காஞ்சி கோமகன் அண்ணா...! 045

அறிஞர் அண்ணா கவிதை அறிவுச்சுடர் விருது போட்டி

காஞ்சி கோமகன் அண்ணா...!  045

காஞ்சி கோமகன் அண்ணா..!

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில்
கோமானாய்பிறந்திட்ட நல்மணியே
மும்மொழி திறமையும் முற்போக்கு எண்ணமும் மென்மேலும் வளர்த்திட்டமாமணியே
தென்னாட்டு பெர்னாட்ஷா
திறமைமிகுபேச்சாலே
பகுத்தறிவு வாதியாய் பண்பட்டவர்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்குமணம்உண்டு
எதிரியை மதித்திட வேண்டும் என்றார்
நாடகம் மூலமாய்நாட்டினர் விழிப்புற
நயமிகு கருத்தாலே
நெகிழவைத்தார்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண
இனிய நல்பண்பாலே
கவர்ந்திட்டாரே
பதவிகள் வகித்தாலும்
பகட்டேதும்இல்லாமல்பண்புள்ளம்கொண்டுநல்லாட்சிசெய்தார்
அடுக்கு மொழியாலே
அனைவரையும் கவர்ந்திட்ட
அறிஞர் அண்ணா வே
உம் புகழ் வாழ்க..!

- மி.சகாயஜூடி
முதுகலை தமிழாசிரியை
அரசு மேல்நிலைப் பள்ளி
கொடுப்பைக்குழி
கன்னியாகுமரி மாவட்டம்.