சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்...3

சுதந்திர தின கவிதை 3

சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்...3
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்...3

சுதந்திரம் கிடைத்தது ஏழைகளின் வாழ்வில் இல்லை//

சுதந்திரம் கிடைத்தது வேற்றுமை இன்னும் குறையவில்லை//

சுதந்திரம் கிடைத்தது கல்வி கற்பதில் இல்லை//

சுதந்திரம் கிடைத்தது பணி செய்யும் இடத்தில் இல்லை//

சுதந்திரம் கிடைத்தது அடிமைத்தனம் இன்னும் ஓயவில்லை//

சுதந்திரம் கிடைத்தது நவீன உலகம் சொல்லிக் கொள்ளலாம்//

சுதந்திரம் கிடைத்தது நாகரீகம் மறந்த உலகம்//

சுதந்திரம் கிடைத்தது
உணர்வுகளை உயிரோடு எடுக்க//

சுதந்திரம் கிடைத்தது
வெற்றுக் காகிதம் பேசுகிற நிமிடங்கள் //

சுதந்திரம் கிடைத்த உலகில் விலைமதிக்க முடியாத உறவுகளை இழக்கிறோம்//


சுதந்திரம் கிடைத்த நாட்டில் சுதந்திரமாக பறக்க முடியாத பறவைகள் நாம்

திருமதி.ஜொ.சி.மோனிஷா சரவணன் கோவை.