....!!!!!


ஆ.கோகிலா
அரக்கோணம்

******************************************************************************************

049.

இரத்த தானம் செய்வோம்....

சிவப்பு என்பது வண்ணம் அல்ல
 அவை
சரித்திரத்தின் அடையாளம்.

சிந்தப்பட்ட குருதிகளைக் கேள்
 சரித்திரம் பல சொல்லும்.

குருதி சிந்தியதால் கிடைத்த சுதந்திரம்
 இன்று
குருதிக்காய் போராடுகிறது.

 தவிக்கும் வாய்க்கு
தண்ணீர் இல்லை.
 பசிக்கும் வயிற்றிற்கு
 உணவு இல்லை.
 ஏழையிடம்
பஞ்சத்திற்கு பஞ்சம் இல்லை.
 சமுதாயத்தில்
நிம்மதி இல்லை.
நாட்டில்
 சமரசம் இல்லை.
 தானம் செய்ய மனதில்லை.

தெரிந்து கொள் மானிடா
தானத்தில் சிறந்தது
 ரத்த தானம் அன்றி வேறில்லை.
 
உன் உடம்பிலிருந்து வெளியேறும் இரத்தம்
ஒருவனின்
 வாழ்க்கையை தூய்மை செய்கின்றது.
 ரத்த தானம் செய்
 இறப்பில்லா
 புகழே எய்து கொள்.
இறைவனுக்கு சமமாய் அமர்ந்து கொள்.

      இடக்கை பித்தன் - ஈஸ்வரன். க

****************************************************************************************************

050.

கல்லூரியில் இரத்ததான முகாம் என்றாய்...                               

அன்று கல்லூரிக்கு விடுமுறை எடுத்து விடு என்று கண்டித்தேன் ... 

இந்நேரத்தில் யாருடன் செல்லில் பேசி கொண்டிருக்கிறார் என்றேன்..

என் நண்பன் ரத்தம் கேட்கிறான் என்றாய்..              

போனை கட் பண்ணு என்றேன்...    

அன்று ஒரு நாள் உன் பிறந்த நாள் 

இரத்த தானம் செய்யட்டுமா என்றாய்.... 

நான் ஊட்டி ஊட்டி உன்னை வளர்க்க நீ யாரோ

ஒருவனுக்கு ரத்தம் கொடுக்கப் போகிறாயா  என்று தடுத்தேன்..              

பக்கத்து வீட்டு பஞ்சக்கா உன்  இரத்தம் கேட்டு வந்தார் ...       

அவனுக்கு இரண்டு நாளாய் காய்ச்சல் என்று  பொய் சொல்லி அனுப்பினேன்.              

நம் சங்கத்தில் ரத்ததான முகாம் நடத்த போகிறோம் என்றார்கள்

வேண்டாம் நாம் கொடுக்கும் ரத்தங்களை விற்று விடுவார்கள் என்று  தட்டிக் கழித்தேன்...      

திடீரென்று நேற்று நடந்த விபத்தில்  பெரும் காயம் அடைந்தேன் ..

அவசர சிகிச்சை பிரிவு அறையில் நான்  ..

என் மகனோ எனக்கு ரத்தம் கேட்டு திரிகிறான்.. 

கேட்டுப்  போனவர்கள் எல்லாம் என் மகனை  சுயநலவாதியாக பார்த்தார்கள்.... 

நானோ தனி அறையில் என் மகனோ அறைக்கு வெளியே ... 

டாக்டர்களின் பேச்சில் எனது ரத்த வகை அரியது என்று என்னால் அறிய முடிந்தது. 

முழுமையாக தெரியப்படாத அந்த கண்ணாடி ஓட்டையில் என்னை 

என் மகன் ஏமாற்றத்தோடு பார்க்கிறான்..

இரு கண்களையும் ஒரு நிமிடம் மூடினேன். 

அக்கா பால் என்று ஒரு சத்தம் திடுக்கிட்டு விழித்தேன் ... 

ஆம்  எனது விபத்து கனவு போல...  

என் மகனின் அறைக்கு சென்றேன் 

தூங்கிக் கொண்டிருந்த அவன் நெற்றியில் முத்தமிட்டேன். 

திடிக்கீட்டு விழித்தான். இன்று அம்மாவின் பிறந்த நாள்டா மகனே  !!! 

குளித்துவிட்டு  அரசு மருத்துவமனையில்  இரத்ததானம் செய்துவிட்டு வா ...

இன்று ரத்ததான நாளும் தான் என்று அனுப்பினேன் ... 

ஆம் காய்ச்சலும் காதலும் வந்தால் தான் தெரிகிறது வேதனை... 

நமக்கு வந்தால் பார்ப்போம் என்று இல்லாமல்  இரத்ததானம் செய்வோம்...     

 

********************************************************************************************

051.

இரத்த தானம்
 

இரகசியம் காக்க தேவையில்லை இரத்ததானம்//

புன்னியம் சேர்க்க தேவையானதே இரத்தானம்//

கண்ணியம் கற்றுக் கொடுப்பதே இரத்ததானம்//

விடப்படுகிறவொருவர் சுவாசத்தை
இழுத்துயின்னொருவர்
வாழ்கின்றனரன்றோ//

மறுத்துங்கூட வாழலாம்
மறந்து வாழவழியில்லையே//

மனிதனுக்கு மனிதந்தானே
மாமருந்து வாழ்க்கையில்//

முள்ளை முள்ளால்
மட்டுந்தானே அகற்றிடலாம்//

தானத்தில் சிறந்தது தானே
நிதானம்//

தானத்தில் உயர்ந்தது
இரத்த தானமன்றோ//

தாய்ப்பாலுக்கு நிகராவதே
இரத்ததான இறையோகம்//


நான் மறைகளும்
நல்லேடுகளில் மட்டுமென்றால்//

குருதிக்கொடைகள் கூடினால்
தேசம்யாவும்
தியாககோலமன்றோ//

வீசுந்தென்றல்
பேசப்படுமென்றால்
காசில்லாதானம்
கடவுளன்றோ//

ஊதியம் பெறுவதில்லை
உலாவரும்
உயிர்மூச்சு//

ஒலிபெருக்கி காட்டத் தேவையில்லை
குருதிக்கொடையுந்தானே//

விபத்து வலியுண்டாக்கும்
குருதி உயிருண்டாக்கும்//

சிந்தனை
ஞானமுண்டாக்கும் இரத்தம்
வம்சங்காக்கும்//

கனவுகள்
வழிகள் பல காட்டும்//

குருதிக் கொடை
மனவுறுதியை
திரட்டும்//

கருவறை இறைவனின்
தரிசனம் கருணை//

காணற்கிடைக்காத
கரிசனம்
இரத்த தானம்//

கூடி வாழ்தலே
கோடி நன்மை//

குருதிக் கொடையாக
கொடுப்பது
மேன்மை//

மனமிரங்கி வானம் பொழிகிறது மழை//

மனமுவந்து மனிதம்
தருவது குருதிக்கொடை//

கானந்தானே தேனிசை தென்றல் காற்று//

வெகுமானந்தானே
தாராளமாக தானாகதரும்
இரத்ததானம்//

வேப்பிலை காற்று
விலையில்லா மருத்துவம்//

இரத்த தானம்
அளவில்லா
மகத்துவம்//

மறந்துபோன சமத்துவத்தின்
திறவுகோல்
இரத்ததானம்//

உயிர் காப்பது தோழன் என்றால்//

உயிர்ப்பு கொடுப்பது
உயர்ந்த இரத்ததானம்//

கண்ணீர் துடைப்பவன்
தூயவன் என்றால்//

குருதி கொடுப்பவன்
புரவலன் அன்றோ//

புகழ புகழ
வேண்டும் வாழ்க்கை//

இரத்ததானம் செய்ய செய்ய
மனிதப்புனிதனே//

வாழ்க வாழ்க
நீ வளமாக//


ஆளுமைச்சுடர் கவிஞர்
முனைவர்அரங்க சக்திவேல் வணிகவியல் துறை
திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி விருத்தாசலம்.

************************************************************************************

052.

இரத்த தானம்

பத்து மாதம் தாயின் கருவறையும்.......
பத்தாம் மாத இறுதியில் பிரசவறையும்........
தாயின் வயிற்றுக்குள் சிறிய மாற்றமுமாய்......
தாங்க முடியா தாயின் வருத்தத்தையும்.......

நம்மால் எளிதில் மறக்க முடியுமா....
அந்நிலையில் தாயைக் காத்த ஆரோக்கியம்.......
இன்றைய தாய்மார்களின் குறைபாடாக இருக்கிறது.........

அன்று யாரோ கொடுத்த ரத்தம்.....
 இன்று நம் உயிரை காத்துள்ளது......
இன்று ஆயிரம் முறை யோசிக்கிறோம்........
நம் இரத்தத்தை தானம் செய்ய.......

தானத்தில் சிறந்தது அன்னதானம் ......
ஆபத்தில் சிறந்தது  இரத்த தானம்.....
பொன்னையும் பொருளையும் தானம் செய்கிறோம்.......
இனி இரத்த தானமும் செய்வோம்.......

மனநிறைவுடன் பலர் உயிரை
காத்திடுவோம்........
உழைப்பால் உயர்வு பெறுவோம் பிற..........
உயிரைக் காத்தும் புண்ணியம் பெறுவோம்........
பிறரின் உணர்வுகளையும் உயிர்களையும் மதிப்போம்.......

விபத்தில் பறிபோகும் உயிர்களையும் காப்போம்.......
விழிப்போடு இருந்து விபத்தைத் தடுப்போம்........
சாலை விதிகளை பின்ப்பற்றி நடப்போம்.......
நம் காவலர்களுக்கும் ஓய்வு கொடுப்போம்.......

மூன்று மாதத்திற்கு ஒரு முறை......
இரத்த தானம் செய்ய வேண்டும்.......
என்பதை நினைவில் கொள்வோம் இனி.......
மறவாமல் இரத்த தானம் செய்வோம்.......

நம் சந்ததிகளுக்கும் கற்றுக் கொடுப்போம்.......
கற்றறியா நம் பெற்றோர்களுக்கும்........
எடுத்துக் கூறி தானம் செய்வோம்.....
இந்த இரத்த தானத் தினத்தன்று.......


 இளங்கவி வ.ஜீவஸ்ரீ,
 கரூர்.

**********************************************************************************

053.

உயிரைக்காக்கும் உயரியதானம்....
நம் அனைவருக்கும் என்ன பந்தம் ?
நாம் ஆகிடலாம் இரத்த சொந்தம் ....
உறவுகளாய் வாழ்ந்தால் மட்டும்
இரத்த சொந்தம் ஆகிடுமா ?
இரத்தம் தானம் தந்து வாழ்ந்துவந்தால்
நாம் இரத்தசொந்தம் ஆகிடலாம்....
உடல் உறுப்பு தானம் தந்தால்
இறந்தபின்னும் வாழ்ந்திடலாம் என்றும்
வாழும்போதே மனிதனாய் வாழ்ந்தஇன்பம்
இரத்த தானத்தால் தான் சாத்தியமே .....
சாவின் அருகில் சென்று திரும்பியவன்
நம்மை தெய்வமாக கும்பிடுவான் !
ஊர்பெயரும் யாதென அறியாதவன்
உன்னை உளமார வாழ்த்திடுவான்.....
உறைந்து போகும் இரத்தம் கூட
உயிரோட்டம் பெற்றிடுமே !
உரியவருக்கு நீயும் தந்தால்
அவர் உயிர்தந்து காத்திடுமே.....
பதினெண் அகவை தாண்டிவிட்டால்
நாற்பத்து ஐந்து மேல் உடல் எடையிருந்தால்
இரத்தம் தானமாக தந்திடலாம் அந்த
எமனையும் இதனால் வென்றிடலாம் ....
உடல்நிலை உன்னில் உன்னதமாயிருந்தால்
உடனே இரத்தம் தந்திடலாம் ,
மூன்று மாத இடைவெளியில்
முழுமனதாய் இரத்தம் தந்திடலாம் .....
தானம் தந்த இரத்தமது மீண்டும்
ஊரிடுமே இரண்டு நாளில் ,
புதிய ரத்தம் ஊற்றெடுத்து உடல்
புத்துணர்ச்சி நம் வாழ்நாளில் ....
இரத்தத்திற்கு விலை பேசி
அதை வியாபாரம் ஆக்கிடாமல்,
தானமாக நாமும் தந்து
தரணி போற்ற தனித்து நிற்போம் !
பணத்தை தானம் தர மனம் தயங்கினாலும்
இரத்தம் தானம் தர வீண் தயக்கம் வேண்டாம் ...
இரத்த தானத்தில் தனி புகழிடம்
தாய் தமிழகத்துக்கே இன்று முதலிடம் ,
இந்த இடம் நிலைத்திருக்க
உறுதிகொள்வோம் இந்நாளில் .
தாய் தந்த நம் உயிரை - நாமும்
இரத்ததானம் தந்து தாயாவோம் ..............................
 

