உலக அமைதி தினம் கவிதை

உலக அமைதி தினம்

உலக அமைதி தினம் கவிதை

உலகம் சமநிலை பெற வேண்டும்!! உலகெங்கும் அமைதி நிலை நிலவ வேண்டும்!!

பெட்டிக் கடைகளிலும் பேதமில்லா !வேதமில்லா!நிலை வேண்டும்! வட்டிக்கடைகளிலும் ஒன்றாய் சேர்ந்து இருக்கின்ற பணம் போல!!

ஆசை துறந்த இதயங்கள் வேண்டும் !
அன்பு பெருகிய மனங்கள் வேண்டும்!

கல்வி கற்றுக் கொடுப்பதில் ஏற்றம் இறக்கம் பாராதநிலை வேண்டும்!

உலகத்தில் இயற்கைகள் எல்லாம் மாறவில்லை!
 உலக மக்களின் மனங்களே! மாறாதிருங்கள்!

இல்லாதவர்க்கு இருப்பவர்கள் கொடுக்கும் நிலையிலே உயருங்கள்!

பெற்றவர்கள் பெருமிதத்தோடு நன்றிகளை! வாழும் நாள் வரை மறவாதிருங்கள்!

அவரவர் வாழ்க்கையில் அமைதியை கடைபிடியுங்கள்! அன்பை நிலைத்திருக்கச் செய்யுங்கள் !

உலக அமைதி தினம் வாழ்த்துக்கள்!!

கவிதை மாணிக்கம்.