எனக்கு யாரும் அடிமை இல்லை..!

அம்பேத்கர் நினைவு நாள்

எனக்கு யாரும் அடிமை இல்லை..!

எனக்கு யாரும் அடிமை இல்லை..!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தையே

அரசியலமைப்பை வடிவமைத்தவரே எங்களுக்கு நாட்டின் மக்களுக்கு அவரவர்


உரிமையை நிலைநாட்டிய வரை அவரவருக்கு அனைத்து

உரிமையும் உண்டு அவர் அவர்கள் தன்மானத்தை விட்டு தராமல்

வாழ வேண்டும் சுய கௌரவத்தை விட்டு தராமல் வாழ வேண்டும் என்று

உணர்த்தியவரே தன்னம்பிக்கை போராளியே சுயமரியாதை சிகரமே


அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று அன்பின் பிறப்பே ஆங்கிலத்தில் சிறப்பே

எனக்கு யாரும் அடிமை இல்லை என்று உணர்த்திய உன்னதமே

உலகில் வாழ்பவர்கள் ஒருவருக்கொருவர் அடிமை இல்லையே

அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி உரிமை உண்டு அந்த உரிமைகளை

அவரவர் பெற்றிட வழிமுறை செய்ய வேண்டும் என்று உணர்த்திட்டவரே பேராளும்

பேராண்மை மிக்க வரை அரசியல் அமைப்பில் தந்தையாக இருந்து

அரசியலமைப்பை அலசி ஆராய்ந்தவரே இந்திய அரசியலமைப்பின் சட்டத்தை நிர்ணயத்தவரே

சட்டம் பயின்ற வரே சட்டத்தின் தந்தையே சட்டத்தின் வழிவகைகளில்

எல்லாம் மக்களுக்கு அனைத்து நலங்களும் கிடைத்திட வகை

செய்துவிட்ட வல்லமை மிக்க வரே எனக்கு யாரும் அடிமை இல்லை என்று

ஒவ்வொருத்தரும் உணர்த்திட வேண்டும் யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்ற

மிகப்பெரிய கருத்தை மாபெரும் சபைகளில் உரத்தியவரே


மாபெரும் சபைதனையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் என்ற கருத்திற்கு சொந்தக்காரரே

அற்புதமான அதிபுத்திசாலித்தனமானவரே சாணக்கியரே

அர்த்த சாஸ்திரத்தை உருவாக்கிய சாணக்கியர் போல்


அரசியலமைப்பு சாஸ்திரத்தை உருவாக்கியவரே எங்களின் அச்சாணியே

எங்களின
ஆணிவேரே யாரும் யாருக்கும் அடிமை இல்லையே


முனைவர்
கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை