கவிஞர்கள் தினம் கவிதை...

கவிஞர்கள் தின கவிதை

கவிஞர்கள் தினம் கவிதை...

ஒரு மனிதன் கவிஞன் ஆவது எப்போது!!

 தாய்ப்பாலை குடித்து வளர்ந்தவனுக்கு! தமிழ் பாலை படித்து வளர்ந்தவனுக்கு !!தனி மனிதன் ஈர்ப்பின் தாக்கத்தில்!! கவிஞன் ஆகிறான்!! தன்னை சுற்றிய இயற்கையை நேசிக்கிறான்!!

தனக்குள் ஏற்பட்ட வெறுமணங்களையும்! வெகுமதிகளையும்! தன்னை சுற்றி யவர்களின் சோகங்களையும்! சொர்க்க தாகங்களையும்! தனக்கே!நிகழ்ந்தால் போல்! மகிழ்ச்சிகளையும்! தனக்குள்ளே வரும் நிகரற்ற உணர்ச்சிகளையும்!!

தனக்கே உரிய பாணியில் புதுக்கவிதை படைத்து !!
தான் சமைத்த உணவை தானே ருசித்து உண்ணும்!! படைப்பாளனாய்!! தன் படைப்புகளை படித்து ரசிக்கிறான்!! பழைய புதிய தோழன் தோழிகளை நேசிக்கிறான்!!

தனக்க பிடித்த பாணியில்! உள்ளோர் படிக்க !!
தன்மை உள்ள உற்றார் ரசிக்க !!
தான் மறைந்தாலும் தான் படைத்த படைப்புகள் தனியே உயர் பெற்று வாழும்! சிறப்பு படைப்புகள்!

பூவில் இருக்கும் தேனை எடுக்கும் வண்டுகளென! பூமிக்குள் ,நாளைய தேவையில் சேர்த்து வைக்கும் எறும்புகளென !
 பூமி பந்தில் தடம் பதித்த மனிதர்களில் சிறந்தவர்களாய்! பூவையர்களின் அழகை ரசித்து போற்றும் கவிஞர்களாய்! பூமியில் மறைந்தாலும் இன்றும் வாழும் கவிஞர்கள் பலர்! பூமியில் தான் மறைந்தாலும் இன்றும் வாழும் கவிஞர்கள் பலர் !!

தன் வரிகளில், எழுத்துக்கள் அழுகிறதா!சிரிக்கிறார்!
 தனியாக படித்து ரசித்த கவிஞனுக்கே! தெரியும் !!

கவிஞர்கள் தின வாழ்த்துக்கள்!
கவிதை மாணிக்கம்