லாவண்யா.செ
ஈரோடு மாவட்டம், அந்தியூர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அந்தியூர்.

*******************************************************************************************************

054.

இரத்ததானம்

தானத்தில் சிறந்தது
தரணியில் உயர்ந்தது
இனமதம் பாராத
ஈகையின் கொடையிது

உயிருக்குப் போராடும்
உள்ளங்களின் உயிர்காக்கும்
விரும்பிக் கொடுத்து
மனிதம் வளர்ப்போம்

மனிதஉயிர் அரியது
அதைக்காக்கும்  இரத்தம் பெரியது
இதயத்தை இயக்கும்
இரத்தம் அந்தஇதயம்
 இரக்கம் கொண்டால்
எத்தனையோ உயிர்களை வாழவைக்கும்

உடலால் கொடுப்பது
உதவியாய் இருப்பது
ஊற்றாய்ப் பெருகி
பரவியே ஊறிடும்

பணவுதவி இல்லவிடினும்
பலமான தேகத்தின் உதவி
குணமான நிசத்தில் இங்கே
குற்றாலமாய்ப் பாயுமிது

தடையில்லாக் கொடையிது
விடையான சமத்துவக் கொடை
காசுபணத்தை விட
கடவுளாய்ப் நினைப்பது
கருணையோடு இருப்பது
வாழும்வரை
இரக்கத்தில் உயிருக்கு உதவிடுங்கள் மனங்களே

தமிழ் நதி கிருஷ் அபி இலங்கை

**************************************************************************************

055.

இரத்த தானம்

உதிரம் கொடுத்து உயிர் காத்திட,//

அன்னை ஊட்டினாள் எமக்கு தாய்ப்பால்.//

நீயோ கொடுத்த இரத்த உயிர்,//

கேடயம் தாண்டியும் உயிரை வாழ்ந்திடும்.//

கேளாமல் கொடுத்திட்ட உனது உதிரம்,//

உலகம் போற்றிடும் உன்னதச் செயலாகும்.//

உயிர்கள் காத்திடும் கடவுளின் துணையால்,//

கொடுக்க கொடுக்க குறைவின்றி கூடிட,//

நீ பெற்றிடுவாய் மறு பிறப்பு.//

குருதி கொடுத்து உயிர் காத்திடும்,//

உலகு கடவுள் நீயே மானுடா.//

உயிர் பிரியும் தருணம் உணர்த்திடும்,//

நீ வாழவைத்த மனித நேயத்தை.//

தாயின்றி நாம் உலகில் இல்லை,//

மனிதனுக்கு உதவாத உயிரையே இங்கில்லை.//

மானுடம் வாழ கொடுத்திடு உதிரம்.//                 


கவிஞர்-எம்.பி.தபீப்,

சமூகவியலாளர்,

சம்மாந்துறை,
இலங்கை.

***************************************************************************************************************

056.

