அறிஞர் அண்ணா ...! 038

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் கவிதை போட்டி

அறிஞர் அண்ணா ...!  038

பேரறிஞர் அண்ணா ..! 

அகிலம் போற்றும் 
அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணா. 

ஆணைகள் பிறப்பித்து 
மக்கள் நலன் கருதி 
பல திட்டங்களை தீட்டியவர். 

அருந்தமிழ் அன்னையின் குலமகன்//
 
செந்தமிழ் அறிந்த பாவலன் //

காஞ்சி மாநகரின் குடிமகன் //

காஞ்சி பச்சையப்பன் கல்லூரி மாணவன். 

இலக்கண இலக்கியம் உயிர்மூச்சசாய் கொண்டவர். 

எழுத்தாளர் ,பேச்சாளர், ஆசிரியர், நடிகர், தமிழறிஞர் என பன்முகத்திறன் கொண்டவர். 

தந்தை பெரியார் சிந்தனையை 
பின்பற்றி வாழ்ந்தவர். 

கலைஞர் கருணாநிதி அவர்களை அரசியலில் 
வளர்த்து ஆளாக்கியவர். 

எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்ந்தவர். 
ஆடம்பர வாழ்க்கைக்கு 
அடிபணியாதவர். 

தமிழ்நாட்டின் முதலமைச்சராய் சிறப்புடன் பணியை செய்தவர். 

தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். 

ஆங்கிலத்தில் சிறந்து விளங்கியவர். 

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று கொள்கை உடையவர். 

அவர் இந்த பூ உலகை விட்டு மறந்தாலும்... 
பேரறிஞர் அண்ணாவின் புகழ் 
கடல் அலையாக ஒலிவீசிக்கொண்டுதான் இருக்கிறது. 

அண்ணாவின் நாவல்களையும், சிறுகதைகளையும் படித்து வாழ்வில் வெற்றி காண்போம். 


- இளம் சாதனையாளர். கவிஞர். ஜெ. கோகுல்., பி. எஸ். சி.,எம். சி., 
எம். எஸ். சி.
மேலபுலம் புதூர்.