தமிழும் பாரதியும்...! 011

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

தமிழும் பாரதியும்...! 011

தமிழும் பாரதியும்

மூன்றிரண்டுவயது  முடிந்த கணமே  கவிமுனையத் துவங்கியவன்.     எட்டிரண்டுவயதில்  தகப்பனைஇழந்தும் _தமிழை வளர்ப்பு  தந்தையாக ஏற்று

பாரதத்தை தாயாகமதித்து    வளர்த்தோர்புகழ்  பரப்ப பலநூறுமுகங்களைப்பெற்ற  செந்தமிழ் தேனீ!!! பலமொழிகளைச் சுவைத்தும்    தமிழின்சுவை  வேறெங்கும்  காணோமென்றவன். தன்படைப்புகளைக் கொண்டு  அதன்  சுவையைஅதிகரித்து முழுமையான வாழ்க்கை  பாடத்தை   பாப்பாபாட்டிலே கற்ப்பித்து   தமிழைக்கொண்டே விடுதலைப்போர்புரிந்த  இவனை  சீர்திருத்த வாதிஎன்பேனா?போராட்ட வீரன்என்பேனா?  எழுத்தாளன் என்பேனா? இதழாசிரியன் என்பேனா? தேசிய கவிஎன்பேனா மகாகவிஎன்பேனா?புதுக்கவிதைக்கு வித்திட்ட தமிழ்வாதியாகியஇவனை  யாரென்று   அறிந்தீரோ ? -ஆம்  இவனே கலைமகளாகிய பாரதி.

-பெஹாஷினி.தே.ஆ.
இளங்கலை முதலாம் ஆண்டு.ஆங்கில இலக்கியம்.
எஸ்.என்.எம்.வி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி.கோயம்புத்தூர்.