இரத்ததானம் செய்வோம்

உலகில் மிக தேவையான தானம்..!//
ரத்த தானம் வாழும் காலத்தில்..!//
செய்திடல் வேண்டும் அனைவரும் சில..!//
நேரங்களில் செந்குருதி கிடைக்காமல் அவதி..!//
படும் நேரங்களில் ரத்தம் தானம்..!//
செய்வோர் அவர்களிடத்தில் கடவுள் போல..!//
தெரிவார் ஆபத்து காலத்தில் உதவியது..!//
மறக்காமல் கருணையால் தானே வாழ்கிறோம்..!//
சாதி மதம் இனம் மொழி..!//
அனைத்தும் மறந்து உதவி செய்து..!//
ஒரு உயிரை பார்த்து காப்பாற்றி..!//
உணர்வு இருக்கும் எல்லோரு இடத்திலும் சாலை விபத்துகள்..!//
அதிகம் ஆகிவிட்டன உங்கள் உதவியில்..!//
வாழும் நிலை எல்லோருக்கும் வரலாம்..!//
நீங்கள் செய்த உதவியால் வாழும்..!//
மனிதர்கள் உங்களை ஆண்டவன் போல..!//
பார்த்து கொண்டிருப்பார் ரத்த தானம்..!//
செய்து உங்கள் அடுத்த தலை..!// முறைக்கு புண்ணியம் செய்திடுங்கள் உங்கள்..!//
உடல் மண்ணில் மக்கி போகும்..!//
முன்னே ரத்த தானம் செய்து..!//
உங்கள் குலம் காக்க செய்துடுவோம்..!//
இளையோருக்கு ரத்த தானம் செய்திட..!//
சொல்லி கொடுப்போம் அவர்களிடம் மனித..!//
நேயம் வளர்ப்போம் எப்போதும் ரத்த..!//
தானம் செய்து புண்ணியத்தை அடுத்த..!//
தலைமுறைக்கு விட்டு செல்வோம் அனைவரும்..!//
பெயர் அறியா முகம் அறியா..!//
யாரோ ஒருவர்க்கு உதவி செய்து..!//
அவர்கள் வாழும் வரை நாமும்..!//
வாழமே  மகிழ்ச்சி உடன் எல்லோரும்..!//
அழிந்து போகும் உடலும் நிரந்தரமில்லை..!//

கவிஞர் . ஜெ . உ . தரணி ஜெகதீசன்
திருப்பூர் மாவட்டம்
கொடுவாய்..

***********************************************************************************

057.

இரத்த தானம்.           

உலகில் சிறந்த கொடை இரத்தம்.      

உடலில் ஊக்கம் தருவது இரத்தம்.      

சாதி மதம் அற்ற தானம் இரத்தம்.         

இதயத்திற்கு நலம் பயக்கும் இரத்தம்.                     

மக்களை காப்பது சிறந்த நீர் இரத்தம்.                      

சிவப்பு நிற காப்பான் இரத்தம்.    

உணவுக்கு ஆதாரமாய் அமைவது இரத்தம்

உடலின் ஓட்டத்திற்கு அடிப்படை இரத்தம்

மழலையின் ஆரோக்கியத்திற்கு அவசியம் இரத்தம்.

சிவப்பு இல்லையேல் பிறப்பு இல்லை.     

அனைவருக்கும் உடலில் அவசியம் குருதி.                         

ஆமைக்கும் அமைவது அடிப்படை குருதி.   

இமையில் பாயாத ஓட்டம் குருதி.                         

ஈட்டி எறிந்து வீரம் காட்டுவதும் குருதி.                        

உடலுக்கு புத்துணர்வு தருவது குருதி.          

ஊக்கம் தருவது சிவப்பு நிற குருதி.

எட்டா வானில் சிவப்பு நிற குருதி.

ஏணி போல் உயர்ந்த நிலையில் இருப்பது குருதி.        

ஐ யத்தை போக்குவது குருதி.

ஒன்று முதல் எல்லை இல்லாதது குருதி.                         

ஓமம் போல் உறுதியானது குருதி.                        

ஒளவ்வை  சொன்ன மருந்து குருதி.                              

