நன்றி தினம் கவிதை

உலக நன்றி தினம்

நன்றி தினம் கவிதை

உலகநன்றிதினத்தில்
உள்ளத்தில் நிறைந்தவளுக்கு நன்றி!!

ஆப்பிள் பொண்ணே நீ யாரோ!!
   ஐஸ் கீரீம்சிலையோ நீயாரோ!

   கண்ணில் தோன்றினாய்!
கனவில் கூடினாய்!
எண்ணில் உதயமானாய்!
என் உயிரோடு கலந்துவிட்டாய்!!

 ஆப்பிள் கனியென மரத்தின் மீதிருக்க!
ஆரும் தீண்டாது!
அணில் பிள்ளையும் தீண்டாது!

பறவைகளும் கொத்தாது!
பசும் கிளிகள் கூடகொத்தாது!

பார்த்துரசித்தேன் உன்னை! ஏறி
பழம் பறிக்கமுடியாத வறுமை முடவனானேன் கண்ணே!!

கண்டுரசித் தேன்! கவிதைபடைக்கும் கவிஞனானேன்!

மரத்தின்கிளையில் நீயும்!
மரத்தின் கீழே
விழுவாயென மடியேந்திநிற்க வில்லை!

மண்ணில் நீ வீழும்வரை!
மரம் கொத்தி பறவையென!
ஆப்பிள் கனியே! உன்னை அழகாய்
காத்திருந்து கவிதை படைப்பேன்!! கவிஞனென!

இளமையில் கூடிபிரிந்த இன்பம்!
முதுமை,
இடையில் தொடர்வதால் பேரின்பம்!!

எனக்குள், உனக்குள்
விடியல் தொடங்கி!
அடையும்வரை!!
இடைபடும் பணிகள் இருக்குது ஏராளம்!!

என்றாலும்,,! என்னையும், உன்னையும் இனைக்கும்‌!! குறுஞ்செய்திபகிர்வே
துன்பம் இல்லா குதுகலம்!

அன்று பார்த்துசிரித்த பௌர்ணமி நிலவென!!

இன்றும் மாறாது குறையாது
நட்பின் ஒளிவீசுகிறாள்,,!
என்றும் மாறாத பௌர்ணமிதங்க நிலவென!

 முகம்ஒருதாமரையே!
இதழ் இரு மாதுளையே!
 இவள் ஒரு இன்ப பூமழையே!

அவள் என்றும், என்றென்றும் என்னை!நனையவைக்கும் தேன் மழையே!

மனவலிகளெல்லாம்
தீரவைக்கும் மாயகாரி!!
மனபுன்னகையை மறைக்காது
முகத்தில் தெறிக்கவிட்ட ஒய்யாரி!!

முத்துக்களை பற்களாய் கோர்த்து!
முத்துக்களை இதழோரமாய் கொண்ட ஒய்யாரி!!

நீயே !நீயே!
தீயே !தீயே!
என் வாழ்வின் இன்ப ஒளி அலங்காரம் இல்லா அழகுசிங்காரி! நீயே
நீயே

என்னுள்மறைந்து வாழும்நட்பின் ஜீவன் நீயே!

நன்றி !நன்றி!
உலகநன்றிதினத்தில்
உள்ளம் இனித்த நன்றி!

கவிதை மாணிக்கம்