கடவுள் முதல் மனிதன் வரை தேவை குருதி.         

காடுகளுக்கு நீர் போல் உடலுக்கு குருதி.                       

கிளி போல் மூக்கு நிற குருதி.

கீரளின் மூலம் வெளிப்படுவது குருதி.                          

குழந்தை முதல் பெரியவர்கள் வரை தேவை குருதி.                        

கூவும் குயிலுக்கு அடிப்படை குருதி.

கெண்டை மீனுக்கும் தேவை குருதி.                       

கேட்டாலும் தருவது குருதி.      

கைக்கு கை கொடுப்பது குருதி.

தானத்தில் சிறந்த தானம் குருதி தானம்.          

சே.ஜெய பாக்கிய லட்சுமி, காஞ்சிபுரம்.

*****************************************************************************************

058.

இரத்த தானம்
————————
அகிலம் போற்றிட
ஆனந்தமாய் வாழ்ந்திட
இனிமை பொங்கிட
ஈன்றிடுவோம் நம் குருதியினை// நாம் செய்யும் குருதி தானத்தினால்
உயிர் காக்கும் உத்தமராய் வாழ்ந்திடலாம் இப்புவியினிலே//
ஊர் பெயர் அறியாத நபருக்கு நாம் செய்யும் குருதிதானம் வாழ வழி செய்திடுமே  அகிலத்தில் பல உயிர்களை//
நாம் செய்யும்  இரத்ததானம் பல சந்ததியினரை தழைக்கச் செய்யும் இவ்வுலகில்//
செய்திடுவோம்….
இரத்த தானம்..
நம்மால் இயன்ற உயிர்களுக்கு வாழ்வளிப்போம் மன நிறைவோடு…..//
என்றும் அன்புடன்
கி. சாந்திமங்களம்
ஈரோடு மாவட்டம்

*************************************************************************************************

059.

இரத்த தானம் செய்வோம்

உயிர்களைக் காக்கும்  இரத்த தானத்தை

ஆண்களே! மூன்று மாதத்திற்கு ஒருமுறையும்

பெண்களே! நான்கு மாதங்களுக்கு ஒருமுறையும்

 செய்யுங்கள்; வாழ்வு அளியுங்கள் எப்பொழுதுமே

450மி.லி. இரத்த தானம் செய்யலாம்

பதினெட்டு வயது  அடைந்தோர் முதல்

அறுபது வயது அடைந்தோர் வரை

இரத்த தானம் செய்யலாம்; வாழ்வளிக்கலாம்

மனிதநேயத்தை வளர்த்திட நல்லதொரு தருணம்

அதுவே, இரத்த தானம். இன்றே

உறுதியேற்போம்; இரத்த தானம் செய்வோம்

விலை மதிப்பில்லா இரத்தம் கொடுத்து

இன்னுயிரைக் காத்திடும் - இன்றே

உறுதியேற்போம்; இரத்த தானம் செய்திடுவோம்

சிபி மன்னன் புறாவிற்காகத் தன்

தசையைக் கொடுத்தான். எனவே, நாமும்

உயிரைக் காக்க உதிரத்தினைக் கொடுக்க

தயங்காமல் முன் வருவோம். உயிருக்கு

வாழ்வளிக்கும் கடமையைச் செவ்வனே செய்குவோம்

இரத்தம் கொடுத்து இரக்கப் பண்பை

வளர்த்திடுவோம்; மனித உருவில் கடவுளாகுவோம்.

கொண்டு செல்வதற்கு ஒன்றும் இல்லை

இந்தப் பூவுலகில் உயிரைக் காக்க

கொடுத்துச் செல்வோம் இரத்தத்தை வாழ்நாளிலே

உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்

என்ற வாசகமே நம் சுவாசமாகட்டும்

இன்னுயிரைத் தன்னுயிர் போல் போற்றுவோம்

என்ற வாசகமே நம் நேசமாகட்டும்

உதிரத்தினால் ஏற்படும் உயிரிழப்பினைத் தடுத்திடுவோம்

அன்பின் விதையினை அகிலமெங்கும் விதைத்திடுவோம்

மனித மாண்பினை வளர்த்து எடுப்போம்

இன்றே செய்ய  வாரீர் இக்கணமே வாரீர்!


க.ஹெலன்,
காயல்பட்டணம்.

**********************************************************************************************

060.

ரத்த தானம் செய்வோம்!


மனிதனுக்கு மனிதன் செய்யும் தானம்//


உயிர் காக்க உதவும் தானம்//


தன்னிகரில்லா தரணி போற்றும் தானம்//

துடிக்கும் உயிரைக் காக்கும் தானம்//


துன்பப்படும் உயிருக்கு ஆறுதலான தானம்//


தாயின் உதிரத்தில் கலந்து பிறந்தோம்//


தனியாக நோய் வலியில் துடித்தோம்//

தாய்போல் உதவும் ரத்தக் கொடையாளர்கள்//

தாயைப் போல காக்கும் அன்புள்ளங்கள்//


உடலில் பலவீனம் நோயாளிக்கு சுகவீனம்//


குருதியால் குணமடையும் தானத்தால் தெளிவடையும்//

எதிர்பாராத விபத்து உயிருக்கு ஆபத்து//

ஆபத்பாந்தவன்
குருதியை தரும் கதாநாயகன்//

குருதிக் கொடுக்கும் உள்ளம் வேண்டும்//


குருதி மறுசுழற்சியில் சேருவதை உணரவேண்டும்//

அனைவரும் ரத்த தானம் செய்யலாம்//


ஆபத்துக் காலத்தில் குருதியை தரலாம்//

இருப்பதொரு வாழ்வு என்பதை உணர்வோம்//

நன்மையை செய்து மகிழ்வோடு வாழ்வோம்//


நிலையற்ற வாழ்வில் நீடித்த வாழ்வு//


இரத்ததானத்தால் கிடைக்குமே இன்னொருவரின் வாழ்வு//


பணம் பொருள் கொடுக்கப் போவதில்லை//


படித்த கல்வியை தரப் போவதில்லை//


மீண்டும் மீண்டும் சுரக்கும் குருதியை//


 நாம் தானமாக தர போகிறோம்//


உயிருடன் இருக்கும் வாழ்வில் ரத்ததானம்//


இறந்தப் பின்
உடல் தானம்//


தானம் செய்ய கற்றுக் கொள்வோம்//


தானத்தின் பெருமையை பிறருக்கும் உணரவைப்போம்//


ஆரோக்கியமான அனைவருமே தரலாம் ரத்ததானம்//


ஆரோக்கியத்தை மேம்படுத்துமே நம் ரத்ததானம்//


நாமும் தருவோம் உயிர்காக்கும் ரத்ததானம்//


செ. ரத்னா செந்தில்குமார் திருவண்ணாமலை

*************************************************************************************

061.

இரத்த தானம்


சாதி மதங்களையே....
கடந்தது.......!
உன்னையும் என்னையும் இணைப்பது.....!
உடம்பில் ஓடும் உதிரம்....!

வேருக்கு நீர் ஊற்றி
காக்கின்றாய்.....!
உடலுக்கு உதிரம் கொடுத்து
மனிதனை காக்கலாமே.....!

உறவுக்காக உயிரை
கொடுப்பேன் என்கின்றாயே...!
உதிரம் கொடுத்து உயிரை
காக்கலாமே......!

உருவாக்க முடியாத
உன்னத திரவம்........!
உடம்பில் ஓடும் குருதி......!
அதை தானமாக கொடுத்து
தரணி போற்று
மானிடனை கருதி...........!

உயிரைக் காக்கும்
உயிர் தானம்.......!
உயரிய தானம்- அதுவே
இரத்த தானம்........!

உதிரம் நீ கொடுத்திடவே....!
உன்னில் காண்பாய்!
நல் ஆரோக்கியத்தை.....!
உயிர் காப்போம் ! உதிரம் தந்து !

அஸ்வதி பூஜா G,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
கன்னியாகுமரி மாவட்டம்,
நாகர்கோவில்,

**********************************************************************************************************

062.